25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆன்மீகம்

Jan 16, 2025

திருமாலின் சயன கோயில்களின் சிறப்பம்சங்கள்

ஜல சயன பெருமாள் 108 திவ்ய தேசங்களில் 107திவ்ய தேசமாக திருப்பாற்கடல் கூறப்படுகிறது.மனிதர்கள் தங்களுடையை இந்த பூத உடலுடன் தரிசனம் செய்ய முடியாது. ஏனெனில் ஸ்ரீ வைகுண்டத்தில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலை இந்த பிறவிக்கு பின்னரே தரிசிக்க முடியும்.ஸ்தல சயனம்மாமல்லபுரத்தில் உள்ள திருக்கடல்மல்லை ஸ்தல சயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார் திருக்கோயில் 63வது திவ்ய தேச கோயில்காக போற்றப்படுகிறது.இங்கு அமைந்துள்ள திருமால் தனது வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேஷன் மீது சயன நிலையில் காட்சி தருகிறார்.புஜங்க சயனம்ஸ்ரீ ரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக போற்றப்படுகிறது. விண்ணகரத்தில் அமைந்துள்ள திருமால் புஜங்க சயனத்தில் காட்சி தருகிறார். அதாவது ஆதிசேஷன் மீது சயன நிலையில் அருள்பாலிக்கின்றார்.ஸ்ரீரங்கம் கோயில் உருவாக காரணமே உச்சி பிள்ளையாரின் திருவிளையாடல் தான் தெரியுமா?- இதோ புராண கதைஉத்தியோக சயனம்கும்பகோணம் திருக்குடந்தையில் சாரங்கபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது 12வது திவ்ய தேசமாகும். இங்குள்ள திருமால் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து எழுந்து திருமால் பேசுவது போன்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இது வேறு எந்த கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.வீர சயனம்திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில் 59 திவ்ய பிரதேசமாகும். இந்த கோயிலின் சிறப்பு என்ன வென்றால் திருமால் தான் எங்கு உறங்குவது என சாலிஹோத்ர முனிவரிடம் கேட்டார். அப்போது அவர் காட்டிய இடம் தான் தற்போது திருவள்ளூரில் வீர சயன கோலத்தில் வீரராகவப்பெருமாளாக அருள்புரிகிறார்.போக சயனம்திருவள்ளூர், சீர்காழி அருகே அமைந்துள்ள திருச்சிரகூடம் அமைந்துள்ளது. இங்குள்ள தாயார் புண்டரீக வல்லி சமேத கோவிந்தராஜர் பெருமாள் கோயிலில் திருமால் போக சயனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இந்த திருத்தலம் 40வது திவ்ய தேசமாகும்.தர்ப்ப சயனம்இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர் - கல்யாண வல்லி தாயார் அமைந்துள்ள கோயில் 105வது திவ்ய தேச கோயிலாகும். இங்கு ஸ்ரீ ராமர் இளைப்பாற தர்ப்பையில் சயனத்ததாகவும், இந்த தர்ப்ப சயன காட்சியாகவே எம்பெருமான் அருள்பாலிக்கிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.பத்ர சயனம்விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள வடபத்ரசாயி - ஆண்டாள் கோயில். இங்கு எம்பெருமான் ஸ்ரீரங்கமன்னார் பெருமாளாக வடபத்ர சயன கோலத்தில் காட்சி தருகிறார். பத்ர என்றால் ஆலமரத்து இலை என்று பொருள். இது 99வது திவ்ய தேசங்களில் ஒன்று.மாணிக்க சயனம்செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் அமைந்துள்ள கோயில் தான் திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில். திருமால் ஸ்ரீ அரங்க நாயகி சமேத ஸ்ரீ அரங்கநாதர் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள பெருமாள் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளிலும் தரிசிக்கலாம். இது 61வது திவ்ய தேசங்களில் ஒன்று.பாம்பணை சயனம்திருமயம்ஸ்ரீசத்தியமூர்த்திபெருமால் 43வதுதிவ்யதேசமாகும் இங்குசத்தியமூர்த்தி,திருமெய்யர்எனஇரண்டுமூலவர்கள்உள்ளனர்.சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த கோயில் அமைந்துள்ளது.இங்கு பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் பெருமாள் அரைக்கண்ணை மூடிய நிலையில் இதழ்களில் மென்மையான நகைப்புடன் பாம்பணை மேல் வலது கரம் ஆதிசேசனை அணைத்தபடி காட்சி தருகிறார்.

Jan 09, 2025

திருமாலின் சயன கோல வகைகள்

மகாவிஷ்ணு பல ரூபங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அதில் ஒன்று தான் சயன கோலம். சயன கோலத்தின் வகைகள் என்ன, தமிழ்கத்தில் சயன கோலத்தில் உள்ள முக்கிய கோயில்களின் சிறப்பு என்ன என்பதை இங்கு பார்ப்போம். மகாவிஷ்ணுவின் சயனதலங்கள்:ஸ்ரீரங்கம் – வீர சயனம்மகாபலிபுரம் – தல சயனம்திருமயம் – போக சயனம்திருக்கோஷ்டியூர் – பால சயனம்கும்பகோணம் – உத்தான சயனம்திருவனந்தபுரம் – அனந்த சயனம்திருமோகூர் – பிரார்த்தனா சயனம்திருப்புல்லாணி – தர்ப்ப சயனம்திருச்சித்திரக்கூடம் – போக சயனம்திருநீர்மலை – மாணிக்க சயனம்ஸ்ரீவில்லிபுத்தூர் – வடபத்திர சயனம்திருமாலின் 10 வகை சயனங்கள் :1. ஜல சயனம்2. தல சயனம்3. புஜங்க சயனம் (சேஷசயனம்)4. உத்தியோக சயனம்5. வீர சயனம்6. போக சயனம்7. தர்ப்ப சயனம் (தர்ப்ப எனில் தர்ப்பை புல்)8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)9. மாணிக்க சயனம்10. உத்தான சயனம்

Jan 02, 2025

படிப்பில் சிறந்து விளங்க

நம்முடைய குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் முருகப்பெருமான வழிபாட்டை புதன்கிழமை அன்று மேற்கொள்வதால் நம்முடைய குழந்தைகளுக்கு கல்வி அறிவு என்பது சிறந்து இருக்கக்கூடிய விநாயகர் சிலையை அல்லது' படத்தை எடுத்து சுத்தம் செய்து சந்தனம் குங்குமம்  வைத்து, மலர்களால் அர்ச்சனை செய்து எளிமையாக ஏதாவது ஒரு நைவேத்தியத்தை செய்ய வேண்டும். அவருக்கு முன்பாக ஒரு தாம்பூல தட்டை வைத்து தட்டின் மேல் வெற்றிலையை வைத்து அதன் மேல் அச்சு வெல்லம் அதை வாங்கி அதன் மேல் வைத்து மேலே சற்று பெரிய குழியாக செய்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அல்லது பூத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ஏற்றக் கூடிய தீபங்கள் குறைந்த நேரம் தான் எரியும் என்றாலும் படிக்கும் குழந்தைகள் காலையிலேயே இந்த தீபத்தை விநாயகப் பெருமானுக்கு ஏற்றி வைத்து அருகம் புல்லை மாலையாக விநாயகருக்கு சமர்ப்பிக்க படிப்பில் சிறந்து விளங்குவார்கள். விநாயகப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள் நன்றாக படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று பிறகு தலையில் மூன்று முறை கொட்ட வேண்டும். 21 முறை தோப்பு கரணம் போட்டு இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 21 நாட்கள் தீபம்ஏற்றி விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால்  குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு ஞாபக சக்தி அதிகரிக்கும் அறிவுத் திறனும் மேம்படும் இந்தவழிபாட்டினை மேற்கொண்டால்  படிப்பில் சிறந்து விளங்கலாம்.

Dec 26, 2024

("பூலோகக் கைலாசம்') காசியைப் பற்றி பொதுவான செய்திகள்.

காசி மாநகரம் வட இந்தியாவில் திரிவேணிசங்கமம் அமைந்திருக்கும் பிரயாக்ராஜிலிருந்து (அலகாபாத்)120 கி.மீ. தொலைவில் உள்ளது. காசி என்னும் சொல்லுக்கு "ஒளிமயமானது' என்று பொருள். இவ்வூருக்கு "வாரணாசி' என்று மற்றொரு பெயரும் உள்ளது. காசி நகருக்கு வடக்கே வாராணா என்ற நதியும் தெற்கே அசி எனும் நதியும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்த நகரமாதலால் "வாரணாசி' என்று பெயர் அமைந்தது. இதனைப் "பூலோகக் கைலாசம்' என்றும் அழைப்பர்.மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று விசேஷங்களும் ஒருங்கே அமையப் பெற்றது காசி என்னும் புண்ணிய ஷேத்ரம். மூர்த்தி விசேஷம் பற்றி முதலில் காண்போம். மூர்த்தி: பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் முதலாவதாகக் கூறுவது காசி விஸ்வேஸ்வரர் எனும் விஸ்வநாதர் ஆகும். காசி விஸ்வநாதரை யாராக இருந்தாலும் அருகில் சென்று கைகளால் ஸ்பரிசித்து வணங்கும் பேற்றினைப் பெறலாம்.விஸ்வநாதர் எளிமையின் வடிவம் . அவரது  திருவருள் சிறப்புமிகு குணம் ஆகும். காசியில் உள்ள விஸ்வநாதரைத் தொடும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதாலோ என்னவோ "காசியில் வாழும் மனிதர்களைத் தொட்டாலே பிறவித் துன்பம் கிடையாது' என்று கூறுகிறது காசிக் காண்டம்.

Dec 26, 2024

கும்பாபிஷேகம் ஏன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது.

1.முதல் மூன்று ஆண்டுகள் தெய்வம் கருவரையில் இருக்கும். 2.அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் பலிபீடத்தில் இருக்கும். 3. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கொடி மரத்தில் இருக்கும். 4. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கோபுர கலசத்திற்கு செல்லும். 5.கோபுர கலசத்தில் இருக்கும் தெய்வத்தை மீண்டும் கருவரைக்கு அழைத்து வரவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்யப்படுகிறது.

Dec 19, 2024

மாதங்களில் மார்கழி மாத சிறப்புகள்

 மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்த காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. அதேபோல் மார்கழி மாதத்தில் புதுமனை குடிபுகுதல் ,வாடகை அல்லது ஒத்திக்கு வீடு மாறுதல் ,புதிய அலுவலக கட்டிடத்திற்கு மாறுதல் போன்றவை செய்யக்கூடாது இதற்கு காரணம் இம்மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்யத்தை இழந்தார் என்று கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆக்ஸிஜன் அதிகமாக இருப்பதால் சூரிய உதயத்திற்கு பின் தூங்கக் கூடாது. அதிகாலையிலே எழுந்திருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.நிச்சயதார்த்தம், காது குத்துதல், பத்திரப்பதிவு, வாகன பதிவு செய்தல் மற்றும் வாங்குதல் கூடாது.

Dec 19, 2024

சனீஸ்வரரின் குருநாதர் பைரவர்.

சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒருவர் பைரவர். இவரது வாகனம் நாய். எல்லா சிவன் கோயிலிலும் வட கிழக்கு மூலையில்நின்றகோலத்தில்காட்சியளிப்பார்.பாம்பைபூணுாலாகவும், பிறையைத்தலையில்வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஏந்தியிருக்கும் இவர் பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள். நவக்கிரகங்கள், காலத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவர். இவரே கிரகங்களில் பலம் மிக்க சனீஸ்வரரின் குருநாதர் ஆவார்.பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர் தட்சன். இவரது மகள் தாட்சாயிணி. இவள் சிவனின் மீது காதல் கொண்டாள். தந்தையின் சம்மதம் இல்லாமல் சிவனை கணவராக அடைந்தாள். ஒருமுறை யாகம் ஒன்றை தட்சன் தொடங்கினார். அதற்கு மகள் தாட்சயிணி, மருமகன் சிவனையும் அழைக்கவில்லை. யாகத்தை தடுக்க வேள்வியில் தாட்சாயிணி விழுந்து உயிர் விட்டாள். அவளது உடலைச் சுமந்தபடி இங்கும் அங்கும் சிவபெருமான் அலைந்தார். இதிலிருந்து இவரை விடுவிக்க மகாவிஷ்ணு சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலைத் தகர்த்தார். உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக பூமியில் 51 இடங்களில் விழுந்தன. அவையே 51 சக்தி பீடங்களாகி அம்பிகை வழிபாட்டுக்குரிய கோயில்களாகஉள்ளன. அசுர சக்திகளிடம் இருந்து இந்த சக்திபீடங்களை காக்கும் காவலராக இருப்பவர் பைரவரே. .மூர்த்தி, பிரம்மசிரச்சேதர்.உக்ரபைரவர், க்ஷேத்ரபாலகர்,வடுகர், ஆபத்துத்தாரணர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என பைரவர் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். 

Dec 12, 2024

ஏன் இறைவனை வழிபடும் போது விளக்கு ஏற்றி வழிபடுகிறோம்?

நாம் வீட்டிலோ கோவில்களிலோ விளக்கை ஏற்றி நாம் வழிபடுகிறோம்.விளக்கினுடைய ஒளியைப் போன்று நமது வாழ்வும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நாம் விளக்கு ஏற்றுகின்றோம்.மேலும் நாம் பிறருக்கு உதவியாக இருப்பதற்கும் நமது வாழ்வில் நாம் முன்னேறுவதற்கும் இறைவனுடைய அனுக்கிரகம் வேண்டும் என்பதற்காக விளக்கினை ஏற்றி வழிபடுகிறோம்.

Dec 12, 2024

அசைவம் சாப்பிட்டு விளக்கேற்ற கூடாதா?

சிலரது வீடுகளில் அசைவம்  சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள். அதே போது வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஆகிய விட்டாலோ அந்த நாட்களில் வீட்டில் விளக்கேற்ற மாட்டார்கள். வீட்டின் பூஜை அறையை பூட்டி வைத்துவிடுவார்கள். இது முற்றிலும் தவறானது என்பதே ஆன்மிக சான்றோர்கள் சொல்லும் கருத்தாகும். குடியிருக்கும் வீட்டில் எந்த காரணத்திற்காகவும் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது, என்றே நம்முடைய சமயம் சொல்கிறது.

Dec 05, 2024

ஐயப்பனின் தவக்கோலம்

சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, . 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடிகட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள். சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும்போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார் கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படு கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசா தத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர். அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக் கப்படும்போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக் கோலம் கலைவதாக நம்பிக்கை. அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால்தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின்  திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள். இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களைசொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும், இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால் கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 20 21

AD's