25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இன்றைய தினம்

Oct 02, 2025

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

ஆயுதத்தால் வெல்ல முடியாததை அகிம்சையால் வென்றவர். அகிம்சையிலும் சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது. குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம். இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும், மனநிலைதான் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.  இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக,  கடைசி வரை அறவழி போராட்டத்தில், உறுதியாக இருந்து சுதந்திரம் கிடைக்க பாடுபட்டார். வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்த இவர் ,விவசாயிகளின் வறுமையை பார்த்து அரையாடை மனிதராக மாறினார். இது அவரை மகாத்மாவாக உயர்த்தியது. கொல்லாமை. துன்புறுத்தாமையை அடிப்படையாகக் கொண்ட அகிம்சை தத்துவத்தை பின்பற்றிய இவரது பிறந்த தினமான அக்., 2. ஐ.நா.. சார்பில் உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

Oct 01, 2025

2025 ஆயுதபூஜை தேதி. திதி நேரம்

2025 ஆயுதபூஜை தேதி. திதி நேரம் பூஜை செய்ய விஜய முகூர்த்தம்...ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு புதன்கிழமை கொண்டாடப்படுகிறதுநவமி திதி செப்டம்பர் 30ஆம் தேதி ,செவ்வாய்க்கிழமை மாலை 06.06 மணிக்கு தொடங்கி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி புதன்கிழமை மாலை 7.01 மணி வரை உள்ளதுஆயுத பூஜை விஜய முகூர்த்த நேரம் அக்டோபர் 1ஆம் தேதி புதன்கிழமை 2.28 மணி முதல் 3.16 வரை ஆயுத பூஜை செய்ய விஜய முகூர்த்த நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜை தொழில் வளர்ச்சியை கொடுக்கும் வெற்றியை கொடுக்கும்.

Sep 27, 2025

செப்டம்பர் 27 ம் தேதி உலக சுற்றுலா தினம்.

1980 ம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவதில் முக்கிய பங்காற்றும் சுற்றுலா.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெறும் பங்காற்றும் சுற்றுலா.செப்டம்பர் 27- ம் தேதி உலக சுற்றுலா தினம்  பின்பற்றப்படுகிறது.

Sep 23, 2025

காது கேளாதவர்களுக்கு சைகை மொழி தினம்.

 1951 செப். 23ல் காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிப்படுத்துவது ஆகும். இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. உலகில் காது கேளாதவர்களாக  7 கோடி பேர் உள்ளனர். இதில் 80 சதவீதம்பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள்பயன்பாட்டில் உள்ளன.

Sep 21, 2025

எத்தனையோ பறவைகள் இருக்க, மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும்?

மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும் என மஹாபெரியவரிடம் கேட்டார் ஒருவர்."தன் குரலையே பெயராகக் கொண்டது காகம். 'மியாவ்' என கத்தும் பூனையையும், 'கிக்கி' எனக் கத்தும் கிளியையும் நாம் அப்படி அழைப்பதில்லை. ஆனால் 'கா' எனக் கத்தும் இதை மட்டும் 'காகம்' என்றே அழைப்பது ஏன் தெரியுமா.? கா' என்றால் 'காப்பாற்று'. அதற்கு உணவிடும் போது, 'கா... கா...' என சத்தமிடுகிறோம். அதாவது முன்னோரை அழைத்து எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம். எங்கும் இருக்கும் பறவையான காகத்தை தேட வேண்டியதில்லை. அறிவும், அழகும் கொண்ட அப்பறவை அதிகாலையில் விழிப்பதோடு, நம்மையும் எழுப்புகிறது. அது ஒருபோதும் தனியாக உண்ணாது. உணவு கிடைத்தவுடன் மற்ற  காகத்துடன் பகிர்ந்துண்ணும். சூரியன் மறைந்ததும் இருப்பிடத்திற்கு சென்று  ஓய்வெடுக்கும். இரவில் (இரவு 7:00 மணிக்குப் பின்) உண்ணக் கூடாது என வேதம் அறிவுறுத்துகிறது. இதை நாம் கடைபிடிக்கிறோமா... இல்லையே... முன்னோரின் அறிவுரையை நமக்கு எடுத்துச் சொல்கிறது காகம்.நாம் உணவிடும் போது காகம் மகிழ்கிறது. அது உண்பதைக் கண்டு நாமும் மகிழ்கிறோம். இந்நிலையில் 'இருவருமே கடவுள்' என்கிறது அத்வைதம். இப்படி தத்துவத்தையும் காகம் நமக்கு உணர்த்துகிறது. அதற்கு உணவிடச் சொன்ன நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. 

Sep 15, 2025

தேசிய இன்ஜினியர் தினம்.

புள்ளியியல் நிபுணர், சிவில் இன்ஜினியருமான கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யாபிறந்த நாள் (செப்., 15) தேசிய இன்ஜினியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1955ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசின்சில கல்வி நிறுவனங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டில்அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஜினியர்களின் பணி மகத்தானது.

Sep 05, 2025

மலையாள நண்பர்களுக்கு திருவோணம் நாளன்று ஓணம் வாழ்த்துக்கள்.

கேரள மக்களின் தீபாவளி என போற்றப்படும் ஓணம் பண்டிகை ஆவணி மாத வளர்பிறையில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படும். மலையாள நண்பர்களுக்கு திருவோணம் நாளன்று ஓணம் வாழ்த்துக்கள்.

Sep 05, 2025

தேசிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

மாணவர்களுக்கு கல்வி, நற்பண்புகளை கற்றுத்தரும் ஆசிரியர் பணி கடவுளுக்கு இணையானது என போற்றப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணன், ஆசிரியர் பணியில் ஈடுபாடு கொண்டவர். அவரது பிறந்த தினமான செப்.5, இந்தியாவில் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

Aug 27, 2025

விநாயகர் சதுர்த்தி  வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரம்..

 விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஆகஸ்ட் 26ம் தேதியா? ஆகஸ்ட் 27ம் தேதியா?தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதர்த்தி வழிபாடு மட்டுமே சந்திர உதய்த்தை அடிப்படையாக வைத்து வழிபட வேண்டியதாகும். வளர்பிறை சதுர்த்தி வழிபாடு என்பது சதுர்த்தி திதியை அடிப்படையாக வைத்து செய்யப்படும் வழிபாடு ஆகும். அதனால் ஆகஸ்ட் 27ம் தேதி தான் சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி உள்ளது.ஆகஸ்ட் 26ம் தேதி பிற்பகலுக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்குகிறது. இதனால் ஆகஸ்ட் 27ம் தேதியை தான் விநாயகர் சதுர்த்தியாக கணக்கில் எடுத்துக் கொண்டு வழிபட வேண்டும்.ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 01.40 வரை  எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினைசெய்யலாம். இதுவே விநாயகர் சதுர்த்தி   வழிபாட்டிற்கான சுபமுகூர்த்தநேரமாக  குறிப்பிடப்படுகிறது.

Aug 23, 2025

தேசிய விண்வெளி தினம்.

இந்தியாவின் 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய 'சந்திரயான் 3' விண்கலத்தின் லேண்டர்,  2023 ஆக. 23ல் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இப்பகுதியில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியது. ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின் நிலவில் இச்சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக  பிரதமர் மோடி இந்நாள் (ஆக.23) தேசிய விண்வெளி தினமாக கடைபிடிக்கப் படும் என 2023ல் அறிவித்தார். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News