25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


அழகுக் குறிப்பு

Dec 12, 2025

சரும அரிப்பு நீங்க….

சிலருக்கு சதா உடலில் அரிப்பு குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும். இதற்கு காரணம்  சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறட் சியாக காணப்படுவதுதான். இதற்கு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு  ஈரப்பதம் மூட்டும் கிரீம்கள்  அல்லது மாய்ஸரைசரை பயன்படுத்த அரிப்பு நீங்கி  தூக்கம் கெடாமல் இருக்கும். அல்லது வீட்டு வைத்தியமாக சந்தனத் தூளுடன் பன்னீர் கலந்து குழைத்து உடலில் தடவி வர அரிப்பு காணாமல் போகும்.அத்துடன் பருத்தி ஆடைகளை அணிவதும்  நல்ல பலன் தரும்.

Dec 09, 2025

வெடிப்புகள் மறைந்து பாதம் பளபளக்க…

ஒரு பாத்திரத்தில் வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து ,அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்து சுத்தமாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பாத வெடிப்புகள் மறைந்து பாதம் பளபளக்கும்.

Dec 05, 2025

முகம் பளிச்சென்று மாற....

இரண்டு ஸ்பூன் பாலுடன் 1/4 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 15.நிமிடம் அல்லது 20 நிமிடம் கழித்து ஈரத்துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு, தண்ணீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். ஆரம்பத்தில் முகம் எண்ணெயாக இருப்பதுபோல் இருக்கும். ஆனால், சில நேரம் கழித்து முகம் பளிச்சென்று மென்மையாக மாறிவிடும். இதேபோல், இரண்டு முறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

Dec 02, 2025

கருவளையம் மறைய....

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் துாள், எலுமிச்சைச் சாறு, ஒரு மேஜைக்கரண்டி பால் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் மிருதுவாகும்.பாதியாக நறுக்கிய ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஐந்து துண்டுகள் சேர்த்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் சிறிது கடலைமாவுசேர்த்துகலந்து, முகத்தில்பூசி,30 நிமிடம்ஊறவைத்துகழுவலாம்.இதனால், சருமத்தில்உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாகும். இதை,வாரம் ஒருமுறை செய்யலாம்.கருவளையத்தைப்போக்க,பூசணிசிறந்தமருந்தாகும்.பூசணிக்காயைசிறுதுண்டுகளாக்கி, அதைகண்களைசுற்றிவைத்தால், கருவளையம் மறையும்.

Nov 24, 2025

முடி வளர்ச்சியை அதிகரிக்க வேம்பாளம் பட்டை எண்ணெய்.

வேம்பாளம் பட்டையானது பெண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மற்றும் இது முடி உதிர்வதையும் தடுக்கிறது.வேம்பாளம் பட்டை எண்ணெய் எப்படி தயாரிப்பது?தேங்காய் எண்ணெய் - 1கப்விளக்கெண்ணெய் - 1/4 கப்சிறிய வேம்பாளம் பட்டை - 2செய்முறை:இந்த எண்ணெய்யை செய்ய முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து 2 முதல் 3 நாட்கள் சூரிய ஒளியில் படும் இடத்தில் வைக்க வேண்டும். 3 நாட்கள் கழித்து எண்ணெயின் நிறம் சிவப்பு வண்ணத்தில் மாறி இருக்கும். நீங்கள் அதனை பயன்படுத்தும் முன் தேவையான அளவு எடுத்து சூடாக்கி பயன்படுத்தவும்.உடல் ஆரோக்கியத்திற்கு வேம்பாளம் பட்டை: சருமம் பொழிவு பெற சரும தொற்றுகள் வராமல் தடுக்க அழற்சி எதிர்ப்புத் தன்மை தீக்காயங்களை விரைவில் ஆற வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் நாள்பட்ட இருமல் குணமாக சிறுநீரகக் கற்கள், மஞ்சள் காமாலை, எலும்பு முறிவு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேம்பாளம் பட்டை, பெருங்காயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடியாக எடுத்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயம் இருக்கும் இடத்தில் போட்டு வந்தால் அவை விரைவில் ஆறும்.

Nov 15, 2025

உதடு வெடிப்புக்கு.....

உதட்டில் வெடிப்பு மற்றும் உதடு வறண்டு பொலிவில்லாமல் இருப்பதற்கு காரணம், போதிய எண்ணெய் பசை இல்லாதது தான். சிலருக்கு உதட்டில் தோல் உரிந்து ரத்தம் கூட வரும். இதற்கு நெய் மிகச்சிறந்த மாய்ஸ்ரைராக செயல்படும். நெய்யை சிறிது எடுத்து ,உதட்டில் தடவி சிறிது நேரம் வைத்திருக்க, வெடிப்புகளும் வறண்ட உதடு காணாமல் மறைந்து பளபளக்கும்.

Nov 12, 2025

தொப்பை குறைய....

2 வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பானம்.  தொப்பையை குறைக்க இந்த பானம் உதவுகிறது.தொப்பை மற்றும் வயிற்றை சுற்றி உள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி லவங்க பட்டைக்கு உண்டு, முதல் நாள் இரவே பட்டையை ஊற வைத்து,காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தொப்பை மற்றும் உடல் எடை குறையும். தினமும் மாலை நேரத்தில் கண்டிப்பாக பட்டை குடிப்பது தொப்பையை குறைக்க உதவும்.பட்டையை 3 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி.அந்த நீரை கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் தொப்பை கரையும் .தனியா மற்றும் லவங்கப்பட்டை இரண்டையும் நீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் இரண்டே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.

Nov 11, 2025

முடி வலுவாக…

வாழைப்பழம் எலுமிச்சை சாறு முட்டை வெள்ளை கரு ஆகியவற்றை கலந்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு சுத்தமாக இருக்காது முடி உதிர்வும் இருக்காது... ஆலிவ் ஆயில் தயிர் முட்டை வெள்ளை கரு எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் முடி வலுவாக இருக்கும் முடி உதிர்வும் குறைந்துவிடும். செம்பருத்திப் பூவை வெயிலில் காயவைத்து உலர்த்தி தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை ஒழிவதுட நன்கு தலை முடியும் வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும் மேலும் கண்களும் உடலும் குளிர்ச்சி அடையும்.

Nov 05, 2025

உடல் எடையை குறைக்க  கேரட் ,பீட்ரூட் ஜூஸ் .

இதில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் பசியை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் கேரட் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உங்களை நீரோட்டமாக வைத்துக் கொள்ள உதவும். இதனால் கோடையில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கலாம் .சிறு நீர் பையில் கழிவுகள் தேங்குவதால் சிறுநீர் கழிப்பது சிறப்பு ஏற்படலாம். இதற்கு கேரட் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது பயன் தரும் இதைக் குடித்து வர சிறுநீர் எளிதில் வெளியேறும். பீட்ரூட்டில் இரும்பு சத்து நிறைந்துள்ளது இது கண் பார்வையை மேம்படுத்த உதவும். மேலும் கேரட்டில் உள்ள வைட்டமின் சி கண்களுக்கு அதிக நன்மைகளை தரும் பீட்ரூட் மற்றும் கேரட ஜூஸ் குடித்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கி சரும பொலிவு அதிகரிக்கும், இதனால் தெளிவான பளபளப்பான சருமத்தை பெறலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் கோரட் மற்றும் பீட்ரூட் ஜூசை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

Nov 03, 2025

சருமத்தை மென்மையாக பராமரிக்க …

பெண்கள்அனைவரும்பொலிவான, ஆரோக்கியமானசருமத்தைவிரும்புவார்கள்.ஆனால்காலநிலைமாற்றம்சருமத்தின்தன்மையையும் பாதிக்கக்கூடும். சருமத்தை பராமரிக்க,சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம். குறைந்தது SPF 15 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன் தினமும் பயன்படுத்த வேண்டும். இது புற ஊதாக்கதிர்கள் உண்டாக்கும் பாதிப்புகளை குறைத்து, சருமத்தின் முதுமை தோற்றத்தை தடுக்க உதவும். வெயில், மழை, குளிர் எந்த பருவ நிலையாக இருந்தாலும் சன்ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்துவது முக்கியம்.தண்ணீர் பருகுவது சருமத்திற்கு நன்றாக உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதும் சரும ஈரப்பதத்தை தக்க வைத்திடும். பழங்கள், காய்கறிகள், புரோபயாடிக் உணவுகளை உட்கொள்வது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்கும்.தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை போன்ற இயற்கை பொருட்கள் சரும பொலிவை அதிகரிக்க உதவுகின்றன. முகத்திற்கு தயிர் பூசுவதும், நேராக கற்றாழை ஜெல் பயன்படுத்துவதும் நல்ல பலனை தரும். சிலருக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடியதால், புதிய பொருட்களை பயன்படுத்தும் முன் சிறிதளவு பரிசோதித்து பார்க்க வேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 22 23

AD's



More News