25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


நலம் வாழ

Jan 27, 2025

40 மற்றும் 50 வயது மேற்பட்டவர்களுக்கு நடைபயிற்சி

40கள் மற்றும் 50கள் முழுவதும் வளர்சிதை மாற்றம் குறைகிறது, மேலும் மூட்டு ஆரோக்கியம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற பிற அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகிறது. இந்த வயதுப் பிரிவினர் தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான வேகத்தில் உலாவுவதால் பயனடையலாம். வலிமை உடற்பயிற்சிகள் அல்லது சரிவுகள் அல்லது பாதைகள் போன்ற வெவ்வேறு நிலப்பரப்புகளில் நடப்பது நன்மைகளை அதிகரிக்கலாம். இந்த ஆண்டுகளில், கூட்டு ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒரு முக்கிய பிரச்சினையாகிறது; எனவே, பொருத்தமான பாதணிகளை அணிவது மற்றும் சமமான பரப்புகளில் நடப்பது மிகவும் முக்கியம்.

Jan 20, 2025

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிறுதானிய உணவுகள்

வரகு - உடல் எடை மற்றும் சர்க்கரை நோய்க்கு. குதிரைவாலி-  இதய நோய் சம்பந்தமான குறைபாட்டுக்கு.சாமை - இரத்த சோகை மற்றும் உடலின் கொழுப்பினை குறைக்க.திணை- இதயத்தை பலப்படுத்தும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்,இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த.சோளம்- இரத்த ஓட்டம், செரிமான சக்தியை மேம்படுத்துதல் மற்றும் வாயுத்தொல்லை நீங்க.நாட்டு கம்பு- உடல் வெப்பம், பார்வைதிறன், இரத்ததில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க.நாட்டு ராகி- இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து, பெருங்குடல் புற்றுநோய் & தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க.பனி வரகு- சருமத்தை பிரகாசமாக வைத்தல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலமாக்க.

Jan 19, 2025

பழங்கள்,ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது .

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இனிப்பு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. பழங்களில் சர்க்கரை அல்லது சிடரிக் அமிலம் இருப்பதால் 5 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடம் கழித்துதண்ணீர் குடிக்கலாம்.டீ காபி, சூடான பானங்கள் அருந்திய பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ எடுத்துக் கொண்டால், எடை வாயு, அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Jan 16, 2025

கிழங்கு வகைகளும், அற்புத மருத்துவ குணங்களும்

கருணைக்கிழங்கு உடல் சூட்டை தணிக்கும், மூல நோயை குணமாக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு பலம் தரும் சொறி, சிரங்குகளை குணமாக்கும். சேப்பங்கிழங்கு மலச்சிக்கல் தீரும், நரம்புகளுக்கு வலுசேர்க்கும் சேனைக்கிழங்கு நீரிழிவை தடுக்கும் உடல் பருமனை குறைக்கும் உருளைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். குடல் ஆரோக்கியம் மேம்படும் மரவள்ளிக்கிழங்கு உடல் பலம் பெறும். வியாதிகளை குணமாக்கும் தன்மை உள்ளது.

Jan 12, 2025

இரவு நேரத்தில் மிதமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்

அதிகம் சாப்பிடுதல் கூடாது. மிதமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பால் குடிக்கக்கூடாது. .இரவு ஏழு முப்பது மணிக்குள் சாப்பிட வேண்டும். 9மணிக்கு இரவு தூங்கிவிட வேண்டும்.   அதிக நேரம் தொலைபேசி பார்க்க கூடாது. .இரவில் குப்பைகளை வெளியில்  கொட்ட கூடாது. .இரவு நேரத்தில் துணி துவைக்க கூடாது.

Jan 10, 2025

ஆப்பிள் விதைகள்

ஆப்பிள் விதைகள் நச்சுத்தன்மையுள்ளபொருள். மென்று தின்னும் போதோ ,அரைபடும்போதோ நச்சாக மாறுகிறது. ஆப்பிள் ஜூஸ் போடும்போது வடிகட்டப் போவதால், கொட்டையோடு சேர்த்து அரைக்கக்கூடாது. ஒன்றோ இரண்டோ விழுங்கினால் தப்பில்லை.அதிக அளவு பயன்படுத்தும் போது விதைகள் நீக்கிய பிறகே சாப்பிடவோ ஜூஸ் போடவோ ரெசிப்பிக்கோ பயன்படுத்தனும்

Jan 07, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

காய்கறி சூப்கள், முளைக் கட்டிய பயிர்கள், சோளம், தேனுடன் கூடிய மூலிகை தேநீர், மசாலா சாய், எலுமிச்சை, புதினா இலைகள், உலர் பழங்கள் மற்றும் பருப்புகள், புரோபயாடிக்குகள், தயிர், மோர், பழங்கள்,வேகவைத்த காய்கறிகள், கீரைகள், பூண்டு, மஞ்சள், சுரைக்காய்,போன்றவைகளை சாப்பிடலாம்.

Jan 05, 2025

புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள்

மதுப்பழக்கம்,புகைப்பிடித்தல் ,தொடர்ந்து புண்கள்,அடிக்கடி காய்ச்சல், மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்படும்.இரவு நேரத்தில் வியர்வை,திடீரென உடல் எடை குறைவது கணையம் வயிறு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அறிகுறியாகும்.தொடர்ச்சியான புண்கள் வாய் அல்லது தொண்டைக்குள் ஆறாத வெள்ளை திட்டுக்கள் வாய்வழி புற்று நோயாக இருக்கலாம்.சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறுதல் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் வெளியேறுதல்.இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Jan 02, 2025

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால்....

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால், பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை சக்தி அதிகரிக்கும். வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.

Jan 01, 2025

சுகம் தரும் சுக்கு மல்லி காபி

சுக்கு,மல்லி  விதை ( தனியா ) ஆகியவற்றுடன், கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபி தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ. காபிக்கு பதிலாக இந்த சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே, வெந்நீர் அல்லது சுக்கு மல்லி காபியை அருந்தலாம்.

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 53 54

AD's



More News