25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆன்மீகம்

Mar 21, 2025

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (21.03.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து, வனவிலங்குகளால் பயிர் சேதம் குறித்து நேர்முக கடிதம் அரசுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும்,  வனவிலங்குகளால் பயிர் சேதம், மனித உயிர் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என  துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், கண்மாய்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில்  அரசு அலுவலர்கள் அகற்ற வரும்போது அப்பகுதிக்குரிய பொதுமக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.  மேலும், சீமைக் கருவேல மரங்களை  அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமைக் கருவேல மரங்களை  அகற்றினால் மட்டுமே வனவிலங்குகள் காட்டுப்பன்றிகள் பயிர் சேதத்தினை தடுக்க முடியும்.தென்னை மற்றும் மாமரத்திற்கு பயிர் காப்பீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.  தென்னை  மற்றும் மாமரங்கள் பயிர் காப்பீடு தொடர்பாக இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.கண்மாய் தூர்வாருதல், சீரமைப்பு பணிகள் அதிக அளவில் நிதி தேவைப்படும் கண்மாய்களின் விபரங்களை பட்டியலிட்டு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் அவர்களால் நீர்வளத்துறைக்கு  உத்தரவிடப்பட்டது.  இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.தேவராஜ்,இ.வ.ப.,   வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) திருமதி நாச்சியார் அம்மாள் மற்றும்  தோட்டக்கலை துணை  இயக்குநர் உட்பட பல துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Mar 20, 2025

வாரணாசியில் 300 ஆண்டுகள் சாய்ந்திருக்கும் சிவன் கோயில்!

உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்தை பற்றி கேட்டிருக்கிறோம். அது சுமார்4 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. ஆனால், வாரணாசியில் உள்ள இந்த கோயில் சுமார் ஒன்பது டிகிரி சாய்வாக உள்ளது. மேலும் இது ஆண்டுதோறும் மேலும் மேலும் சாய்ந்து வருவதாகக் கூறுகின்றனர். இப்படி இந்த கோயில் சாய்ந்து வருவதற்கு ஒரு சாபம்தான் காரணம் என்கிறார்கள்.வாரணாசியில் மணிகர்ணிகா காட் மற்றும் சிந்தியா காட் இடையே ரத்னேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உயரம்74 மீட்டர். இது பைசா சாய்ந்த கோபுரத்தை விட 20 மீட்டர் அதிகம்.இந்தக் கோயில் சாய்ந்ததற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ராணி அஹில்யா பாய் ஹோல்கர் வாரணாசியில் கோயில்களை கட்டும்போது, அந்த நேரத்தில் அவரது பணிப்பெண்களில் ஒருவரான ரத்னா பாயும் கோயில் கட்டுவதற்கு கடன் கொடுத்துள்ளார். பெரிய பங்கை கொடுத்த அந்த பணிப் பெண்ணின் பெயரான ரத்னா என்ற பெயரே கோயிலுக்கு வைத்ததைக் கேட்ட அஹில்யா இந்த கோயிலுக்கு சாபம் கொடுத்ததால்தான், நீரில் ஒரு பக்கம் மூழ்கியதாக சொல்கிறார்கள்.மற்றொரு கதைப்படி ராஜா மான்சிங்கின் வேலைக்காரரால், அவரது தாயார் ரத்னா பாய்க்காக கட்டப்பட்டது இந்த கோயில் என்று கூறப்படுகிறது. கோயில் கட்டப்பட்ட பிறகு அம்மாவின் கடனை அடைத்து விட்டதாக பெருமையுடன் அறிவித்தார். இந்த வார்த்தைகள் அவன் உதடுகளில் இருந்து வெளிப்பட்டவுடன், அன்னையின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது என்பதை காட்ட இக்கோயில் பின்னால் சாய்ந்தது என்று கூறுகின்றனர்.ஆனால், அறிவியல்படி நதியின் கடையில் கட்டப்பட்ட இந்த கோயிலின் நிலப்பரப்பு ஸ்திரத்தன்மை குறைந்த இடம், நீரோடும் பாதையில் நில அரிப்பு ஏற்பட்டு தளம் பலவீனம் அடைவதால் நாளடைவில் இக்கோயில் ஒரு பக்கம் சாய்ந்து வருகிறது. மேலும், இது வருடத்தின் பாதி நாள் நதியில் மூழ்கி விடுகிறது. ஒருசில நாள் இதன் கோபுர உச்சி வரை கூட தண்ணீர் இருக்கிறது. இதனால் இந்த கோயிலுக்கு வருடத்தின் சில நாட்கள் மட்டுமே பூஜை வழிபாடு எல்லாம் செய்யப்படுகிறது. கோயிலின் கருவறையில் ஒன்றல்ல பல சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனாலே இது சிவனின் சிறிய நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.கோயிலில் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதால் இந்தக் கோயிலின் கருவறையில் யாரும் நேராக நிற்க முடியாது. சாய்ந்து பேலன்ஸ் பண்ணிதான் வழிபாடு செய்ய வேண்டும்.1860களில் எடுக்கப்பட்ட இந்த கோயிலின் படங்களில் மட்டுமே நேராக இருப்பதைக் காண முடிகிறது.

Mar 13, 2025

பைரவர் தோன்றிய வரலாறு

பைரவர் தோன்றிய வரலாறு சிறப்பானதாகும். தொடக்க காலத்தில் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவர் என்பதால், பிரம்மனுக்கு கர்வம் உண்டானது. அதோடு சிவனை விட நாம்தான் உயர்வானவர் என்று எண்ணினார். அனைவரும் தன்னை வணங்க வேண்டும். சிவனை விட தன்னை ஒரு படி மேலே நினைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் சிவன் செய்யும் ஒவ்வொரு நிகழ்விலும் தலையிட்டுக்கொண்டே வந்தார்.இதனால் கோபமடைந்த சிவபெருமான், தனது நகத்தினைப் பெயர்த்து தரையில் போட்டார். அதில் இருந்து கால பைரவர் தோன்றினார். அவர் வேகமாகச் சென்று பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார். அதன் பிறகே பிரம்மன், நான்முகனாக மாறினார். தனது அகந்தை அழிந்து, சிவபெருமானின் பக்தரானார் என்று சிவ மகாபுராணம் சொல்கிறது. சக்தி பீடங்கள் தோறும் காலபைரவர் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறார். தகுராசூரன் என்பவன், பெண்களால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும்' என்ற வரத்தை பெற்றிருந்தான். அந்த ஆணவத்தால், மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான்.இதையடுத்து பார்வதிதேவி, காளியாக வடிவம் எடுத்து அந்த தகுராசூரனை அழித்தாள். அதன் பிறகு அவளின் ஆக்ரோஷத்தில்தான் கால பைரவர் தோன்றினார் என்று சொல்பவர்களும் உண்டு. அன்னை அவருக்குப் பால் கொடுக்கும்போது, இருவரையும் சிவபெருமான் ஆட்கொண்டார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் சிறப்பாக போற்றப்படுகின்றன. இவரை 'அஷ்ட பைரவர்' மற்றும் 'சட்டநாதர்' என சிறப்புப்படுத்தி அழைக்கிறார்கள். 

Mar 06, 2025

கர்வால் கமலேஷ்வர் மகாதேவ் என்னும் சிவன் கோயில்.

உத்தர்கண்ட் மாநிலம் கர்வால் பகுதியில் உள்ளது கமலேஷ்வர் மகாதேவ் என்னும் சிவன் கோயில்.இங்கு கார்த்திகை மாத சதுர்த்தசியன்று இரவில் விளக்கை கையில் ஏந்தியபடி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும். அசுரர்களை அழிக்க மகாவிஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரம் தேவைப்பட்டது.அதற்காக இங்கு தவமிருந்து சிவபெருமானை பூஜித்தார். அப்போது ஆயிரம் தாமரை மலர்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய தயாரானார். ஆனால் எதிர்பாராத விதமாக ,அதில் ஒரு மலர் காணாமல் போனது.உடனே தாமரை போன்ற தன் கண்ணையே சிவனுக்கு சமர்ப்பிக்கலாம் என பிடுங்க முயன்றார். அப்போது, 'உம் பக்தியை சோதிக்கவே இப்படி செய்தோம்' என அசரீரி கேட்டது.சிவனின் திருவிளையாடலை எண்ணி கண்ணீர் சிந்திய மகாவிஷ்ணுவின் முன் சுதர்சன சக்கரம் தோன்றியது. அதைப் பெற்றுக் கொண்ட மகாவிஷ்ணு போரில் அசுரர்களை அழித்தார். தாமரை (கமலம்) மலரைக் கொண்டு வழிபட்டதால் 'கமலேஷ்வரர்' என சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது. இமயமலையில் உள்ள ஐந்து மகேஷ்வர் பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.பார்வதியை சிவன் திருமணம் செய்த நாளான மகாசிவராத்திரி இங்கு முக்கிய விழா. இந்நாளில் விரதம் இருந்து சுவாமிக்கு அபிஷேகமும் பழ நைவேத்யமும் செய்கின்றனர்.வசந்த பஞ்சமியை ஒட்டி வரும் அச்ரஸ் சப்தமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.அன்றுகமலேஷ்வரருக்கு 52 வகைஉணவுகள்நைவேத்யம்செய்யப்படுகிறது.சரஸ்வதி, கங்கை, அன்னபூரணிக்கு தனி சன்னதிகள் உள்ளன.

Mar 06, 2025

சிவபெருமானின் ஐந்து சபைகள்

1. சித்சபை - நடராஜரின் இருப்பிடம். 2.கனக சபை - அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும் இடம். 3. தேவ சபை- தீட்சிதர்கள் கூடும் சபை. 4. நிருத்த சபை -உருவங்கள் கொண்ட சபை. 5. ராஜ சபை- 1000 கால் மண்டபம்.

Feb 27, 2025

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில்லிங்க வடிவ ரங்கநாதர்

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் ரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவலிங்கம் போல சதுர வடிவில் ரங்கநாதர் காட்சி தருகிறார்.திருமாலை மணக்கோலத்தில் காண இங்கு கருடாழ்வார் தவமிருந்தார். திருமாலும் காட்சியளிக்க, அந்த இடத்தில் சுயம்புவாக திருமால் எழுந்தருளினார். பின்னாளில் காரை மரங்கள் நிறைந்த காடாக இப்பகுதி இருந்தது. அங்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று குறிப்பிட்ட இடத்தில் தினமும் பால் சொரிந்தது. தோண்டிய போது ரத்தம் பீறிட்டது. அந்த இடத்தில் சுயம்புவாக தான் இருப்பதை அசரீரியாகத் தெரிவித்தார் திருமால். அவருக்கு கோயில் கட்டப்பட்டது.கருவறையில் மூலவர் சதுரபீடமாக இருக்கிறார். இவரை ரங்கநாதர், வெங்கடேசப்பெருமாள் என அழைக்கின்றனர். பிரம்ம, கருட தீர்த்தங்கள் உள்ளன. வேணுகோபாலர், சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. மூலவரை பார்த்தபடி அனுமன் உள்ளார். இவரது சிலையும் பெரிய சதுரக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.கோயிலுக்கு அருகிலுள்ள மலை மீது தாயார் சன்னதி உள்ளது. 'பெட்டத்தம்மன்' என அழைக்கின்றனர். மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் மலைக்கோயிலில் உள்ள தாயாரை கும்பத்தில் எழுந்தருளச் செய்து அடிவாரக் கோயிலுக்கு கொண்டு வருவர். அதை கருவறையில் வைத்து பூஜை நடத்துவர். மறுநாள் அதிகாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். ரங்கநாதருக்கு வலது புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனி சன்னதி கட்டப்பட்டது.இங்கு வரும் பக்தர்களுக்கு சடாரி வைப்பதில்லை.ராம பாணத்தால் ஆசியளிக்கின்றனர். இதற்குள் திருமாலின் ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவங்கள் உள்ளன. மாசிமகத்தன்று சுவாமி தேரில் எழுந்தருள்வார். தேர் நிலைக்கு வந்ததும்,பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவை கலந்த பிரசாதத்தை ஏந்தி, 'ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,' எனச் சொல்லி ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். இதற்கு 'கவாள சேவை' என்று பெயர்.தேரோட்டத்தின் போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் 'தண்ணீர் சேவை', கையில் பந்தம் ஏந்திக் கொள்ளும் 'பந்த சேவையை' பக்தர்கள் வேண்டுதலாகச் செய்கின்றனர்.

Feb 27, 2025

கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோயில் ஒரு முக பிரம்மா.

 நான்கு முக பிரம்மாவை, ஒரு முகத்துடன் பார்க்க விரும்பினால் மதுரை யாணை அருகிலுள்ள கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோயிலுக்கு செல்லுங்கள்.பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அசுரர்கள் பறித்துச்  சென்றனர். ஹயக்ரீவ மூர்த்தி அவதரித்து,அவற்றைமீட்டுகொடுத்தார்பெருமாள்.இவரை வழிபடவந்தபிரம்மா,ஒருமுகத்துடன்இங்கிருக்கிறார்.இக்கோயிலுக்குஅருகில்பிள்ளைலோகாச்சாரியாரின்பிருந்தாவனம் உள்ளது. அந்நியப் படையெடுப்பின் போது  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதப்பெருமாளின் உற்சவர் சிலையை காப்பாற்றியவர் இவரே. ரங்கநாதர் சிலையை இங்குள்ள குகையில் வைத்தே பாதுகாத்தார்.

Feb 20, 2025

ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்ட சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் ஸ்ரீராமர். ( திருப்பிரையாரப்பன் )

பகவான் மகாவிஷ்ணு, பெருமாள் மற்றும் குருவாயூரப்பன் போன்ற இறை மூர்த்தங்கள் கைகளில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஆனால், ஸ்ரீராமர் கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் கோயில் கேரளாவில் உள்ள திருச்சூரில், திருப்பிரையார் என்னும் ஊரில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலின் மூலவர் ஸ்ரீராமபிரான் திருப்பிரையாரப்பன் என்று அழைக்கப்படுகிறார். புராணத்தின்படி இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ராமபிரானை துவாபர யுகத்தின்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. துவாபர யுகத்தின் முடிவில் துவாரகை கடலில் மூழ்கியது. அப்போது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வழிபட்ட ராமபிரான் சிலையும் கடலில் மூழ்கியது. பின்பு கேரளாவின் செட்டுவா கடலில் இருந்து மீனவர்களால் மீட்கப்பட்டு அங்கிருந்த ஆட்சியாளரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. பின்பு திருப்பிரையாரில் ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயம் உண்டாக்கப்பட்டது என்கிறார்கள்.இந்தக் கோயிலில் ஸ்ரீராமபிரான் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், வில் மற்றும் அட்சமாலையுடன் காட்சியளிக்கிறார். இங்கு ஸ்ரீராமர் கோயிலுக்கு அருகில் சிவன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஸ்ரீகிருஷ்ணர், சாஸ்தா போன்ற தெய்வங்களுக்கும் சிறு சன்னிதிகள் உள்ளன.கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் பிரபலமான நான்கு கோயில்கள் உள்ளன. தசரத சக்கரவர்த்தியின் நான்கு மகன்களான ராமர், லட்சுமணன், பரதன், மற்றும் சத்ருக்கனுக்காக கேரளத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு கோயில்களில் இது முதன்மையான ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை. எனவே திருவிழாக்களின்போது இங்கு கொடியேற்றம் கிடையாது.இங்கு வெடி வழிபாடு மிக முக்கியமான சடங்காகக் கருதப்படுகிறது. அசோகவனத்தில் சீதையை கண்ட பிறகு, ‘கண்டேன் சீதையை’ என்ற தகவலை ஸ்ரீராமரிடம் சொல்லும்போது ஆஞ்சனேயர் வெடி வெடித்து அந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியோடு சொன்னார் என்கிறது புராணம். அதை ஒட்டி இந்தக் கோயிலில் பக்தர்கள் தங்களது வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் வெடி வெடித்து அதன் மூலமாக நிறைவேற்றுகிறார்கள்.இந்தக் கோயில் மர வேலைப்பாடுகளால் அழகுற திகழ்கிறது. ஏராளமான பழங்கால சுவர் ஓவியங்களையும் கொண்டுள்ளது. ராமாயணத்தின் பல காட்சிகள் சிற்பங்களாக வட்ட வடிவ கருவறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் பூரம் மற்றும் ஏகாதசி உள்ளிட்ட திருவிழாக்கள் இங்கு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. திருவிழாவின்போது 21 யானைகளுடன் ஐயப்பன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்.

Feb 13, 2025

தஞ்சைப் பெரியகோயில் ஆயிரம் ஆண்டு அதிசயம்.

ஆகாச வடிவத்தைப் பறைசாற்றும் வடிவம்.தஞ்சை பெரிய கோவிலில் கருவறையில் உள்ள12 அடி சிவலிங்கத்தை சுற்றிக்6அடி இடைவெளி விட்டு மற்றொரு வலிமையான சுவர் கட்டப்பட்டுள்ளது அவைகளின் மீதுதான் அடுக்குகளைக் கொண்ட இந்த மாபெரும் விமானம் கட்டப்பட்டுள்ளது. அடுக்குகளின் நடுப்பகுதி வெற்றிடமாகவே உள்ளதுதான் இந்தக் கட்டடக் கலையின் மற்றொரு அதிசயம்.14வது அடுக்கின் மீது88டன் எடையுடைய சிகர கல் மற்றும்12 அடி உயர கும்பக் கலசத்தைத் தாங்கியுள்ள மேல் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தனதுஎடையின் வலிமையால் அதன் கீழுள்ள மொத்த கட்டமைப்பையும் உறுதி குலையாமல் அழுத்தி நிற்கச் செய்கிறது இது தான் அந் நாளைய தமிழர் அறிந்திருந்த கட்டடக் கலையின் சிறப்பாகும்.கருவறையின் மீது கட்டிய மிகப்பெரிய விமானமே இக்கோயிலின் பெரும் சிறப்பாக. போற்றப்படுகிறது.தஞ்சை பெரிய கோவிலின் விமானம்216(66 மீட்டர்) அடிகள் உயரம் கொண்டது. இந்த விமானம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல், கிரானைட் ஆகும். கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கலசம், ஒரே கல்லால் செய்யப்பட்டு, 80 டன் எடையுடையது.

Feb 06, 2025

திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில் !!

பகைக் கிரகங்களான சூரியனும் சனியும் நேருக்கு நேர் நட்பு நிலையில் காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலம் திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீசுவரர் திருக்கோயில் ஆகும்.இந்தக் கோயிலின் சிறப்பு மூர்த்தி வெள்ளைப்பிள்ளையார் மற்றும் கடல் நுரையால் செய்யப்பட்ட இந்த மூர்த்தியை இந்திரன் பிரதிஷ்டைசெய்தார். காவிரி வலமாகச் சுழித்துச் செல்லுமிடத்தில் இருப்பதால்,இத்தலத்தின் பெயர் வலஞ்சுழி சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25-வது சிவத்தலமாக திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் உள்ளது. சம்பந்தர், அப்பர் ஆகியோர் இக்கோயிலில் பாடல் பாடியுள்ளனர்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 19 20

AD's



More News