அவரோ பெரியவர், அவர் இலையோ சிறியது, அவர் பெற்றதெல்லாம் கோணல். அவர் யார்? - புளியமரம் தன் மேனி முழுவதும் கண்ணுடையாள், தன்னிடம் சிக்குபவர்களை சின்னா பின்னமாக்குவாள். அவள் யார்? -மீன் வலை
தலையை வெட்ட வெட்ட, கருப்பு நாக்கு நீட்டுகிறது. அது என்ன ? பென்சில். வெட்கம் கெட்ட புளியமரம், வெட்ட வெட்ட வளருது. அது என்ன?தலைமுடி.
மேகத்தின் பிள்ளை, அவன் தாகத்தின் நண்பன். அவன் யார்? மழை .அகன்ற வாய் உடையவன், திறந்த வாய் மூடாதவன். அவன் யார்? செக்கு
குதி குதி என குதிக்கிறான், கொட்டைப் பல்லால் சிரிக்கிறான். அவன் யார்?சோளப்போறி .ஒற்றை காதுக்காரன் ஓடி ஓடி வேலி அடிக்கிறான். அவன் யார்? ஊசி .
பிறந்தது முதல் வயிற்றாலே அசைந்து போகிறது. அது என்ன? - பாம்பு .கடிப்பட மாட்டாள், பிடிப்பட மாட்டாள்.அவள் யார்? - தண்ணீர்.
கழுத்தை வெட்டினால் கண் தெரியும்?அவன் யார்? - நுங்கு உச்சி கிளையிலே ஒரு முழு குச்சி ஊசல் ஆடுது. அது என்ன? - முருங்கைக்காய்
பல் துலக்க மாட்டான். ஆனால், இவன் பல் எப்பொழுதும் வெள்ளை.இவன் யார்? - பூண்டு சூரிய ஒளியில் உணவை சமைப்பேன்.சுற்றுச் சூழலைப் பேணிக்காப்பேன்.நான் யார்? - மரம்
இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே ஒரு குடை. அவன் யார்? காளான் பார்த்தால் கல், பல் பட்டால் நீர். அது என்ன?பனிக்கட்டி icebar
வெள்ளை மாடு, வாலால் நீர் அருந்தும். அது என்ன? விளக்கு அட்டைக்கு ஆயிரம் கண்ணு, முட்டைக்கு மூணு கண்ணு. அவர்கள் யார்? கட்டிலும், தேங்காயும்
தேடிக் கிடைத்த இறையை, கூடி கூடி உண்பவன். அவன் யார் ? காகம் ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலை கனம் அதிகம். யார் அவன் ? பம்பரம்