25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அழகுக் குறிப்பு

Jul 11, 2025

 தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்

தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும். தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவிப் பிடிப்பது மிகவும் நல்லது, இவ்வாறு செய்வதினால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது. இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசனை பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணையை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றிஇருக்கும்.

Jul 04, 2025

கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் மகிழம்பூ

கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது மகிழம்பூ என்றே சொல்லலாம். வேனல் கட்டி  சூடுகட்டி, உஷ்ணகட்டி, போன்ற அனைத்தையும் நீக்க ஒரு கைப்பிடி மகிழம் பூவை நீர் விட்டு அரைத்து அப்படியே முகத்திலும், உடலில் கட்டிகள் இருக்கும் இடத்திலும் தடவி காய்ந்ததும் குளித்து வர கட்டிகள் காணாமல் போகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.

Jun 30, 2025

தலை முடி பிரச்சனைக்கு..

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும்.முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர முடி வளரும்.பூசனிக்கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து சாறு எடுத்து கசக்கி சாறுஎடுத்து தலையில் தடவி வர சொட்டையில் முடிமுளைக்கும்.

Jun 23, 2025

சுத்தமான பற்களுக்கு….

அன்னாசி பழத்தைக் கடித்து சாப்பிட, அதில் உள்ள 'bromelain' பற்களை வெண்மையாக்கும்."சார்கோல் பவுடரால்" வாரம் இருமுறை பல் தேய்க்க வேண்டும்.சாக்லேட், சர்க்கரை, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆயில் புல்லிங், வாழைப்பழத் தோலால் பற்களில் மசாஜ் செய்வது நல்லது.(தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் இதைச் செய்யலாம்)எலுமிச்சை தோலால் பல தேயக்க பற்கள் சுத்தமாகும்.உப்பு கொண்டும் பல் தேய்க்க வேண்டும்.

Jun 21, 2025

கண் கருவளையங்கள் நீங்க..

உருளைக்கிழங்கை மெல்லிய வில்லைகளாக நறுக்கி கண்ணுக்கு கீழ் பகுதியில் சிறிது நேரம் வைத்து கழுவி விடலாம் அல்லது உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் அடித்து கண்ணுக்கு கீழ் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கருவளையம் நீங்கி விடும்.

Jun 17, 2025

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க செம்பருத்திபூ...

தங்க பஸ்பம் என்று சொல்லப்படும் இதை  உள்ளுக்குள் எடுப்பதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெறலாம். பூ, இலை இரண்டுமே சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.முழுமையான செம்பருத்தி பூவை காய வைத்து பொடித்து கொள்ளவும்.செம்பருத்திபூ பொடி_3 ஸ்பூன், பாசி பயறு மாவு__3 ஸ்பூன், பால் தேவைக்கு.இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி ஈரப்பதம் சீராக இருக்கும் சருமம் புத்துணர்ச்சியுடனும், முகத்தில் தனி அழகும் இருக்கும்.

Jun 16, 2025

புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கும் நலங்கு மாவு.

கோடை காலங்களில் வியர்வை துர்நாற்றம் பொது இடங்களுக்குச் செல்ல சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு நலங்கு மாவு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நறுமணத்தை ஏற்படுத்தும் பல மூலிகைகளை சேர்த்து அரைத்து உபயோகிப்பதால் புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கிறது. முகப்பருக்கள் குறைவதுடன் நாளடைவில் மறைந்து போகும். இது காய்ந்த ரோஜா, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு, கார் போக அரிசி, முல்தானி மெட்டி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, புலாங்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்த இந்த நலுங்கு மாவை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும்தேய்த்து குளித்தால் தொற்றுக்களை தடுத்து உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

Jun 14, 2025

பித்த வெடிப்பு குணமாக...

 விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

Jun 02, 2025

நகத்தின் கருமை மறைய...

நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால், துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டு வந்தால், விரைவில், நகத்தின் கருமை மறையும்.

Jun 01, 2025

இளமையாகத் திகழ...

எல்லோருக்கும் இளமையாகத் திகழ வேண்டும் என்பது ஒரு சாதாரண விருப்பமாகும். சிலர் தோல் சுருங்கி முதுமை தோன்றக் கூடாது என நினைக்க, சிலர் உடல் வலிமை குறையாமல் இருக்க வேண்டும் என முயற்சிக்கிறார்கள். முதுமையை முழுவதுமாகத் தவிர்க்க முடியாது, உடலளவில் சுறுசுறுப்பாக இருக்கவும், சருமத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கவும் சில வழிகள் உதவலாம்.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கப்படும5-6 பாதாம், 2 வால்நட் போன்ற பருப்புகளை காலை உணவில் சேர்த்துக் கொள்வது, சருமத்திற்குத் தேவையான கொழுப்புக்களைவழங்கும்.  இரவில் படுக்கும் முன், 5 சொட்டு ஆளிவிதை எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, இளமையாகத் தோன்றஉதவும்.  தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்கும் பழக்கத்தை உட்படுத்தவும். உடலில் தேவையான நீர்ச்சத்தைக் குறைக்காமல் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் நச்சுகளை வெளியேற்றலாம். சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தால், முதுமையிலும் இளமையாக தோன்ற முடியும்!

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 25 26

AD's



More News