ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி.
கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு ,ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகா தேவ அஷ்டமி, சிறப்பு வழிபாடு அங்க பிரதட்சணம் நடந்தது.
காலையிலிருந்து, தொடர் பஜனை, யாக பூஜைகள் ,தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
புத்திர பாக்கியம், திருமணதடை விலக வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் பலர் அங்க பிரதட்சணம் செய்தனர். அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
0
Leave a Reply