25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சுய சேவை பிரிவு அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 10 வகையான காய்கறிகள் ரூ.100/-க்கு விற்பனை செய்யும் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் (05.11.2026) தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு" ஒன்று ரூ.100/- என்ற சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளில் விற்பனை செய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய்  (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கோரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இதில் அடங்கும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு அரசின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் வாயிலாக குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களஉட்பட பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News