25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


ஆன்மீகம்

Dec 12, 2025

வேதநாராயணப் பெருமாள் கோவில்.

திருச்சி அருகே திருநாராயணபுரம்எனும் ஊரில் வேதநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறை வன் வேதநாராயணப் பெருமாள் எனும் திருநாமத்துடன் வேத நாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். அப்போது அவர், தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு பெரு மான், இத்தலத்தில் வேதங்களை உபதேசித்து, பின்பு இங்கேயே பள்ளிக்கொண்டார். அதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு 'வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது.பிற்காலத்தில் இங்குள்ள சுவாமியின் சிலை மண்ணால் மூடப் பட்டது, ஒரு சமயம், இவ்வூருக்கு வந்த வானவராயர் என்ற மன்ன னின் கனவில் தோன்றிய பெருமாள், "தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதாக" உணர்த்தி உள்ளார். இதையடுத்து அந்த சிலையை கண்டெடுத்த மன்னர், கோவிலும் கட்டினார்.இரணியனை அழித்தபோது உக்கிரமாக காட்சி அளித்த நரசிம் மர்,பிரகலாதனுக்கு இத்தலத்தில் சாந்த ரூபமாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், நான்கு வேதங்களை யும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்கிறார்கள்.மூலவர்விமானம்வேதவிமானம்எனப்படுகிறது.கோவில் பிரகாரத்தில்ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், மணவாளமாமுனிவர், பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோர் உள்ளனர்.காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலின் முகப் பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதி மக்களிடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாராவது பொய் சொன் னாலோ, ஏமாற்றினாலோ இங்குள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பு சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்குள்ள இறைவனுக்கு துளசி மாலை அணி வித்து, 27 அகல் விளக்கு ஏற்றி ஜாதகத்தை பெருமாள் திருவடி யில் வைத்து வழிபட்டு செல்கின்றனர். தோஷம் உள்ளவர்கள், தங்களின் ஜென்ம நட்சத்திரமன்று இந்த வழிபாட்டை செய்வது விசேஷமாகும்.திருச்சி - முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டியத்திற்கு அருகில் உள்ள திருநாராயண புரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

Dec 05, 2025

அக்னீஸ்வரர் சன்னதி.

ஒருவருக்கு பெயர், புகழ். அந்தஸ்து ஆகியவற்றை கொடுப்பவர் சூரியபகவான். இவரின் அருளைப் பெற திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகிலுள்ள நெய்தவாயல் அக்னீஸ்வரரை ஞாயிறன்று வணங்குங்கள்.ராஜகோபுரம் இல்லாத சிறிய நுழைவு வாசலே கோயிலில் நம்மை வரவேற்கிறது, பின் நேராக சென்றால் கிழக்கு நோக்கி உள்ள அக்னீஸ்வரரை தரிசிக்கலாம். சிவலிங்கம் சற்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இங்கு சிறப்பம்சமே தீபாராதனைதான். சுவாமி முன் தீபாராதனை காட்டும் போது வெள்ளையாகவும், பின்புறம் கொண்டு செல்லும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும்.அதாவது சுவாமிக்கு பின்புறத்தில் தீபாராதனை காட்டினால், சிவலிங்கமே அக்னி ஜ்வாலையாக தெரியும். இதை தரிசித்தால் சூரியதோஷம் நீங்கும். ஞாயிறன்று உச்சிக் காலத்தின் போது தரிசித்தால் அந்தஸ்து உயரும். சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் பால் அபிஷேகம் செய்து வில்வார்ச்சனை செய்கின்றனர்.பிறகு தெற்கு நோக்கியிருக்கும் திரிபுரசுந்தரி அம்மனின் தரிசனம் நம் கண்களை நிறைக்கும். பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தியும் அபய, வரத ஹஸ்தத்துடன் காட்சி தரும் இவளை பார்த்தால் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.அம்மனின் முன் ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. வெள்ளி அன்று மாலையில் நடக்கும் விசேஷ பூஜையில் பங்கேற்றால் விருப்பம் நிறைவேறும்.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கஜபிருஷ்ட அமைப்பைக் கொண்டது. தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.

Nov 28, 2025

நட்சத்திர விருட்ச விநாயகர்.

பிறந்த நட்சத்திர நாளன்று கோயில் வழிபாடு செய்தால் முன்வினை பானம் தீரும். அன்று அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய தெய்வம். மரத்தை வழிபடுவது இன்னும் சிறப்பு, அதற்குரிய விசேஷ தலமாக திருவண்ணாமலை மாவட்டம் உக்கம்பெரும்பாக்கம் கூழமந்தல் ஏரிக்கரை அருகிலுள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் உள்ளது.காஞ்சி மஹாபெரியவரின் வழிகாட்டுதலால் சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகள் இங்கு நட்சத்திர விருட்சங்களை (மரம்) பிரதிஷ்டை செய்தார். பிறந்த நட்சத்திர நாளில் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின் நட்சத்திர அதிதேவதைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வது நல்லது. அப்போது மரத்தை மூன்று முறை சுற்றுவது அவசியம். இதனால் சகல தோஷங்களும் விலகும். வேலைவாய்ப்பு. திருமணம், குழந்தைப்பேறு என சுபவிஷயங்கள் தடையின்றி நிறைவேறும். நட்சத்திரம் தெரியாதவர்கள் 27 நட்சத்திரம், 12 ராசிக்கான மரங்களை எல்லாம் பொதுவாக வழிபாடு செய்யலாம்.காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த அத்திருத்ராட்ச லிங்கேஸ்வரர் இங்கு இருக்கிறார். வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர், குருபகவான், சனீஸ்வரர், ராகு, கேதுவுக்கு சன்னதிகளும் உள்ளன.

Nov 21, 2025

நாள்பட்ட நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி கோவில் .

கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டம் மருத்தோர்வட்டம் சேர்த்தலாவில் தன்வந்திரி கோயில் உள்ளது. இங்கு வழிபடுவோர் நூறாண்டு நோயின்றி வாழ்வர். வயலார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். வைத்தியம் செய்தும் பலனில்லை. வைக்கம் மகாதேவர் கோயிலுக்கு சென்று தரிசித்தார். வலி குறைந்தது.கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி ஏற்பட்டது. எனவே அங்கேயே தங்கினார். அன்றிரவு கனவில், "இங்கிருந்து சேர்த்தலைக்கு செல் அங்குள்ள குளத்தில் மூழ்கினால் மூன்று தன்வந்திரி சிலைகள் கிடைக்கும்.முதலில் கிடைக்கும் சிலை சக்தி வாய்ந்ததால் அதைக் குளத்திலேயே விட்டு விடு. இரண்டாவது சிலையை அந்தணருக்கு தானமாக  கொடு, மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நோய் தீரும்' என்றார் சிவபெருமான். அதன்படி இரண்டாவதாக கிடைத்த சிலையை  வெள்ளுடு மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் அளித்தார்.சில ஆண்டுக்கு பிறகு மண்மூஸ் என்பவரின் உதவியுடன் மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். இருவரின் குடும்பத்தினரும் நிர்வாகத்தை நடத்தினர்.இவர்களின் காலத்திற்குப் பின் கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்தது. இதில் மண்முஸ் குடும்பத்தினர் சிலையின் கையை உடைத்து கோட்டயம் அருகிலுள்ள, ஒளச்ச என்னும் இடத்தில் புதிதாகச் சிலை செய்து கோயில் கட்டினர்.வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த சிலையை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையையும் வெள்ளியால் செய்து பொருத்தினர். இங்கு மேற்கு நோக்கியுள்ள வட்ட வடிவ சன்னதியில் சுவாமி இருக்கிறார்.*இக்கோயிலில் முக்குடி என்னும் மருந்தை தயிரில் கலந்து தயாரிக்கின்றனர். பூஜையின் போது சுவாமியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் இந்த மருந்தை நிரப்புவர். இதைப் பருகினால் நோய் தீரும். குணம் பெற்றவர்கள் சுவாமிக்கு வெண்ணெய், சந்தனம் சாத்துகின்றனர்.உடல் நலம் பெருக 'கயற்றேல் வானம்' என்னும் பூஜையை நடத்துகின்றனர். அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டில் சேப்பங்கிழங்கால் ஆன 'தாள்கறி நைவேத்யம்' செய்வர். இதைச் சாப்பிட்டால் நாள்பட்ட நோய்கள் தீரும்.

Nov 14, 2025

கருமாரியம்மன் .

டில்லி க்யாலாவில் குடியிருக்கும் கருமாரியம்மனை வெள்ளியன்று தரிசித்தால்,திருமணத்தடை விலகும். திங்களன்று 'இங்குள்ள புற்றில் பால் ஊற்றி வழிபட நாகதோஷம் தீரும்.இக்கோயிலில் அகத்திய முனிவருக்கு காட்சியளித்த கருமாரி அம்மனுக்கு ,விளக்கேற்றினால் விரும்பிய வரம் கிடைக்கும். சித்தரான காகபுஜண்டர் இத்தலத்தை 'உத்திர வேதபூமி' எனப் பெயரிட்டு அழைத்தார்.முன்பு இப்பகுதியில் நாகப்புற்று ஒன்று இருந்தது. அதை பக்தர்கள் அம்மனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் கருமாரி அம்மனுக்குகோயில்கட்டப்பட்டது.இங்கு விநாயகர், முருகன், சிவன், ஆஞ்சநேயர், காலபைரவர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. தற்போது கோதண்ட ராமர், தன்வந்திரி, சப்த கன்னியர் சன்னதிகள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விரைவில் நடக்க இருக்கிறது.ராகுதோஷம், திருமணம் ஆகாதவர்கள் வெள்ளியன்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். சித்திரை திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து தீக்குழி இறங்கும் வைபவம் நடக்கிறது.குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பூஜை நடக்கும்.

Nov 07, 2025

மாங்கல்யம் காக்கும் திருமங்கலக்குடி பிராணநாதர் கோயில் மங்களாம்பிகை அம்மன் .

 கும்பகோணம் அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராணநாதர் கோயில் மங்களாம்பிகையை தரிசித்தால் திருமணம் நடக்கும், சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.முற்பிறவியில் செய்த பாவத்தால் தனக்கு தொழுநோய் வரவிருப்பதை உணர்ந்தார் காலவ முனிவர். அதிலிருந்து விடுபட தவம் செய்தார். அதன் பயனாக காட்சியளித்த நவக்கிரகங்கள் 'இது விதிப்பயன் என்பதால் எங்களால் இதனை மாற்ற முடியாது' என்றனர். கோபம் கொண்ட முனிவர், 'உங்களுக்கு தொழுநோய் இப்போதே வரட்டும்' என சபித்தார். நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குணம் அடைந்தனர், காளி, பூமிதேவி, ஆகாசவாணி, மங்களாம்பிகை, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர் இங்கு சிவனை வழிபட்டுள்ளனர்.முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர். லவாணர். இவர் மன்னரிடம் அனுமதி பெறாமல், கோயில் கட்டுவதற்கு அரசு பணத்தை பயன்படுத்தினார். இதையறிந்து அமைச்சருக்கு மரண தண்டனை விதித்தார் மன்னர். தண்டனைக்குப் பின் தன் உடலை சொந்த ஊரான திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லுமாறு அலைவாணர் வேண்டினார். அதன்படி உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே அமைச்சரின் மனைவி திருமங்கலக்குடி அம்மனைச் சரணடைந்தாள். அம்மனும் உயிர்பிச்சை தரும்படி சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவனருளால் அமைச்சர் உயிர் பெற்றதால் சுவாமிக்கு 'பிராண நாதர்' என்றும், அம்மனுக்கு 'மங்களாம்பிகை' என்றும் பெயர் வந்தது.மூலவர் சிவலிங்கத்தின் மேல்பாகமான பாணம், கீழ்பாகமான ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். தொடர்ந்து 11 ஞாயிறு அன்று எருக்க இலையில் தயிர்சாதம் நைவேத்யம் செய்ய கிரகதோஷம் விலகும். நடராஜர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் (மதியம் 12:00 மணி) பூஜை நடக்கிறது.மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கள விமானம், திருமங்களக்குடி என அனைத்தும் மங்களகரமாக உள்ளது. எனவே இத்தலத்தை 'பஞ்ச மங்கள க்ஷேத்ரம்' என்கிறார்கள்.மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்கிறாள். அம்மனின் வலக்கையில் சாத்திய தாலிக்கயிறு சுமங்கலி பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இதை அணிவோருக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

Oct 31, 2025

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் மலைகளுக்கு இடையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் மலைகளுக்கு இடையில் உள்ளது புகழ் மிக்க ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில். இது பராசக்தியின் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சரஸ்வதி, மகாலட்சுமியை தரிசித்தால் மாமியார், மருமகள் ஒற்றுமை பலப்படும்.தட்சனின் மகளான தாட்சாயிணியை மணம் செய்தார் சிவபெருமான். ஆணவம் மிக்க தட்சன் ஒருமுறை சிவபெருமானை அழைக்காமல், தேவர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்தினார். கோபம் கொண்ட தாட்சாயிணி நியாயம் கேட்க சென்றாள். ஆனால் மகள் என்றும் பார்க்காமல் தட்சன் அவமானப்படுத்தினான். இதனால் வருந்தியவள் யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்தாள். கோபம் கொண்ட சிவபெருமான் அந்த உடலை சுமந்தபடி நாடெங்கும் அலைந்தார். இதைதடுக்கதிருமால்தன்சக்கராயுதத்தை வீச, அவளின்உடல்பாகங்கள்பலஇடங்களில்சிதறின.அந்ததலங்களே 51 சக்தி பீடங்களாக உள்ளன. இதில் தாட்சாயிணியின் மணிக்கட்டு இங்கு விழுந்தது. இத்தலம் 27வது சக்தி பீடமாகஉள்ளது.கருவறையில் பார்வதியை அணைத்தபடி சிவபெருமான் இருக்கிறார். இவருக்கு இடப்புறம் காளியும், வலப்புறம் கவுரி விநாயகரும் உள்ளனர். இந்தச் சிலைகள் திரேதாயுகத்தைச் சேர்ந்தவை.சிவனை சிந்தித்தபடி பார்வதி இங்கு இருப்பதால் இத்தலம் 'பிரிய பீடம்' எனப்படுகிறது. தம்பதியர் இங்கு வழிபட்டால் ஒற்றுமையாக வாழ்வர்.ஞானத்திற்கு அதிபதி சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி காளை வாகனத்தில் இங்குள்ளனர். காயத்ரி, மகாகாளியான சாமுண்டீஸ்வரியை வழிபட்டால் எதிரிபயம் விலகும். நந்தி பகவானே பைரவராக இங்குள்ளார்.

Oct 24, 2025

தரிசித்தோருக்கு தலைமைப் பதவி தரும் திருமலைக்கேணி முருகன்.

திருமலைக்கேணி ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் கரந்தமலை தொடரில், மலை உச்சியில் அழகிய வனத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் வற்றாத சுனையொன்று உள்ளது. பொதுவாக குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோவில்களில் சுவாமியை தரிசிக்க படியேறி செல்ல வேண்டும். ஆனால், இக்கோவில் படி இறங்கி சென்று தரிசனம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த கோவிலை 'கீழ் பழனி' என்றும் அழைக்கிறார்கள்.இந்த கோவில் அமைந்த விதம் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் ஒரு முருகன் கோவில் கட்ட விருப்பம் கொண்டார். ஒரு நாள் வேட்டைக்காக இந்த வனப்பகுதிக்கு வந்தபோது இங்கிருக்கும் சுனையில் நீர் பருகி சற்று கண் மூடி ஓய்வெடுத்தார். அப்போது அவர் கனவில் வந்த முருகன் அந்த சுனைக்கு அருகிலேயே தனக்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறுகிறான். மன்னரும் அவ்வாறே ஒரு கோவிலை எழுப்பினார்.வனத்திற்கு நடுவில் அமைந்த இந்த மலைக்கோவிலில் காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமடைந்தது. பூஜைகளும் நின்று போயின. பிரதான மூலவர் சிலை பின்னமடைந்ததால், வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் எவ்வளவு முயன்றும் பின்னமடைந்த சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே அதன் மேல் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறாக கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என்று இரண்டடுக்காக இந்த கோவில் அமைந்துள்ளது. 1979 இல் கிருபானந்த வாரியார் இந்தக் கோவிலை சீரமைக்கும் பணியை செய்தார்.மேலடுக்கிலுள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கிலுள்ள ஆதி முருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை கட்டமைத்துள்ளனர். இதற்காக மேலேயுள்ள முருகன் பாதத்திற்கு கீழே ஒரு துளையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மூலஸ்தானத்தில் முருகன் பாலகனாக அருள்புரிகிறார். இவர் வலக்கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி தலையில் கிரீடத்துடன் காட்சியளிக்கிறார். இந்த பாலமுருகனுக்கு தினமும் இராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. இங்கே வள்ளி, தெய்வானை முருகனுடன் இல்லை. ஆனால் முருகன் சன்னதிக்கு இருபுறமும் இரு தீர்த்தங்கள் உள்ளன. இதை வள்ளி தெய்வானை தீர்த்தம் என்று சொல்கிறார்கள். அதிலும் வள்ளி தீர்த்தம் கிணறு வடிவத்தில் உள்ளது.மலையின் நடுவே உள்ள கிணறு என்பதால் இந்த இடம் 'மலைக்கேணி' என்று பெயர் பெற்றது என்று சொல்கிறார்கள். இந்த தீர்த்தங்களின் வடிவில் தேவிகள் வள்ளியும் தெய்வானையும் இங்கே பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் ஏற்பட பக்தர்கள், இங்கேயுள்ள வள்ளி தெய்வானை தீர்த்தங்களின் நீரை பக்தியோடு பருகுகிறார்கள்.சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஐப்பசி கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தை கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களில் விழாக்கள் கோலாகலமாக நடைபெறும். இங்கே வந்து தினமும் இராஜ அலங்காரத்துடன் காட்சியருளும் இந்த பாலமுருகனை வழிபட்டால் பொறுப்பான தலைமை பதவிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Oct 17, 2025

சூரியக் கடவுளின் 12 பெயர்கள் .

ஒடிசாவின் கோனார்க்கில் இருந்து 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவரது சிலை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. அவரது 12 பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே. 1/ மித்ரயா - அனைவரின் நண்பர்சூரியக் கடவுள் அனைத்து உயிரினங்களுக்கும் பாசத்தையும் உதவியையும் குறிக்கிறது. 2/ ராவயா - அனைவராலும் போற்றப்படுகிறார்அவரது கருணை மற்றும் ஒளிக்காக அனைவரும் அவரை மதிக்கிறார்கள். 3/ சூரியயா - அனைவருக்கும் வழிகாட்டிசூரியன் பகலின் அடையாளமாகவும் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் இருக்கிறார். 4/ பனவே - அழகைக் கொடுப்பவர்அவரது கதிர்கள் இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் அழகைக் கொண்டுவருகின்றன. 5/ ககாயா - புலன்களைக் கட்டுப்படுத்துபவர்சூரியன் நமது புலன்களை எழுப்பி சமநிலைப்படுத்துகிறார். 6/ புஷ்னே - அனைத்தையும் வளர்ப்பவர்அவரது ஆற்றல் உலகம் முழுவதையும் வளர்க்கிறது. 7/ ஹிரண்யகர்பயா - படைப்பாளர்சூரியன் பிரபஞ்சத்தின் படைப்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. 8/ மாரிச்சாய - நோய்களை அழிப்பவர்அவரது கதிர்கள் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளன. 9/ ஆதித்யாய - ஊக்கமளிப்பவர்அவை நமக்கு புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் வழங்குகின்றன 10 சாவித்ரே - தூய்மைப்படுத்துபவர்சூரியனின் கதிர்கள் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்துகின்றன 11/ அர்காய - ஒளியூட்டுபவர்அவரது பிரகாசம் உலகை ஒளிரச் செய்கிறது 12/ பாஸ்கர்யா - ஒளியூட்டுபவர்சூரியன் இருளை அகற்றி அறிவையும் ஒளியையும் பரப்புகிறார் ஓம் சூரியாய நமஹ .

Oct 10, 2025

புஷ்கர் பிரம்மா மந்திர்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் கோயில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் உள்ளது. இங்கு சாவித்ரி, காயத்ரியுடன் பிரம்மா அருள்புரிகிறார்.ஒருமுறை பிரம்மா உலக நலன் கருதி யாகம் நடத்த விரும்பினார். அதற்காகத் தன் வாகனமான அன்னப் பறவையிடம் தாமரை மலரைக் கொடுத்து வழியில் அது எங்கு கீழே விழுகிறதோ அங்கு நடத்த முடிவு செய்தார். அந்த இடமே புஷ்கர் எனப் பெயர் பெற்றது. இதற்கு 'நீலத்தாமரை' என்பது பொருள்.யாகத்தை தொடங்கும் முன் பிரம்மாவின் மனைவி சாவித்ரிக்காக காத்திருந்தார். அவள் வர தாமதமானதால் யாகத்தை தொடங்க முடியாமல் போனது. பின்னர் இந்திரனிடம் ஆலோசித்து காயத்ரி தேவியைத் திருமணம் செய்து யாகத்தில் அமர்ந்தார். தாமதமாக வந்த சாவித்திரி, தன் கணவருடன் வேறொரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இனி பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போகட்டும்' என சாபமிட்டு, அருகிலுள்ள குன்றான அருணகிரி மீதேறி அமர்ந்தாள்.கோயிலின் முகப்பில் 'ஸ்ரீஜகத்பிதா பிரம்மா மந்திர்' என எழுதப்பட்டுள்ளது. இதற்கு 'உலகத்தின் தந்தை பிரம்மாவின் கோயில்' என பொருள். கருவறையின் மீது 70 அடி உயர விமானத்தில் பிரம்மாவின் வாகனமான அன்னப்பறவை காட்சியளிக்கிறது. பிரகாரத்தின் ஒரு பகுதியில் காணிக்கையாக வந்த வெள்ளி நாணயங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கருவறையை நோக்கி வெள்ளி ஆமை உள்ளது. தீர்த்தத்தின் பெயர் புஷ்கர்.நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின்சலவைக்கல் சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். அவரது கைகளில் புத்தகம், அருகம்புல், கமண்டலம், ஜபமாலை உள்ளன. இதை 'விஸ்வகர்மா கோலம்' என்கின்றனர். பிரம்மாவின் இடது புறம் காயத்ரி, வலது புறம் சாவித்திரி உள்ளனர்.பராசர கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரிகள் அர்ச்சகர்களாக உள்ளனர். சந்நியாசி, பிரம்மச்சாரிகள் மட்டுமே கருவறைக்குள் நுழையலாம். எதிரெதிர் திசைகளில் உள்ள குன்றுகளில் கோயில்கள் உள்ளன. உயரமான குன்றின் மீது சாவித்திரி, சிறிய குன்றின் மீது காயத்ரி கோயில்கள் உள்ளன. கார்த்திகை மாத பவுர்ணமியன்று ஒட்டகத் திருவிழா நடக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News