25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆன்மீகம்

Jul 06, 2023

.சண்டி சேவாலயம் ( "சண்டி ஹோமம்" )

.சண்டி சேவாலயம் என்றால்  ,தேவிக்கு மங்கள சண்டிகா என்கிற ஒரு பெயரும் உண்டு. தூர்க்கையின்அருளை பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமம் தான் "சண்டி ஹோமம்"எனப்படும்.இந்த ஹோமம் செய்வதற்கு பல வருடங்கள் ஹோமபூஜை செய்வதில் அனுபவம் பெற்ற ' 9 வேதியர்களை கொண்டுசெய்யப்படுவதால் நிச்சயமான பலன்களை ஹோம பூஜைசெய்பவர்களுக்கு தருகின்றது. உங்கள் சார்பாக  கோயிலிலோ, ஹோமம் செய்வதற்கான பொருட்கள் மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் உணவேதும் அருந்தாமல் இருந்து ஹோமத்தில் கொள்ள வேண்டும் தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி.. சண்டி ஹோமம் என்பது ஒரு அற்புதமான ஹோமம். ஆடி வெள்ளிக்கிழமை ஆடி பௌர்ணமியை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும்சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வம். அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகலும்.தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் மன நிம்மதி ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சண்டி ஹோமம் என்பது ஒரு அற்புதமான ஹோமம்.பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

Jun 29, 2023

திருசெந்தூர் முருகன்

திருசெந்தூர் மூலவருக்கு தினமும்தூய வெள்ளை நிற ஆடையே அணியப்படுகிறதுதிருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்இதனால்இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூயவெள்ளை நிற ஆடையேஅணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள்அணிவிக்கப்படும்.மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர்உண்டு திருசெந்தூர் கோவிலில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது .இந்தகுகைக்கு முன்பு உள்ள கந்தன் மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் .

Jun 22, 2023

நீடித்த பிறை தரிசனம்,நீடுலக வாழ்வு தரும்

மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால்ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம்தடையின்றி நடக்கும்.ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்டகடன் தீரும்.பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில்புகழ் ஓங்கும்.வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.நீடித்த பிறை தரிசனம், நீடுலக வாழ்வு தரும்(முக்திப்பேறு)

Jun 22, 2023

"ஸ்ரீ நாறும்பூநாதர் " கடையார்ச்சுனம் சுயம்பு மூர்த்தி

200 வருடங்கள் பழமையானது இந்த ஆலயம். இத்தல அம்பாளின் திருநாமம் கோமதியம்மாள் என்பதாகும். அர்ச்சுனம்' என்பது மருத மரத்தைக் குறிக்கும். மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலங்கள் அர்ச்சுனத் தலங்கள்" எனப் போற்றப்படுகின்றன. 'தலையார்ச்சுனம்' என்பது ஸ்ரீசைலம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் 'இடையார்ச்சுனம்" என்றும், 'மத்தியார்ச்சுனம்* என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் *திருப்புடைமருதூரில் உள்ள ஸ்ரீநாறும்பூநாதர் கோவில், கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது. 1200 வருடங்கள்பழமையான இந்த ஆலயத்தில், மூலவர் ஸ்ரீநாறும்பூநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 

Jun 15, 2023

“ திருநாவுக்கரசர்” ஈசனே கொடுத்த பட்டம்

திரு நாவுக்கே அரசன் என்று அந்த  ஈசனே கொடுத்த பட்டம் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசு நாயனார் சைவ சமயக் குரவர்கள் நால்வரில்மற்றும் தேவார மூவர்களில்,வேளாளர்' குல நாயன்மார்.இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின்தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனைதொண்டு வழியில்வழிபட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.சமணசமயத்தைச்சேர்ந்தமன்னன்மகேந்திரபல்லவன்திருநாவுக்கரசரைப்பலவிதங்களில்துன்புறுத்தினான்.அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால்  வென்றார் நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மருணீக்கியார். சமண சமயத்தைத் தழுவிய போது கொண்ட பெயர்-தருமசேனர் .நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயர்-திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் அன்போடு அழைத்தமையால் வந்த பெயர்-அப்பர் .உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்-உழவாரத் தொண்டர். தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்-தாண்டகவேந்தர் -

Jun 08, 2023

திருப்பதி ஸ்ரீனிவாசனின் தாயார்  வகுளாதேவி

திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்..திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும். திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்..திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்.திருப்பதி அன்னதான மண்டபத்திற்கு நேராக இருக்கும் வகுளா தேவி அங்கு நடைபெறும் அன்னதானத்தை, அன்னதான மண்டபத்திலிருக்கும் சிறு துவாரத்தின் மூலம் மேற்பார்வையிடுவதாக ஐதீகம்திருப்பதி வெங்கடேஸ்வரரை தனதுமகன் போல பாவித்து அவரை அன்புடன் பார்த்துக் கொண்டவர் வகுளா தேவி அம்மன் ஆவாள்.குடும்பத்தில் ஒற்றுமையும்,அன்பும், திருமண வாழ்வு இன்பமாகஅமையவும்,குணத்திலும்,ஞானத்திலும் சிறந்து விளங்கும் நல்ல குழந்தைகள் பிறக்கவும்,தாயுள்ளம் கொண்ட வகுளாதேவியை நாமும் வழிபட நமக்கு நல்ல குழநதைகள்  பாக்கியம் கிட்டும்.எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

Jun 01, 2023

அன்ன பூரணியின் அருள்

தனஞ்செயன் தன்னை அன்ன  தோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான்.முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.தனஞ்செயனுக்கு அந்த உணவு அற்பமாகக் தோன்றியது. எனவே சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். முனிவர்  அப்படி அன்னத்தை அவமானப் படுத்தியதாலேயே ,இப்போது இப்படி இருக்கிறாய்.அன்ன பூரணியை அடைந்து ஆராதித்தால் அன்ன பூரணியின்  அருள் குறைவின்றி கிடைக்கும் என்றார்.  எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், திருமகளும் குடியேறுவாள்.

May 25, 2023

சிவபெருமானுக்கு பிடித்தமான   வில்வ இலை

அகில உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வமாக திகழ்பவர் சிவபெருமானே. சிவபெருமானுக்கு பிடித்தமான பொருளாக கருதப்படுகிறது வில்வ இலை. பல வகையான வாசனை மிகுந்த மலர்களை படைப்பதை விட வில்வ இலையை நாம் சிவபெருமானுக்கு படைப்பதால் அவர் பல மடங்கு சந்தோஷம் அடைவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த வில்வ இலையை நாம் மூன்று இலைகள் கொண்ட காம்பு இருப்பது போல் படைக்க வேண்டும். வில்வ இலை வாடினாலும் அதன் மகத்துவம் குறையாது என்பதால் ஒருமுறை படைத்த அதே வில்வ இலையை மறுநாளும் நாம் படைக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. படைப்பதற்கு முன்பாக அந்த இலையை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு படைக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும்.சிவபெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தேன். சுத்தமான தேனை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைப்பதன் மூலம் நம்முடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் நீங்கி தூய மனம் பெறுவோம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் ஏற்படும். இந்த தேனை பூஜை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.

May 18, 2023

பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் ஏழைகளுக்கு சாப்பிட கொடுக்க....

பாசிப்பருப்பை வாங்கி உங்களால் எந்த அளவுக்கு தானம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தானம் செய்து வாருங்கள். பண கஷ்டங்கள் எல்லாம் குறையும்.கோவிலில் பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் செய்து ஏழைகளுக்கு சாப்பிட கொடுப்பது ரொம்ப ரொம்பவிசேஷம்.பாசிப்பருப்பு பாயாசம் உங்கள் கையாலேயே செய்து கொண்டு போய் ஆசிரமத்தில் அன்னதானம் செய்யுங்கள்.கடைகளில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பை வாங்கி காக்கை குருவிகளுக்கு சாப்பிடகொடுப்பது ரொம்ப நல்லது.உங்கள் கையால் பாசிப்பருப்பை எவ்வளவு,பசுமாட்டிற்குகொடுக்கிறீர்களோ,அவ்வளவுக்குஅவ்வளவு,செல்வசெழிப்புகூடிக்கொண்டே செல்லும்.

May 11, 2023

வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மாற்றி கட்டினால் விசேஷம்

எந்த ஒரு வீட்டில் காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளையில் விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒலிக்கிறதோ அங்கு திருமகள் குடியேற விரும்புவாள்.வாரத்திற்கு ஒருமுறையாவது வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது.ஊதுபத்தி ஏற்றும் போது இரண்டு ஊதுபத்தி ஏற்ற வேண்டும்.மாதத்தில் இரண்டு முறையாவது வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மாற்றி கட்டினால் விசேஷம்.ஸ்வாமிக்கு வைக்கும் சந்தனம்,குங்குமம் தனியாகவும், நாம் வைத்துக்கொள்ள தனியாகவும் இருக்க வேண்டும்.பூஜை அறையில் கட்டாயமாக விபூதி. சந்தனம், குங்குமம், கற்பூரம் இவை அனைத்தும் எப்போதுமே இருக்க வேண்டும்.

1 2 ... 12 13 14 15 16 17 18 19 20 21

AD's



More News