வாட்ஸ்ஆப் சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை.
வாட்ஸ்ஆப்பில் 'இவரைத் தெரியுமா?' என்ற தகவலுடன் தெரியாத எண்ணிலிருந்து வரும் மங்கலான புகைப்படங்களைக் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் பாதுகாப்புத் துறை எச்சரிக்கிறது.
அபாயம்: புகைப்படங்களைத் திறப்பதால் Malware (தீங்கிழைக்கும் மென்பொருள்) போனில் பதிவிறக்கம் ஆக வாய்ப்புள்ளது.
பாதிப்பு: இது உங்கள் வங்கிச் செயலிகளின் கடவுச்சொற்களைத் திருடி, கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்ய வழியமைக்கும்.
பாதுகாப்பு நடவடிக்கை:
வாட்ஸ்ஆப் அமைப்புகளில் (Settings > Storage and Data) மீடியா Auto-Download வசதியை முடக்கி வைக்கவும்.
தெரியாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகள் மற்றும் புகைப்படங்களைத் திறக்க வேண்டாம்.
0
Leave a Reply