ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோம்பு -2 ஸ்பூன், ஏலக்காய்-10, சந்தனம் -3, பச்சை கற்பூரம் 1 சின்ன துண்டு, ஜவ்வாது - 4 ஸ்பூன், விரலிமஞ்சள்-2 இந்த பொருட்களை எல்லாம் போட்டு நைசாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை அரைக்கும் போதே நமக்கு இந்த பொடியின் வாசம் மனதை மயக்கும். இதை நீங்கள் ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கலந்து வைத்தால் பூஜை அறையில் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும் ஒரு நேர்மறை எண்ணத்தையும் தரும் நம் வீட்டிற்கு
அடுப்பின் முன் நின்று சமைக்கும் பொழுது உங்களுடைய வலது கை பக்கத்தில் உப்பு ஜாடியை வைக்க வேண்டும். உப்பை எட்டி எடுக்குமாறு வைக்காமல், கையெட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். உயரத்தில் இருக்குமாறு உப்பு ஜாடியைவைக்கக் கூடாது மண் மற்றும் பீங்கான் பாத்திரத்தில் உப்பை வைப்பது சிறந்தது பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரத்தை தவிர்ப்பது நல்லது.
1. போட்ட அழுக்கு துணியே, மீண்டும் மீண்டும் போடுவது வறுமையை உண்டாக்கும். 2. பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் மஞ்சள் உரைத்து பூசி குளித்து, கருப்பு மையில் பொட்டு வைத்து கொண்டால் காத்து கருப்பு அண்டாது. 3.அதிகமாக கிழிந்த துணிகளை, உபயோகிக்க கூடாது. இவை தரிதரத்தை உண்டாக்கும். 4. தரையில் கை ஊன்றி சாப்பிடக்கூடாது, இவை நம் சக்தி அனைத்தும் கீழே பூமாதேவி இழுத்து கொள்வாள். 5. கருட தரிசனம் கோடி புண்ணியம். நாம் கருடனை வானத்தில் அண்ணாந்து பார்ப்பது மிகவும் புண்ணியத்தை தரும். 6. பெண்கள் கைகளில் வளைகள் இல்லாமல் சாப்பாடு பரிமாறக்கூடாது .மற்றும் பூஜை அறையில் பூஜை செய்யக்கூடாது, இவை வறுமை உண்டாக்கும்.
தாம் உயிரோடு இருக்கும் பொழுது மட்டுமல்லாமல், நாம் இறந்த பிறகும் புண்ணியத்தை தரும் தானம் பசு தானம் மட்டும்தான்.பசுவை தானமாக செய்பவர்கள் இறந்த பிறகு சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்பது ஐதிகம்.முக்கியமாக கர்ப்பினியான பசுவை தானமாக கொடுத்தால் வைகுண்டத்தில் வாசம் செய்ய அனுமதி கிடைக்கும் ,என்று சாஸ்திரம் கூறுகிறது.நாம் தானம் கொடுக்கும் பொழுது மன தூய்மையுடன், ஒழுக்கத்துடன், முழு மனதுடன் கொடுக்க வேண்டும்.அப்போது தான் நாம் கொடுத்த தானம் நமக்கு நல்ல பலனை பெற்றுத் தரும்.
எவர் ஒருவர் தொடர்ந்து ருத்ர காயத்திரி மந்திரம் சொல்லி வருகிறாரோ அவர்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.ருத்ர காயத்ரி மந்திரம்:நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம
1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும். 2 வஸ்திர தானம் ஆயுளை விருத்தி செய்யும். 3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். 4 கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும். 5. தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும். 6 நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும். 7.தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும். & வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும். 9.தேன்தானம்-புத்திர பாக்கியம் உண்டாகும். 10 நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 11.அரிசி தானம்-பாவங்களைப் போக்கும். 12 பால் தானம்- துக்கம் நீங்கும்.. 13. தயிர் தானம் இந்திரிய விருத்தி ஏற்படும். 14 தேங்காய் தானம் நினைத்த காரியம் நிறைவேறும். 15.பழங்கள் தானம் புத்தியும் சித்தியும்கிட்டும்.
கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது-3 தலைமுறை. பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது- 5 தலைமுறை. கோவில் திருப்பணிக்கு உதவுவது-7 தலைமுறை. ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்வது - 9 தலைமுறை. அனாதை பிணத்திற்கு அந்திம கிரியை - 11 தலைமுறை கோசாலைக்கு உதவுவது, பசு பராமரிப்பு - 13 தலைமுறை. காசி, கயாவில் செய்யப்படும் தர்ப்பணம் -16 தலைமுறை. பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் 27 தலைமுறை.
பெண்கள்வாசல் தெளிக்கும் முன், பல் விலக்கி முகம் கழுவி குங்குமம் வைத்துக்கொண்டபிறகு தான் தலை வாசலில் சாணம் அல்லது தண்ணீர் தெளிக்கவேண்டும்.வாசலில்தெளிக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும் .பல பேர் துணிதுவைத்த தண்ணீர், வெகு நாட்களுக்கு முன்பு சேமித்த தண்ணீர் போன்றவற்றை தலைவாசலில் தெளிப்பார்கள்.அவ்வாறு கண்டிப்பாக செய்யக்கூடாது.தலைவாசலில் பசு சாணம் கரைத்து தெளிக்கலாம் .அவ்வாறு இயலாத பட்சத்தில் சிறிது மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை தண்ணீரில் கலந்து தெளிப்பது நல்லது.
வீட்டுக்கு முன் வேப்பமரம்.பக்கத்தில் ஒரு முருங்கைமரம்.வெளியே பப்பாளிமரம் இருக்க வேண்டும்.குளிக்கும் தண்ணீர் போகும் இடம் வாழை மரம் இருக்க வேண்டும்.பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னைமரம் இருக்க வேண்டும்.ஒரு எலுமிச்சை மரம் அவசியம்,அதன் நிழலின் கீழ் பகுதியில் கறிவேப்பிலைச் செடி இருக்க வேண்டும்.ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்.ஒரு மாமரம் வைக்க வேண்டும்.இப்படி இருந்தால் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்.
கண்ணாடி எந்த ஒரு விஷயத்தையும் , அப்படியே பிரதிபலிக்கும் அதாவது நாம் சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழுகும்.அப்படிப்பட்ட கண்ணாடியை நாம் படுக்கை அறையில் வைத்தால், நாம் தூங்கும் பொழுது அல்லது சண்டை நடக்கும் பொழுது அதை அப்படியே நாம் வீட்டில் பிரதிபலிக்கும்.ஆகையால் அது நமக்கு எதிர்மறை ஆற்றலை உண்டு பண்ணுவதோடு, வீட்டில் செல்வ செழிப்பையும் குறைக்கும். எனவே படுக்கை அருகில் கண்ணாடியை தவிர்ப்பது நல்லது.