25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விடுகதை

Jan 26, 2026

.ஆணை போகிறது, ஆனால், தலை தெரியவில்லை

.தேடாமல் கிடைக்கும் பல், தேடும் செல்வத்தை குறைக்கும் பல். அது என்ன?சோம்பல் .ஆணை போகிறது, ஆனால், தலை தெரியவில்லை. அது என்ன? பரிசல் 

Jan 19, 2026

எளிதில் உடையும் புட்டியில், இரண்டு வலுவான தைலம். 

எளிதில் உடையும் புட்டியில், இரண்டு வலுவான தைலம். அது என்ன?  முட்டை சுற்றி சுழல்வான், வீர விளையாட்டாக இருப்பான்.அவன் யார்? - சிலம்பாட்டம் .

Jan 12, 2026

பல் துலக்காதவனுக்கு, உடம்பெல்லாம் பற்கள்.

பல் துலக்காதவனுக்கு, உடம்பெல்லாம் பற்கள். அவன் யார்?  - சீப்பு காதை திருகினால், கதையெல்லாம் சொல்லுவான். அவன் யார்? - வானொலி 

Jan 05, 2026

கால் கருப்பு, முக்கால் சிகப்பு, உடைத்தால் பருப்பு, தின்றால் துவர்ப்பு

கால் கருப்பு, முக்கால் சிகப்பு, உடைத்தால் பருப்பு, தின்றால் துவர்ப்பு. அது என்ன?   குன்றிமணி  கல் படாத இடத்தில், கரு இல்லாத  முட்டை. அது என்ன?   காளான் 

Dec 29, 2025

.கால் இல்லாதவன், சற்று நேரத்தில் மறைகிறான்

.கால் இல்லாதவன், சற்று நேரத்தில் மறைகிறான்.அவன் யார்? - பாம்பு  கால் இல்லாத மான், வேரில்லாத புல்லை தின்னும். அது என்ன? மீன், பாசி  

Dec 22, 2025

.காய்க்கும், பூக்கும், கலகலக்கும், காகம் உட்கார இடமில்லை.

.காய்க்கும், பூக்கும், கலகலக்கும், காகம் உட்கார இடமில்லை. அது என்ன?--நெற்கதிர் காரி காலை பிடிக்கப் போனால், கொக்கரக்கொம்பன் இடிக்க வருகிறான்.அவன் யார்? -சுரைக்காய் -

Dec 15, 2025

.தட்டு போல் இருக்கும், அதில் சொட்டு தண்ணீர் ஒட்டாது.

.தட்டு போல் இருக்கும், அதில் சொட்டு தண்ணீர் ஒட்டாது. அது என்ன?   தாமரை இலை  .காய் காய்க்காத மரம், பூ பூக்காத மரம். அது என்ன மரம்?   கிளுவை மரம் 

Dec 08, 2025

அவரோ பெரியவர், அவர் இலையோ சிறியது, அவர் பெற்றதெல்லாம் கோணல்.

அவரோ பெரியவர், அவர் இலையோ சிறியது, அவர் பெற்றதெல்லாம் கோணல். அவர் யார்? - புளியமரம்  தன் மேனி முழுவதும் கண்ணுடையாள், தன்னிடம் சிக்குபவர்களை சின்னா பின்னமாக்குவாள். அவள் யார்? -மீன் வலை 

Dec 01, 2025

தலையை வெட்ட வெட்ட, கருப்பு நாக்கு நீட்டுகிறது. அது என்ன ?

தலையை வெட்ட வெட்ட, கருப்பு நாக்கு நீட்டுகிறது. அது என்ன ? பென்சில்.  வெட்கம் கெட்ட புளியமரம், வெட்ட வெட்ட வளருது. அது என்ன?தலைமுடி. 

Nov 24, 2025

மேகத்தின் பிள்ளை, அவன் தாகத்தின் நண்பன்.

மேகத்தின் பிள்ளை, அவன் தாகத்தின் நண்பன். அவன் யார்?   மழை  .அகன்ற வாய் உடையவன், திறந்த வாய் மூடாதவன். அவன் யார்?  செக்கு

1 2 3 4 5 6 7 8 9 10 ... 13 14

AD's



More News