25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சாமை வெஜிடபிள் புலாவ் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாமை வெஜிடபிள் புலாவ் .

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி -1 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்), பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் -3, பிரியாணி இலை -1, பட்டை, இலவங்கம், ஏலக்காய்-சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன், கரம் கரம் மசாலர் -1 ஸ்பூன், பீன்ஸ், கேரட், பட்டாணி, காலிப்ளவர், குடமிளகாய் எல்லா காய்கறிகளும் நறுக்கியது -1 கப், எண்ணெய் & உப்பு தேவையான அளவு

செய்முறை: 

ஒரு குக்கரில் எண்ணெய்ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், இலவங்கம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

ஊறவைத்த சாமை அரிசியை வடிகட்டி குக்கரில் சேர்த்து, 1 1/2 பங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவைத்து, குக்கரை மூடி வேகவைக்கவும்.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக 'வதக்கிக்கொள்ளவும்.

குக்கரில் 1 விசில் வந்ததும் திறந்து, வதக்கிய காய்கறிகளை அதில் சேர்த்து கலக்கவும். 5 நிமிடம் சூட்டில் மூடி வைத்து ஆவியில் ஊறவிடவும். பின்னர் கொத்தமல்லி இலையை தூவி சூடாக பரிமாறவும்.

இந்த சாமை வெஜிடபிள் புலாவ் லேசானதும், சத்தானதும் உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்ற உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி 'சாப்பிடக்கூடியது.

உடல் ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் மில்லெட் உணவுகள் மிகவும் முக்கியமானவை. அதில் சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள் மிக இலகுவாக ஜீரணமாகும் சத்தான உணவு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News