25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


நலம் வாழ

Dec 11, 2025

இருதயம் பலம் பெற

இருதய நோய் உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்த்தல் நல்லது டீ குடிக்கலாம்.வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது உண்ண வேண்டும். இதயத்தை பலப்படுத்தி சீராக்கும் அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வர வேண்டும். பசும் பாலில்  பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கி போட்டு, நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். வெள்ளை தாமரை பூவின் இதழ்களை நசுக்கி, கஷாயம் செய்து ,காய்ச்சிய பசும்பாலில் அக் கஷாயத்தை கலந்து குடிக்க வேண்டும். மாதுளம்பழசாற்றில்தேன்கலந்துகுடிக்கவேண்டும்.இருதயம் வலுவாக அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி1 கரண்டி சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் கிட்டும்.தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வருவதால் இருதயம் பலம் பெரும்.

Dec 09, 2025

மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கும் எருக்கு மூலிகை.

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருந்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில் எருக்க இலையை அடுக்கிக்  காலால் மிதித்தால் குதிகால் வலி  நீங்கும். செடியின் இலைகளை நெருப்பில் போட்டுஎரித்து அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் இலையை நெருப்பில் வாட்டி  கட்டிகள் மேல் கட்டினால் அவை உடையும்.

Dec 08, 2025

பசியின்மையைச் சரிசெய்யும் சுக்கு.

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இவை தீவிரமாகாமல் தடுக்கவும், அறிகுறியை கட்டுப்படுத்தவும் பாரம்பரியமாகவே சில மூலிகைகள் உள்ளது. சுக்கு மழைக்காலத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய மூலிகை என்று சொல்லலாம்.இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படுவதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உ றைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.செரிமானம் பிரச்னை உள்ளவர்கள்அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை  ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும்.

Dec 06, 2025

ஒற்றைத் தலைவலி.

 ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்தால் ஒரு பக்க தலை மட்டும் வலிக்கும் சிலமணி நேரம் முதல் 3 நாட்கள் வரை தொடரும். சிலருக்கு இருபக்கமும் வலி இருக்கும்.வெண்ணீரில் குளிப்பதன் மூலம் ஒற்றைத்தலைவலி குணமாகிறது..ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காய்   சாறு மற்றும் பீட்ரூட்  சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும் .

Dec 04, 2025

அஜீரணமாக இருந்தால்.....

மாம்பழம் அதிகம் சாப்பிட்டு, அஜீரணம் என்றால் பால் சாப்பிட வேண்டும்.நெய் சாப்பிட்டு, அஜீரணம் என்றால் எலுமிச்சை சாறு சாறு சாப்பிட வேண்டும்.கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால், வெந்நீர் அருந்த வேண்டும்.பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால், வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.தேங்காயால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும்.பருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.பப்பாளி பழம் சாப்பிட்டதால் அஜீரணம் என்றால் தாராளமாக தண்ணீர் குடியுங்கள்  குணமாகும்.

Dec 03, 2025

காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலை  மென்று சாப்பிடுவதால்....

 கருவேப்பிலையைகாலை வெறும் வயிற்றில் மென்றுசாப்பிடுவதால் செரிமானத்தை அதிகரிக்கிறது: கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவை சிறிய துண்டுகளாக உடைக்க உதவுகிறது, எனவே இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. அஜீரணம், குடல் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கண் பிரச்சனை மேம்படுத்தலாம். கருவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும் .கருவேப்பிலை பலவகையான தொற்று நோய்களை குறைக்கிறது, மற்றும் நோயாளிகளின் அபாயத்தை குறைக்கிறது. கருவேப்பிலை மென்று சாப்பிடுவதால் மூலம் எடை மற்றும் தொப்பையை குறைக்கிறது.குழந்தை இல்லாத பெண்மணிக்குதினமும் கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் கரு தங்க உதவுகிறது.கர்ப்பபைக்கு ரொம்ப நல்ல கருவேப்பிலை.

Dec 02, 2025

இருமல் குணமாக...

கற்பூரவல்லி இலை, துளசி இலை சின்ன வெங்காயம், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு இடித்து அதன் சாறை எடுத்து அதனுடன்.சிறிதளவு மிளகுதூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் போதும் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும் எப்படிப்பட்ட இருமல் இருந்தாலும் ஒருமுறை குடித்தால் போதும் இருமல் ஓடிவிடும்.

Dec 01, 2025

மண்ணீரல் வீக்கம்.

கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கொண்டவர்கள்100 கிராம் திப்பிலியை வறுத்து பொடி செய்து,100 கிராம் கரிசலாங்கண்ணி கீரை பொடியுடன் கலக்க வேண்டும். அத்துடன்100 கிராம் பொடித்த நெற்பொரி.100 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரவேண்டும். மண்ணீரல் வீக்கத்தையும்,தொடர் விக்கலையும் இது குணப்படுத்தும்.

Nov 28, 2025

எல்லா வைரஸ் காய்ச்சலுக்கும் வில்வ இலை.

வில்வ இலை ஒரு கைப்பிடி அளவு ,மிளகு 2 ஸ்பூன் ,சீரகம் 2 ஸ்பூன், சுக்கு ஒரு துண்டு, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு லைட்டா அரைத்துக்கொள்ளவும். 500 மில்லி தண்ணீரில் நன்றாக சுண்ட 200 மில்லி கசாயம் வர்ற அளவுக்கு கொதிக்க வைக்கவும். கொதித்த கசாயத்தை வடிகட்டி அரை கிளாஸ், இரண்டு வேளை சாப்பிட்டால் போதும் ,24 மணி நேரத்துக்குள் எல்லா வைரஸ் காய்ச்சலும் குணமாகும் . வில்வ இலை எல்லா வைரஸ் காய்ச்சலுக்கும் ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் ஒரு சித்தர் எழுதிய மிகவும் அற்புதமான மருத்துவ குறிப்பு .

Nov 25, 2025

இந்த அறிகுறிகள் இருக்குமானால் …

1 கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தம். 2. காதில் அதீத குடைச்சல் அல்லது வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம். 3. அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரழிவு வரலாமெனவும் அர்த்தம். 4. பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தம். 5. கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம். 6. கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்பு கோடு ,அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனம் கொள்ளவும் என அர்த்தம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 35 36

AD's



More News