25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Aug 22, 2026

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த சௌகார் ஜானகி, 1950களில் திரையுலகில் அறிமுகமானார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பே தனது 15வது வயதில் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அவர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.கே. பாலச்சந்தர் இயக்கிய ‘பாமா விஜயம்’ திரைப்படத்தில் அவர் ஏற்ற பார்வதி கதாபாத்திரம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக அமைந்தது. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்.400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகியின் கலைப்பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.சௌகார் ஜானகி பெற்ற முக்கிய விருதுகள்.1969 – கலைமாமணி விருது1970 – ‘இரு கோடுகள்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருது1985 – மகாநதி சாவித்ரி விருது1990 – எம்.ஜி.ஆர். விருது2004 – நடிகர் திலகம் சிவாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது2013 – SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது2020 – புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கலைமாமணி விருது2022 – பத்மஸ்ரீ விருதுசௌகார் ஜானகி (1931–2026) — தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் கலைஞர்.

Aug 20, 2026

ஆகஸ்ட் 21-ல் ‘ராம் இன் லீலா’ ரிலீஸ்.

‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்குப் பிறகு ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ராம் இன் லீலா’. ராமச்சந்திரன் கண்ணன் இயக்கும் இப்படத்தில் வர்திகா ஜெயின் கதாநாயகியாக நடித்துள்ளார்.படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் ரியோ ராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, ‘ராம் இன் லீலா’ ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Aug 20, 2026

‘ஐ ஆம் கேம்’ தள்ளிப்போகிறதா?

மலையாளத்தில் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோகர் நடித்துள்ள படம் ‘ஐ ஆம் கேம்’. சூதாட்டப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 20-ம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. ஆனால், படத்துக்கான புரமோஷன் பணிகள் இதுவரை பெரிய அளவில் நடைபெறவில்லை. மேலும், அதே தேதியில் வேறு சில படங்களும் வெளியாக உள்ளதால், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Aug 20, 2026

பெப்சி நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் ‘பெப்சி’யில் ஒளிப்பதிவாளர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள் உள்ளிட்ட 23 சங்கங்கள் உள்ளன. இந்த அமைப்புக்கான 2026-ம் ஆண்டின் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தலைவராக ஆர்.கே. செல்வமணி ஐந்தாவது முறையாகப் பதவியேற்றார். அவர் கூறுகையில், “நஷ்டத்தில் இயங்கும் தமிழ் திரைத்துறையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல முதல்வர் விஜய் உதவ வேண்டும். தமிழக அரசு சார்பில் தமிழ் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” என்றார்

Aug 20, 2026

ஆகஸ்ட் 21-ல் வெளியாகும் படங்கள்.

இந்த வாரம் ஆகஸ்ட் 21-ம் தேதி ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’, கிரி ராஜ்குமார் இயக்கியுள்ள ‘ஒன் மேன்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகின்றன.இளன் இயக்கி, நடித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான ‘இரு முடி’ தமிழிலும் வெளியாகிறது.ரியோ ராஜ் நடித்துள்ள ‘ராம் இன் லீலா’ திரைப்படம் தற்போது தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் இப்படமும் வெளியாக வாய்ப்புள்ளது.

Aug 20, 2026

ராணி முகர்ஜிக்கு கவுரவ டாக்டர் பட்டம்.

90 மற்றும் 2000-களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல லா ட்ரோப் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.2019-ல் நடிகர் ஷாருக்கானுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது இந்திய நடிகர் என்ற பெருமையை ராணி முகர்ஜி பெற்றுள்ளார். இந்தியத் திரையுலகில் 30 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பங்களிப்பு, சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகளைப் பாராட்டும் விதமாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Aug 20, 2026

பிரபுதேவா, வடிவேலுவின் ‘பேங் பேங்’ டீசர் வெளியீடு.

கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் படம் ‘பேங் பேங்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.மும்பையில் படப்பிடிப்பைத் தொடங்க இருந்த நிலையில், கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்னைகளால் படப்பிடிப்பு அடிக்கடி தள்ளிப்போனது. தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Aug 20, 2026

“அன்பில் அவன் “ 

அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள படம் ‘அன்பில் அவன்’. கார்த்திகேயன் இயக்குகிறார்.இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறுகையில், “சினிமா மாறிவிட்டது. கதையைவிட அதைச் சொல்லும் ஸ்டைல் முக்கியமாகிவிட்டது. இது பெண்களைப் பற்றியோ, அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களைப் பற்றியோ பேசும் படம் அல்ல. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கின்றன. காதல், புத்திசாலியை முட்டாளாக்கும்; சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதைப் பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்

Aug 20, 2026

13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மூடர் கூடம் 2’

நவீன் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான ‘மூடர் கூடம்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ட்ராயன், ஓவியா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது.‘மூடர் கூடம் 2’ படத்தை நவீனே இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்களும் இரண்டாம் பாகத்தில் தொடர்கின்றனர். படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ள நிலையில், டார்க் காமெடி, பேண்டஸி மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் கலந்த படமாக இது உருவாகி வருவதாக நவீன் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2026

ஆகஸ்ட் 7-ல் டிரைலர்; 14-ல் ‘மகுடம்’ ரிலீஸ்.

 நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மகுடம்’. இப்படத்தில் விஷாலே கதாநாயகனாகவும் நடிக்கிறார். அஞ்சலி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 7-ம் தேதியும், திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதலில் இப்படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, விஷால் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 89 90

AD's



More News