தலைமுடி வறண்டு போயிருந்தால், தயிர் மற்றும் தேனில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். தயிரில் புரோட்டீன் மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மாய்ஸ்சரைசிங் பண்புகள் இருப்பதால் முடியை பட்டுப் போல் ஆக்குகிறது. முதலில் உங்கள் தலைமுடியை சிக்கு இல்லாமல் சீவவும்.ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். பின், இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.இப்போது இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் அதை தலைமுடியில் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, ஷாம்பூவுடன் முடியை சுத்தம் செய்யவும்.இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.
சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதன் மூலம், இது சிறந்த சரும சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. நமது உடலுக்குள்ளும் ஊடுருவி, இளமையைப் பேணும் பணிகளையும் செய்வதால், சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கிறது.நச்சு நீக்கும் தன்மை கொண்டிருப்பதால், கோதுமைப்புல் பொடியானது பருக்கள் உண்டாவதைத் தடுத்து, மென்மையான வழவழப்பான சருமத்தினை அளிக்கிறது. கோதுமைப்புல் பொடியுடன் சிறிது பால் சேர்த்து பசை போலாக்கி, சருமத்தின் மீது தடவிக் கொள்வதால், பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், சரும நிறம் மங்குதல் ஆகியவை மறையும்.
ஃப்ரீ ராடிகல்களினால் ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது. முதிர்ந்த செல்களைப் புத்துயிரூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால், முதுமையைத் தடுக்கும் ஆற்றல் பெற்று, இளமையைப் பேண உதவுகிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.நரைத்துப் போன தலைமுடியின் நிறத்தை மாற்றி, பழைய படி கருமையாக்கும் தன்மை கோதுமைப்புல் பொடிக்கு உண்டு. இந்த பவுடரைத் தலை முடியில் தடவிக் கொண்டு, குளித்து வந்தால், நரைமுடிகள் கருமையாகும்கோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும். ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கோதுமைப்புல் பொடியைக் கலந்து, தலையில் தடவிக் கொண்டு குளித்துவரலாம். இதனால், ஆரோக்கியமற்ற தலைமுடியை நல்ல ஆரோக்கியத்துடன் திகழும்.
சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்களில் கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இது ஒரு நோய் அல்ல, சிறிய மச்சம் போல் ஆரம்பித்து முகத்தில் வேகமாக பரவிவிடும்.பொதுவாக 20-35 வயதுள்ளவர்களுக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்சனையாக இருந்தாலும், சிலருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வரலாம்.5-7 பாதாமை நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, மைய அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு நீரில் முகத்தை கழுவவேண்டும், தேனும், பாதாமும் சேர்ந்த கலவை வெகு சீக்கிரத்தில் மங்கு மறைந்து விடும்.ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து சம அளவு எடுத்து நீர்விட்டு மைய அரைத்து, முகத்தில் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசை போல் தடவவும், காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும், சில முறை இதை செய்து வந்தால், கருப்பு திட்டுகள் மறையும்.1 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் ஓட்ஸ், இவற்றை பேஸ்ட் போல் செய்து , சருமத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் மீது நன்றாக தேய்த்து காய்ந்தபின் கழுவவும், வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து அதில் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பளபளப்பு கிடைக்கும்
* உருளைக்கிழங்கை தோல் சீவிய பின் தேங்காய் போல துருவி கண்களை மூடி அதில் வைத்து மேல் ஒரு துணியுடன் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.*உருளைக்கிழங்கை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்டாக கண்களின் மேலும், கீழும் அப்ளை செய்யலாம்.*உருளைக்கிழங்கு சாறை இரவில் தூங்குவதற்கு முன் கண்களின் மேலும். கீழும் தடவிவிட்டு படுக்கலாம்.*உருளைகிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.
.தினந்தோறும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், பருக்கள் வராமல் தடுக்கும்.சந்தன பௌடருடன் சிறிது பன்னீர் சேர்த்து கலந்து பருவின் மேல் வைத்து உலர்ந்தவுடன் கழுவி வாருங்கள்.சில நாட்களிலேயே பரு மறைந்துவிடும்.இரவில் நன்றாகத் தூங்க வேண்டும் சரியாகத் தூங்காவிட்டால் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம்.கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் தவிர்ப்பது, பருக்கள் வராமல் தடுக்கும். தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயைக் குறைத்தாலே பருக்களும் குறைந்துவிடும்.ஜாதிக்காயை உரசி பருக்கள் மேல்தொடர்ந்து நான்கு நாட்கள் தடவி வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று ஆகிவிடும்.
சுருள் சுருளாக இருக்கும் தலைமுடியினை நேராக்க இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்கள் கொண்டு செய்யலாம்.ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு ஸ்பூன் பால் மற்றும் போதுமான அளவு சேம்பு சேர்த்து கூந்தலுக்கு ஸ்ப்ரே அடிப்பது போல் பயன்படுத்தி பின்னர் தலைக்கு குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.இரண்டு முட்டையுடன் போதுமான அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கூந்தலுக்கு தடவி சுமார் 20 நிமிடங்கள் உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்துவிட நல்ல மாற்றம் தெரியும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கும் நிலையில் இந்த வாழைப்பழத்தை கூந்தலுக்கு ஹேர் பேக் போல் பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், முட்டை ஒன்றை சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தவும். 30 நிமிடங்கள் விட்டு, குளிர்ந்த நீரில் குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.கால் காப் அரிசி மாவுடன் முட்டை ஒன்று, முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, கூந்தலுக்கு பன்படுத்தவும். ஒரு மணி நேரத்திற்கு பின் கூந்தலை சுத்தம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் கற்றாழை ஜெல்லினை மிதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து அரைத்து கூந்தலுக்கு பயன்படுத்தவும். பின், 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவிடவும்.ஒரு ஸ்பூன் தேங்காய் பாலுக்கு கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு என கலந்து கூந்தலுக்கு ஸ்ப்ரே போல் பயன்படுத்தவும் பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க நல்ல பலன் கிடைக்கும்2 ஸ்பூன் தயிருக்கு 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் வாழைப்பழ திப்பை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
நாம் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் தலைகாணி உறை மற்றும் சீப்பு ஆகியவை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.ஒரு சிலருக்கு தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதால் பொடுகு பேன் ஈறு ஆகியவை வந்துவிடும். பொடுகு என்பது மற்றொரு தலையில் இருந்து இன்னொரு தலைக்கு தொற்றிக் கொள்ளும் ஒரு பூஞ்சை தொற்று. தேவையான பொருட்கள்:வேப்பிலை ஒரு கைப்பிடி,செம்பருத்திப்பூ நான்கு,வெந்தயம் ஒருஸ்பூன்,இஞ்சி ஒரு துண்டு.செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து போட்டுக் கொள்ளவும். வேப்பம் பூ இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.மிகவும் நல்லது. பின் அந்த தண்ணீரில் நான்கு ஐந்து செம்பருத்திப் பூவை போட்டுக் கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட்டு அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு நன்கு சூடு ஆற்றிக் கொள்ளவும். இதை பஞ்சில்நனைத்துவேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடவும்.அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு தலையைக் கழுவி விடவும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு, பேன், ஈறு ஆகியவை நிச்சயமாக நீங்கிவிடும்.
முகத்தை பராமரிப்பதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அதே போல் பாதங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் கள பாதங்களை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.எலுமிச்சம் பழத் தோல் கொண்டு பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, கிருமிகளை அழிக்கிறது. இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.தினமும் இரவில் படுக்கும் முன், ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் ஷாம்பு போட்டு, கால்களை 5 முதல் 10 நிமிடம் வைத்து பின் பிரஷ் மூலம் சுத்தம் செய்யவும்.பின் ஒரு காட்டன் டவலால் பாத ஈரங்களை துடைத்து, நல்லெண்ணெயை சிறிது சூடாக்கி, பாதங்களில் தடவலாம். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்யலாம்.மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் பாத வெடிப்புகள் நீங்கும்.உருளைக்கிழங்கை உலர்த்தி மாவு போல் அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதங்கள் பளபளக்கும்.பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமென்றால், பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் 5 நிமிடம் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.