25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Jan 07, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

காய்கறி சூப்கள், முளைக் கட்டிய பயிர்கள், சோளம், தேனுடன் கூடிய மூலிகை தேநீர், மசாலா சாய், எலுமிச்சை, புதினா இலைகள், உலர் பழங்கள் மற்றும் பருப்புகள், புரோபயாடிக்குகள், தயிர், மோர், பழங்கள்,வேகவைத்த காய்கறிகள், கீரைகள், பூண்டு, மஞ்சள், சுரைக்காய்,போன்றவைகளை சாப்பிடலாம்.

Jan 05, 2025

புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள்

மதுப்பழக்கம்,புகைப்பிடித்தல் ,தொடர்ந்து புண்கள்,அடிக்கடி காய்ச்சல், மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்படும்.இரவு நேரத்தில் வியர்வை,திடீரென உடல் எடை குறைவது கணையம் வயிறு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அறிகுறியாகும்.தொடர்ச்சியான புண்கள் வாய் அல்லது தொண்டைக்குள் ஆறாத வெள்ளை திட்டுக்கள் வாய்வழி புற்று நோயாக இருக்கலாம்.சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறுதல் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் வெளியேறுதல்.இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Jan 02, 2025

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால்....

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால், பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை சக்தி அதிகரிக்கும். வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.

Jan 01, 2025

சுகம் தரும் சுக்கு மல்லி காபி

சுக்கு,மல்லி  விதை ( தனியா ) ஆகியவற்றுடன், கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபி தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ. காபிக்கு பதிலாக இந்த சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே, வெந்நீர் அல்லது சுக்கு மல்லி காபியை அருந்தலாம்.

Dec 31, 2024

மூக்கடைப்பை விரட்ட...

குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவது சகஜம் இதை விரட்ட எளிமையான வழி இருக்கிறது. உலர்ந்த மஞ்சள் கொம்பு ஒன்றை எடுத்து, அதை அடுப்பில் காட்டி, எரிய விடுங்கள். பின்னர், அதிலுள்ள தீயை அணைத்தால் ஏற்படும் புகையை சுவாசியுங்கள்.இவ்வாறு செய்யும் போது. மூக்கடைப்பு அகலும். அதுமட்டுமின்றி, கிருமிகளை அழிப்பதோடு, மூக்கு, சைனஸ் அறைகள் மற்றும் நுரையீரலைசுத்தமாக  வைத்திருக்கவும் உதவும்.மூக்கு முற்றிலும் அடைத்துவிட்டாலும் கவலை வேண்டாம். குறுமிளகு என்று சொல்லக்கூடிய மிளகை ஊசியில் குத்தி, நெருப்பில் காட்டி, பின்னர் அதிலிருந்து எழும் புகையை சுவாசிக்க, மூக்கடைப்பு உடனே சரியாகும்.

Dec 26, 2024

முட்டைகளை அதிகமாக சாப்பிட்டால் ……

அதிகப்படியான முட்டைகளை சாப்பிடுவது அதிக கொழுப்பு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். முட்டைகள் புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருந்தாலும், அதிகப்படியான நுகர்வு LDL (கெட்ட) கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம், சில நபர்களுக்கு, குறிப்பாக தற்போதுள்ள கொழுப்பு அல்லது இதயம் தொடர்பான நிலைமைகள் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். முட்டைகளை அதிகமாக உண்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு வழிவகுத்தால், சமநிலையற்ற உணவுக்கு வழி வகுக்கும். உண்மையில், அதிக அளவு முட்டைகளை தொடர்ந்து உட்கொள்வது, அதிக புரதச் சுமை காரணமாக முன்பே இருக்கும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிறுநீரகங்களை கஷ்டப்படுத்தலாம். அதே வேளையில், முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் முக்கியமானது.

Dec 25, 2024

தினமும் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தலைமுடி பிரச்சனையை தீர்க்க உதவும்.நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.இதய நோய் வராமல் தடுக்க உதவும்.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்..இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மார்பக புற்று நோயை தடுக்க உதவும். எலும்புகள் வலுவடைய உதவும்.

Dec 24, 2024

எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் நிறைந்த  இயற்கை பானங்கள்.!

பால் - கால்சியம் சத்தின் சிறந்த மூலமான இதில் வைட்டமின் D உள்ளது. ஒரு கப் பாலில் 300 மிகி கால்சியம் உள்ளது. இது உங்களுக்கு தேவையான கால்சியம் சத்தை வழங்குவதோடு தசை மீட்புக்கும் உதவும்.பாதாம் பால் - அதிக கால்சியம் சத்து கொண்ட இது குறைந்த கலோரிகள் மற்றும் தாவரம் அடிப்படையிலான பாலாக அமைகிறது. ஒரு கப் பாதாம் பாலில் 450 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

Dec 22, 2024

கம்பங்களி சாப்பிட.....

கம்பை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது, கம்பு மாவை அதில் சேர்த்து கட்டியாகாமல் கிளறி இறக்கி சாப்பிடலாம்.கால்சியம், புரதம், இரும்பு, கனிமச் சத்துகள் என அனைத்து சத்துகளுமே கம்பில் உள்ளது.வளரும் குழந்தைகளுக்கும், பருவடைந்த பெண்களுக்கும் அவசியம் தர வேண்டிய உணவு.சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு, ஆகிய பிரச்சனைகளில் இருந்தும் இது காக்கிறது.சருமம், கண்பார்வைக்கு அவசியமான வைட்டமின் A, பீட்டா கரோட்டின் கம்பில் அதிகளவில் உள்ளது.கம்பு, வேண்டாத கொழுப்புகளை உடலில் தங்கவிடாது.

Dec 10, 2024

மதிய நேரம் குட்டித் தூக்கம் (afternoon cat nap ).. உடலுக்கு நல்லதா?

மதிய நேர குட்டித் தூக்கம் நல்லதா, கெட்டதா?. மதிய நேர குட்டி தூக்கத்தை ஆங்கிலத்தில் afternoon cat nap என்று சொல்கிறார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளில், மதிய நேரம் தூங்குவது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும், சோர்வை குறைத்து சுறுசுறுப்பாக்கும் எனத் தெரிய வந்துள்ளது. ஆதலால் மதிய நேர குட்டி தூக்கம் நல்லது என உடல் நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 2 ... 30 31 32 33 34 35 36 ... 51 52

AD's



More News