உலக மக்கள் தொகையில் 16 சதவீதம், 130 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால், பல துறைகளிலும் சாதிக்கின்றனர். இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுதல், அவர்களுக்கான அடிப்படை உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச.,3ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சிவபெருமான் அக்னி வடிவமாக ஆதியும் அற்று அந்தமும் அற்று திருவண்ணாமலையில் உருவெடுத்தாக வரலாறு கூறுகிறது. அதனால் அந்த நாளை ஒவ்வொரு ஆண்டு திருக்கார்த்திகையாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் 2025 பரணி தீபம் ஏற்ற உகந்த நேரம்.இந்த வருடம் பரணி நட்சத்திரம் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை ஆறு இருபத்து நான்கு மணிக்கு தொடங்கி ,மறுநாள் நான்கு நாற்பத்தி ஏழு மணிக்கு முடிகிறது. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை அன்று தொடங்குகிறது இந்த தெய்வீக நாள்.இந்த நாளில் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் ஐந்து விளக்கு ஏற்ற வேண்டும். கட்டாயம் ஐந்து விளக்கு தான் ஏற்ற வேண்டும் வீட்டில்.பாவத்தை போக்கும் பரணி தீபத்தை வீட்டில் ஏற்றும் முறை, அன்று வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் விளக்கும் ஏற்ற வேண்டும். அதோடு தனியாக ஒரு தாம்பாளத்தில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் ,என்பதால் திசை கணக்கு கிடையாது.நம்முடைய வாழ்க்கையில் செய்த சின்னச் சின்ன பாவங்கள் கூட நம்மை விட்டுப் போவதற்காக வேண்டி ஏற்றக்கூடிய தீபம்தான் பரணி தீபமாகும்.கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று (டிசம்பர் 2. 2025) ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம்.எமதர்ம ராஜனுக்கு மிகவும் பிரியமான பரணி நட்சத்திரத்தில் நாம் வாழும் காலமும், வாழ்க்கைக்குப் பிறகும் துன்பம் இல்லாமல் இருப்பதற்காக இந்த தீபம் ஏற்றப்படுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ. 14, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைகள்.அன்றைய தினத்தில் மட்டும் குழந்தைகளைப் பற்றி பேசி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிவிட்டு, நம்மில் பலர் கடந்து சென்று விடுகிறோம். குழந்தைகளை கொண்டாட மறந்து விடுகிறோம். குழந்தைகளை ஒரு நாள் மட்டும் அன்று எல்லா நாட்களும் கொண்டோடுவோம். குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள். அவர்களை உடைத்து விடாமால், பக்குவமாய் உடன் பயணித்து வழிநடத்து வோம்.குழந்தைகளை, குழந்தைகளாக இருக்க அனுமதிப்போம். அவர்கள் நன்றாக விளையாடட்டும். சிரிக்கட்டும், கேள்விகள் பல கேட்கட்டும். வரைவது பிடித்தால் வரையட்டும், நடனம் பிடித்தால் ஆடட்டும். அவர்களுக்கு தேவையானதை அவர்களிடம் கேட்டறிந்து கொடுப்போம். எதையும் குழந்தைகள் மீது திணிக்காமல் இருப்போம்.பல குழந்தைகள் படிப்பதையும், கலை, விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதையும் சுமையாக நினைத்து மகிழ்ச்சியின்றி இருக்கின்றனர். அந்த நிலையை மாற்றிடுவோம்.இந்த குழந்தைகள் தினம் அர்த்தமானதாக மாற, குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நின்றிட வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவும்கிடைக்க வேண்டும். போரினால் மரித்து போகும் மழலைகளின் உயிர் காக்கப்படவேண்டும்.
தீபாவளி என்றால் "தீபங்களின் வரிசை அல்லது"விளக்குகளின் திருவிழா என்று அர்த்தம்.இது இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாகும், மேலும் தீமையை அழித்து நன்மையை வரவழைக்கும் வெற்றியைக் குறிக்கிறது. பல நூற்றாண்டுகள் பழமையான இத்திருவிழா, இந்து மதத்தின் முக்கிய பண்டிகையாகும்தீப என்றால் விளக்கு மற்றும் "ஆவளி என்றால் வரிசை அல்லது தொடர்என்பதால், தீபங்களின் வரிசைஎன்று பொருள்படும். தத்துவம் - இது இருள் மற்றும் தீமையை அகற்றி, ஒளி மற்றும் நன்மையை வரவேற்கும் பண்டிகையாகக் கொ ண்டாடப்படுகிறது.நரகாசுரனை கிருஷ்ணர் வதம்செய்த தினமாக இது அனுசரிக்கப்படுகிறது.எனவே இதை“நரக சதுர்த்தசி" என்றும் அழைப்பதுண்டு.
இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள்ஜனாதிபதி, அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக். 15 உலக மாணவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பொன்மொழிகள் . நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்! “ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகின்றான்" . ."கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான்புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.” "கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.” மாணவர்களே இளைஞர்களே விடை பெறுகிறேன்..நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது உங்கள் கடமை.
ஆயுதத்தால் வெல்ல முடியாததை அகிம்சையால் வென்றவர். அகிம்சையிலும் சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது. குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம். இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும், மனநிலைதான் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக, கடைசி வரை அறவழி போராட்டத்தில், உறுதியாக இருந்து சுதந்திரம் கிடைக்க பாடுபட்டார். வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்த இவர் ,விவசாயிகளின் வறுமையை பார்த்து அரையாடை மனிதராக மாறினார். இது அவரை மகாத்மாவாக உயர்த்தியது. கொல்லாமை. துன்புறுத்தாமையை அடிப்படையாகக் கொண்ட அகிம்சை தத்துவத்தை பின்பற்றிய இவரது பிறந்த தினமான அக்., 2. ஐ.நா.. சார்பில் உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2025 ஆயுதபூஜை தேதி. திதி நேரம் பூஜை செய்ய விஜய முகூர்த்தம்...ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு புதன்கிழமை கொண்டாடப்படுகிறதுநவமி திதி செப்டம்பர் 30ஆம் தேதி ,செவ்வாய்க்கிழமை மாலை 06.06 மணிக்கு தொடங்கி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி புதன்கிழமை மாலை 7.01 மணி வரை உள்ளதுஆயுத பூஜை விஜய முகூர்த்த நேரம் அக்டோபர் 1ஆம் தேதி புதன்கிழமை 2.28 மணி முதல் 3.16 வரை ஆயுத பூஜை செய்ய விஜய முகூர்த்த நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜை தொழில் வளர்ச்சியை கொடுக்கும் வெற்றியை கொடுக்கும்.
1980 ம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவதில் முக்கிய பங்காற்றும் சுற்றுலா.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெறும் பங்காற்றும் சுற்றுலா.செப்டம்பர் 27- ம் தேதி உலக சுற்றுலா தினம் பின்பற்றப்படுகிறது.
1951 செப். 23ல் காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிப்படுத்துவது ஆகும். இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. உலகில் காது கேளாதவர்களாக 7 கோடி பேர் உள்ளனர். இதில் 80 சதவீதம்பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள்பயன்பாட்டில் உள்ளன.