1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்', 2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்', 3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்', 4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்', 5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.
ஆலங்குடி - குரு கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திருநாகேஸ்வரம் - ராகு கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திங்களூர் - சந்திரன்கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.சூரியனார் கோயில் - சூரியன்கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.கஞ்சனூர் - சுக்கிரன்கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.வைதீஸ்வரன் கோயில் -செவ்வாய் கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திருவெங்காடு - புதன் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.கீழ் பெரும்பள்ளம் - கேதுகும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திருநள்ளார்-சனி கும்பகோணத்தில் இருந்து 55 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஒரு பக்கம் வயல்வெளி, இன்னொரு பக்கம் ஏரி என்று சிறு குன்றின் மீது அமைந்துள்ளது பனமலை சிவன் கோயில். இந்தக் கோயிலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலும் உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக உள்ளன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனமலை என்னும் அழகிய கிராமத்தில்தான் இக்கோயில் அமைந்துள்ளது.தமிழ்நாட்டின் முதல் கருங்கல் கோயில் இதுதான் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காஞ்சி கைலாசநாதர் கோயில்தான் உலகின் முதல் கருங்கல் கோயில் என்று கூறுவார்கள். இந்த பனமலை கோயிலும், காஞ்சி கைலாசநாதர் கோயிலும் உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இரண்டு கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவ்விரு கோயில்களைக் கட்டியதும் ஒரே மன்னர் என்பதால் இவ்வாறு கூறுகிறார்கள்.இக்கோயிலுக்குச் செல்லும் மலையடிவாரத்தில் இருக்கும் விநாயகர் கோயிலை பாறையிலேயே குடைந்திருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முகப்பு மண்டபத்தை அமைத்துள்ளனர். இந்த மலையில் இயற்கையாக அமைந்த சுணைகளும் உள்ளன. வலது பக்கத்தில் பச்சைப்பசேலேன்று வயல்வெளியும்,இடதுபக்கம்பிரம்மாண்டமானஏரியும்அமைந்திருக்கிறது.இக்கோயிலை1300 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் நரசிம்மன் என்ற ராஜசிம்ம பல்லவ மன்னனே8ம் நூற்றாண்டில் கட்டினார். இந்த ராஜசிம்ம பல்லவ மன்னன்தான் ஒரே விதத்தில் மூன்று கோயில்களை கட்டியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், பனமலை சிவன் கோயில் ஆகியவையாகும்.இந்த ஊருக்கு பனைமலை என்று பெயர் வரக்காரணம் இந்த மலையில் நிறைய பனை மரங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு பல்லவ மன்னன்தாளகிரீஸ்வரர் என்று பெயர் வைத்துள்ளார்.‘தாள்’ என்பதுபனை மரத்தை குறிக்கும் சொல்லாகும். பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்டசிவன் என்பதால் இது இத்தலம் பனமலைஎன்று அழைக்கப்படுகிறது.மூலவருக்குப் பின்புறம் சோமாஸ்கந்தர் காட்சி தருகிறார். கோயில் கருவறையைச் சுற்றி நிறைய சிற்பங்கள் காணப்படுகின்றன. கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி இக்கோயிலை கட்டியிருப்பது தனிச் சிறப்பு. மேலும், இக்கோயிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சுவர் ஓவியம் ஒன்று இக்கோயில் கருவறையில் உள்ளது. அந்த ஓவியத்தை இப்போது பார்ப்பதற்கும் கலைநயத்துடனும், உயிரோட்டத்துடனும் உள்ளது. தற்போது இந்த ஓவியத்தில் எஞ்சியிருப்பது பார்வதி தேவி மட்டும்தான். இவருடைய நகைகள் அவ்வளவு நுணுக்கத்துடனும், கலைநயத்துடனும் வரையப்பட்டிருக்கிறது.பார்வதி தேவி எதிரே இருக்கும் நடராஜரை பார்ப்பது போல இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. ஆனால், நடராஜரின் ஓவியம் முற்றிலுமாக சிதைந்த நிலையில் உள்ளது. கோயிலுக்கு பின்புறம் சுரங்கப்பாதை இருப்பதாகவும், அது செஞ்சிக்கோட்டை வரை செல்வதாகவும் சொல்லப்படுகிறது.இக்கோயிலின் அருகில் இருக்கும் ஏரிதான் பனமலை கிராமத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்தக் கோயிலைக் கட்டிய காலத்தில்தான் இந்த ஏரியையும் வெட்டியிருக்கிறார்கள். பல்லவர்கள் எங்கே கோயில் கட்டினாலும் அங்கு ஓர் நீர்நிலையை அமைப்பது வழக்கம்.இந்த அதிசயக் கோயிலை ஒருமுறையாவது சென்று தரிசித்து ஈசனின் அருளைப் பெறுவது சிறப்பாகும்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே அமைந்துள்ளது திருநந்திக்கரை குடைவரை குகைக்கோயில். கி.பி.7ம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட பல்லவர் கால குகைக்கோயில் இது.சமணர்களின்வழிபாட்டுக்காகநிறுவப்பட்டஇக்கோயில்பிற்காலத்திலஇந்துகோயிலாகமாறிவிட்டது.இங்குள்ள சுதை ஓவியங்கள் கி.பி.9 மற்றும்10ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். சில சுவரோவியங்கள் கேரள பாணியில் அமைந்துள்ளன. இவை ராமாயணம் மற்றும் மகாபாரத நிகழ்வுக் காட்சிகளை சித்தரிக்கும் வண்ணம் உள்ளன. இயற்கையான தாவர நிறங்கள் மற்றும் நிறமிகளைக்கொண்டு இந்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலின் ஒரு பகுதியாகும். இது மிகவும் தொன்மையான குடைவரை கோயில்.1956ம் ஆண்டு வரை கேரளாஅரசின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. தற்போது தமிழ்நாடு அரசின்கீழ் உள்ளது.கி.பி.8ம் நூற்றாண்டில் வீரநந்தி என்றசமண முனிவர் இக்கோயிலில் தங்கிசமயப் பணியாற்றியுள்ளார். கி.பி.1003ம் ஆண்டுமுதலாம் ராஜராஜ சோழன் இக்கோயிலில் தங்கிதனது பிறந்த நாளைக் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.முகப்பின் மேற்குப்பாறை சுவரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் திருநந்திக்கரை மகாதேவருக்கு தன் பிறந்த நாளான ஐப்பசி சதய நாளன்று விழா எடுக்கவும், ஆற்றில் நீராட்டவும், நாழி நெய் ஊற்றி நந்தா விளக்கேற்றவும் இந்நாட்டில் இருந்த முட்டம் என்னும் ஊரை மும்முடிச் சோழநல்லூர் என பெயர் மாற்றம் செய்து தானமாக வழங்கிய செய்தியினை பதிவு செய்துள்ளது.திருநந்திக்கரையில் இரண்டுமுக்கியமான சிவன் கோயில்கள் உள்ளன. ஒன்று, திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில்மற்றது திருநந்திக்கரை குகைக் கோயில். தெற்குநோக்கிய திருநந்திக்கரை குன்றின் சரிவில் உள்ளதுஇக்குடைவரை கோயில். இது தரை மட்டத்திலிருந்து4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து குகைத்தளத்திற்கு செல்வதற்கு10 படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இதில்இரண்டு படிகள் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வெட்டப்பட்டது.இக்குடைவரைக் குகையில் முகப்பு மண்டபம், முக மண்டபம், உள் மண்டபம், கருவறைஎன உள்ளன. முகப்பு மண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம்செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுதைஓவியங்கள் பல அழிந்து காணப்படுகின்றன. உள் மண்டபத்தின் மேற்குச் சுவரில் கருவறைஅகழப்பட்டுள்ளது.இதில் சிவலிங்கத்தின் பாணம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலில் நான்குவட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்து .
இந்தியாவின் கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள முழங்குன்னு என்னும் இடத்தில் இருக்கும் பழைமையான கோயில்தான் மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயிலாகும். பரசுராமர் உருவாக்கிய108 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு மிருதங்க ஷைலேஸ்வரி என்று பெயர் வரக் காரணம், மிருதங்கம் இந்தியாவின் பழைமையான ஒரு இசைக் கருவியாகும். விநாயகப் பெருமான், நந்திகேஸ்வரர் ஆகியோரிடம் இந்த மிருதங்கம் இருப்பதை பார்த்திருப்போம். மிருதங்கத்தை கடவுளின் தேவ வாத்தியம் என்று கூறுவார்கள். வானிலிருந்து மிருதங்க வடிவிலான எரிகல் ஒன்று இந்த இடத்தில் வந்து விழுந்ததாகவும், அந்தக் கல்லில் அம்பிகையின் சக்தியை பரசுராமர் உணர்ந்ததால் இங்கேயே அந்த அம்பிகைக்கென்று ஒரு கோயிலை எழுப்பினார் என்பது புராணக்கதை.மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலில்தான் கதகளி நடனம் உருவானதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் சக்தி தேவி காளியாகவும், சரஸ்வதியாகவும், மகாலட்சுமியாகவும் மூன்று வடிவில் காட்சி தருகிறார். இக்கோயிலில் இருக்கும் தேவி சிலையின் மதிப்பு 1.5 கோடியாகும். இக்கோயிலுக்கு எந்தக் காவலும் கிடையாது என்பதால் திருடர்களுக்கு இச்சிலையை திருடிச்செல்வது என்பது எளிதானது.1979ம் ஆண்டு முதல் முதலில் இந்த தேவி சிலையானது திருடுபோனது. எனினும், திருடர்கள் சிறிது தூரத்திலேயே இச்சிலையை போட்டுவிட்டு சென்று விட்டனர். அதற்கான காரணம் தெரியவில்லை. சிலையும் கோயிலுக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது.சில வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக இந்தச் சிலை திருடப்பட்டது. இந்த முறை போலீசால் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. எனினும், கோயில் தேவஸ்தானத்திலிருந்து சிலை வெகுதொலைவு சென்றுவிட்டதாகவும் நிச்சயமாக42 நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே சிலை42வது நாள் பாலகாட்டின் அருகில் உள்ள நெடுஞ்சாலை தமிழ்நாட்டிற்கு பக்கத்தில் கிடைத்தது. இந்த முறை ஒரு கடிதம் அதனுடன் இருந்தது. இந்த சிலை மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலை சேர்ந்தது. இதற்கு மேல் எங்களால் இந்தச் சிலையை எடுத்து செல்ல முடியவில்லை என்று எழுதியிருந்தது.மூன்றாவது முறையாக கர்நாடகாவை சேர்ந்த திருடர்கள் இந்தச் சிலையை வயநாடு வழியாக கடத்திச்செல்லும்போது ஒரு லாட்ஜில் இச்சிலையை வைத்து அதற்கு பூ சாத்தி, தீபம் ஏற்றி பூஜை செய்துள்ளனர். பிறகு அவர்களே போலீசாருக்கு போன் செய்து சிலை இருக்கும் லாட்ஜ் பற்றி தகவல் சொல்லி, வந்து சிலையை எடுத்துச் செல்ல சொல்லிவிட்டு சென்று விட்டனராம்.சில காலம் கழித்து வேறு ஒரு திருட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக தேவியின் சிலையை திருடிய திருடர்கள் போலீசிடம் மாட்டிக்கொள்ள அவர்களிடம்,‘எதற்காக பாதியிலேயே மிருதங்க ஷைலேஸ்வரி சிலையை விட்டுவிட்டு சென்றீர்கள்’ என்று போலீஸ் கேட்டதற்கு இருவருமே ஒரே மாதிரியான பதிலையே கூறினார்கள். அதாவது அந்தச் சிலையை கடத்தி சென்றுக்கொண்டிருக்கும்போது அந்தத் திருடர்களுக்கு,‘தாங்கள் யார்? எதற்காக இந்தச் சிலையை கடத்திச் செல்கிறோம்? எங்கே எடுத்துச் செல்ல வேண்டும்?’ என்பது போன்ற நினைவுகள் அனைத்தும் மறந்து போய்விட்டதாம்.இதனால் பயந்துபோன அந்தத் திருடர்கள் இந்தச் சிலையை பாதியிலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம். இன்னாள் வரை இக்கோயிலுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. எனினும் இத்தகைய மதிப்புமிக்க சிலையை யார் திருடி சென்றாலுமே தேவியின் சிலையானது தன்னுடைய கோயிலுக்கே திரும்ப வந்து சேர்ந்துவிடுவது ஆச்சர்யமான விஷயம். இது தேவியின் மகிமைதான் என்று அங்கிருக்கும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இத்தகைய செய்திகளை கேட்கும்போது அதிசயம் மிக்க இந்தக் கோயிலை ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது அல்லவா?
அருள்நலம் சார்ந்த சான்றோர்கள் சிவனருட் செல்வர்கள், நாயன்மார்கள் ஆகியோர் சிவத் தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்துள்ளார்கள். அப்பெரு மக்கள் உணர்த்திய, தமிழ்நாட்டில் காசிக்கு சமமான ,ஆறு சிவத்தலங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.அந்த ஆறு சிவத்தலங்கள்1. திருவெண்காடு2. திருவையாறு3.மயிலாடுதுறை4. திருவிடைமருதூர்5. திருச்சாய்க்காடு6.ஸ்ரீவாஞ்சியம்காசிக்கு சமமான ஆறு ஆலயங்கள்.
முருகன் என்றதும் நம் நினைவிற்கு வருவது அறுபடை வீடுகள்தான். அதைத் தவிர, பழைமையான மற்றும் சக்தி வாய்ந்த முருகன் கோயில்கள் இருந்தாலும், அவை குறித்தான தகவல்கள் பலருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் பாடல்கள் மூலமாகவே பிரபலமடைந்தது. இத்தலம் காவடி எடுக்கும் திருவிழாவிற்கு மிகவும் பெயர் போனதாகும். இங்குள்ள முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார். இந்த மூவரும் அமர்ந்திருக்கும் மயிலுக்கு தரையிலிருந்து ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.பெரும்பாலான கோயில்களில் முருகன் அமர்ந்திருக்கும் மயிலானது வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் மயில் இடது பக்கம் திரும்பியிருக்கும். இது கந்த புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுக்குடி முருகன், சிக்கல் முருகன், எண்கண் முருகன் ஆகிய மூன்று சிலையையும் ஒரே சிற்பியே செதுக்கினார் .ஒரு சமயம் நாகப்பட்டினத்தின் அருகில் சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அழகிய முருகன் சிலை ஒன்றை செதுக்கினார். அப்போது ஆட்சியில் இருந்த பராந்தக சோழன் அந்தச் சிலையின் அழகில் மயங்கி இதுபோன்று இன்னொரு சிற்பத்தை அந்த சிற்பி வடித்துவிட கூடாது என்பதற்கு அவரது இரு கைகளில் உள்ள கட்டை விரலை வெட்டி விடுகிறான். இதனால் வருத்தமடைந்த சிற்பி அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று விடுகிறார். சிற்பி மிகவும் கடுமையாக முயற்சித்து இன்னொரு சிலையை வடிக்கிறார். அதை அந்த ஊரை ஆண்ட குறுநில மன்னன் பார்க்கிறான். அந்த சிலையில் ஒளி வீசுகிறது. மயிலுக்கு உயிர் வந்து பறந்து செல்கிறது. அதை பார்த்த அரசன் அதை‘எட்டிப்பிடி’ என்று ஆணையிடுகிறான். அந்த மயிலை காவலர்கள் எட்டிப்பிடிக்கும்போது மயிலின் கால் சிறிதளவு உடைந்து விடுகிறது. பறந்துக்கொண்டிருந்த மயில் அந்த இடத்திலேயே சிலையாக மாறிவிடுகிறது.இந்த,‘எட்டிப்பிடி’ என்னும் வார்த்தைதான் நாளடைவில்,‘எட்டுப்பிடி’ என்றும் பின்பு எட்டுக்குடி என்றும் ஆனது. அதுவே பிற்காலத்தில் ஊரின் பெயராக மாறியது. அந்த சிற்பி வடித்த இன்னொரு சிலையை எண்கண் என்னும் இடத்தில் வைத்தார். சிற்பி முதலில் வடித்த சிலையை சிக்கலிலும், இராண்டாவது வடித்த சிலையை எட்டுக்குடியிலும் வைத்தார். இந்த மூன்று தலங்களில் உள்ள முருகன் சிலையும் ஒரே முகச்சாயலை கொண்டிருக்கும்.எட்டுக்குடி முருகன், பக்தர்கள் தன்னை எந்த கோலத்தை நினைத்து வழிபடுகிறார்களோ அந்தக் கோலத்திலேயே அவர்களுக்குக் காட்சி தரக்கூடியவர். குழந்தையாக நினைத்துப் பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞன் வடிவிலும், வயதானவராக நினைத்துப் பார்த்தால் வயோதிக தோற்றத்திலும் உயிரோட்டமாகக் காட்சி தருகிறார்.சித்திரா பௌர்ணமியன்று இக்கோயிலில் விசேஷ வழிபாடு உண்டு. கோயிலின் முன்பு அமைந்திருக்கும் சரவண பொய்கையின் நீரில் கைப்பட்டாலே பாவம் தீரும் என்று நம்பப்படுகிறது. குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்க, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பாக இருக்க இந்த எட்டுக்குடி முருகனை வேண்டினால் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
‘காலத்திற்கேற்ப மாற்றம்’ என்று சொல்லப்படுவது போல நம்முடைய ஆடை, அணிகலன், தொழில்நுட்பம் என்று நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களுக்கும் பொருந்தும். எல்லாவற்றிலும் மார்டனாக மாறிய பெண்கள் முடியையும் ஃபெதர் கட், லேயர் கட் என்று வெட்டிக்கொண்டார்கள். இருப்பினும் தலைப்பின்னி பூ வைத்து பாரம்பரியமாக இருக்க பிடிக்காத பெண்கள்உண்டா? எந்த காலக்கட்டமாக இருந்தாலும், நிறைய முடி இருக்கும் பெண்களை பார்த்தால் சற்று பொறாமை வரத்தான் செய்யும்.இப்படி பெண்களை பார்த்து பெண்களே பொறாமை படக்கூடிய விஷயத்தை சிற்பமாக வடித்து வைத்திருக்கிறார்கள் தமிழக சிற்பிகள்.எத்தனை கலைநயம், எத்தகைய நேர்த்தி, பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றும் அழகு, இடுப்புக்கு கீழ் வரை செல்லும் கூந்தல், அதை பின்னி போட்டிருக்கும் அழகு. அத்துடன் தலையிலே இருக்கும் அணிகலன்கள் என்று ஒரு சிற்பமே உயிர்பெற்று பெண்ணாக நிற்பது போல தோன்றுகிறது.இந்த சிற்பம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவரக சுவாமி கோவிலிலே தான் உள்ளது. அடுத்து பார்க்கவிருக்கும் ஆப்டிக்கல் இலூசன் சிற்பம் உங்களை நிச்சயமாக பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. கர்நாடக மாநிலத்தில் ஹரிஹரேஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு சிற்பம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்தியது, இந்த சிற்பத்திற்கு தலை ஒன்று தான். ஆனால் உடல்கள்5 உள்ளது. இது கிருஷ்ணரின் சிலை என்று கூறப்படுகிறது. ஒரு தலைக்கு ஐந்து உடல்கள் இருந்தாலும், தலையை எந்த உடலுடன் பொருத்தி பார்த்தாலும் சரியாகவேயிருக்கும். இத்தனைக்கும் ஐந்து உடல்களும் வெவ்வேறு நிலையில் இருக்கும். எனினும் சரியாக பொருந்துவது போல வடிவமைத்த சிற்பியை கலைநயம்,, நேர்த்தியை நினைத்து வியந்து , பார்த்து கொண்டேயிருக்கலாம் இக்கோவில்12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கோவில்களில் வடிவமைக்கப் பட்டிருக்கும் சிலைகளைக் காணும் போது, சிற்பிகள் வடித்தது சிலையா இல்லை உயிர் உள்ள மனிதர்களா? என்று தோன்றும் அளவிற்கு அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.இதுபோன்ற எண்ணற்ற அதிசய சிற்பங்கள் இந்தியா முழுதும் உள்ள கோவில்களில் அமைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் பொறுமையாகவும், நிதானமாகவும் ரசிக்க நேரமிருப்பவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற சிற்பங்களை ரசிப்பதற்கென்றே ஒரு பயணம் மேற் கொள்ளலாம் .
இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும்,. பழம்பெருமை பேசும் கோயில்களும், அதிசயங்களும் நம்மைப் பெருமைக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல், வியக்கவும் வைக்கிறது. அப்படிப்பட்ட ஆச்சர்யப்படுத்தும் கோயில்தான் கர்நாடக மாநிலம், ராய்சூர் மாவட்டத்தில் தேவதுர்கா தாலுகாவில் காப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் தன்னுள் பல அதிசயங்களை அடக்கி வைத்துள்ளது என்று கூறலாம்.இந்தக் கோயில்800 வருடங்கள் பழைமையானதாகும். இக்கோயிலைக் கட்டியவர் கல்யாண சாளுக்கியர் ஆவார். இக்கோயிலில் ஹனுமன் சிலையும் இருக்கிறது..இதில் பழைமையானது லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் சிலையாகும். ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இக்கோயில் சிலையை நேரடியாக சென்று தரிசித்திருக்கிறார்..இக்கோயில் மிகவும் பிரபலமாகும். பெருமாளுக்கு நித்யப்படி பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன. வைணவத் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இங்கே மண்சாளம்மனை கிராமத்துக் கடவுளாக மக்கள் கும்பிடுகிறார்கள். மண்சாளம்மன் 3 அடி உயர சிலையாக இங்கே காட்சி தருகிறார். மண்சாளம்மன் பார்வதி தேவியின் அவதாரம் என்று கூறப்படுகிறது.இக்கோயில் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரர் திருச்சிலைக்கு செய்யப்படும் அபிஷேகத்தின்போது நிகழும் அதிசயத்தைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இச்சிலைக்கு வெந்நீரால் செய்யப்படும் அபிஷேக நீர், கீழே இறங்கும்போது குளிர்ந்த நீராக மாறிவிடுகிறதாம். இச்சிலைக்கு சுடுநீரால் அபிஷேகம் செய்யும்போது, நீர் தலையிலிருந்து கால்களை அடையும்போது குளிர்ந்து விடுகிறது. கால்களில் இருக்கும் நீர் குளிர்ச்சியாகவும், தலை இன்னும் சூடாகவே இருப்பதாகக் கூறுகிறார்கள். இதுவே வயிற்றிலிருந்து நீரை ஊற்றி பார்த்தால் சுடுநீராகவே இருக்கிறதாம். ஆனால், தலையிலிருந்து ஊற்றினால் மட்டுமே குளிர்ந்த நீராக மாறுகிறது.இந்த அதிசயத்தை சிலர் முழுமனதுடன் நம்புகிறார்கள். இன்னும் சிலரோ இதற்கான விளக்கத்தைத் தேடுகிறார்கள். இந்த சிலை வடிவமைக்கப்பட்ட கல்லிற்கு அதை சுற்றியுள்ள வெப்பநிலையை மாற்றக்கூடிய குணமுள்ளதாக சிலர் நம்புகிறார்கள்.அதிசயங்கள் நிறைந்த கோயில்கள் இந்தியாவில் எத்தனையோ உள்ளன. அந்த வகையில் இதுவும் ஒன்றாகும். நிறம் மாறும் லிங்கம், அபிஷேக நெய்யை வெண்ணெய்யாக மாற்றும் அதிசயம் என்று இதுபோன்ற பல அதிசயம் கொண்ட சிலைகள் உள்ளன. இத்தகைய அதிசய கோயிலையும், அதில் ஏற்படும் அதிசய நிகழ்வையும் காண்பதற்காகவே இக்கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் தரிசனத்தைப் பெற்றுத் திரும்புவது மிகவும் விசேஷமாகும்.
உலகின் மிகப்பெரிய விரிகுடாக்களில் ஒன்றான வங்காள விரிகுடாவின் கரையோரத்தில், கடல் மற்றும் அதன் இயற்கையாக நிகழும் பாறை அமைப்புகளிலிருந்து உத்வேகம் பெறும் ஒரு கோயில் வளாகம் உள்ளது. கம்பீரமான கடற்கரைக் கோயில்.இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான மாமல்லபுரத்தில் கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. மூன்று தனித்தனி சன்னதிகள் கொண்ட இந்த வளாகம் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் இரண்டாம் ராஜசிம்ஹாவின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது, அவர் கிபி 700 இல் அரியணையில் ஏறி சுமார் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தியாவின் ஆரம்பகால வரலாற்றில் ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது மற்றும் பல்லவ ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் கலை நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக வளர்ந்தது. மாமல்ல("பெரிய போர்வீரன்" என்று பொருள்படும்) என்ற அடைமொழியை எடுத்துக் கொண்ட முதலாம் நரசிம்மவர்மன், கிபி630 இல் தொடங்கி சுமார்38 ஆண்டுகள் ஆட்சி செய்தார், மேலும் மாமல்லபுரத்தில் குகைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் பெரிய சிற்பங்கள் உட்பட ஏராளமான பாறை வெட்டப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு நிதியுதவி செய்தார். கற்பாறைகள். பல்லவ மன்னர்கள் முதன்மையாக சிவபெருமானை வழிபடும் அதே வேளையில், பிற இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் மற்றும் பிற மத மரபுகள் போன்றவற்றை உருவாக்குவதையும் ஆதரித்தனர்., கோயில் கட்டிடக்கலையை இரண்டு பள்ளிகளாகப் பிரிக்கலாம்: நாகரா , அல்லது வட இந்திய பாரம்பரியம், மற்றும் திராவிடஅல்லது தென்னிந்திய கட்டிடக்கலை. நாகரா மற்றும் திராவிடக் கோயில்கள் இரண்டும் ஒரு முக்கிய சன்னதியைக்( விமானம் ) கொண்டுள்ளது, இது கிராப கிரிஹா (அதாவது"கருப்பை அறை") என்று அழைக்கப்படும் உள் கருவறையைக் கொண்டுள்ளது இது ஷிகாரா எனப்படும் பிரமிடு கோபுரத்தால் உச்சியில் உள்ளது .செல்வாக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது. பாறை வெட்டப்பட்ட கோயில்கள் பெரிய பாறைகளால் கட்டப்பட்டன, கலைஞர்கள் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் ஒரே நேரத்தில் பாறைகளை மேலிருந்து கீழ் வரை செதுக்குவார்கள்.,கட்டிடக்கலை வடிவமாக, பல்லவ கட்டிடக்கலையின் இரண்டு கட்டிடக்கலை கட்டங்களின் உச்சக்கட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது: இது பாறை வெட்டப்பட்ட அமைப்புகளிலிருந்து சுதந்திரமாக நிற்கும் கட்டமைப்பு கோயில்களுக்கு முன்னேற்றத்தை நிரூபிக்கிறது, மேலும் முதிர்ந்த திராவிட கட்டிடக்கலையின் அனைத்து கூறுகளையும் காட்டுகிறது. இது சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட புனித இடங்களுடன் மத நல்லிணக்கத்தைக் குறிக்கிறது, மேலும் பல்லவ அரசியல் மற்றும் பொருளாதார வலிமையின் முக்கிய அடையாளமாகவும் இருந்தது.புராணத்தின் படி, கடலில் உள்ள மாலுமிகள் மற்றும்வணிகர்கள் கோயிலின் சிகரங்களை தொலைவில் இருந்து கண்டறிந்து, வளமான துறைமுக நகரமான மகாபலிபுரத்திற்கு தங்கள் வருகையைக் குறிக்க அந்த கம்பீரமான கோபுரங்களைப் பயன்படுத்தலாம். இந்த வழியில், கோயில் சிவன் மற்றும் விஷ்ணு கடவுள்களுக்கான இல்லமாக மட்டுமல்லாமல், நிலப்பரப்பின் அம்சமாகவும், பெரிய பல்லவ மன்னர்களின் ஆதிக்கத்தின் சின்னமாகவும் இருந்தது.