பழங்குடியின பெண்ணாக நடிகை ராஷ்மிகா ஆக் ஷனில் களமிறங்கி உள்ள படம் 'மைசா'. இதன் டீசர் வெளி யாகி வரவேற்பை பெற்றது. ராஷ்மிகா கூறுகையில், "படத் தில் ஒரு காட்சிக்காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கணும். நான் பயந்துவிட் டேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கடினமாக இருந் தது. இருப்பினும் அந்தக்காட்சி சிறப்பாக வர வேண்டும் என் பதற்காக துணிந்து செய்தேன்' என்றார்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராக்கா' படம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ஒரே நேரத்தில் 37 நடிகர்களை நிகழ்நேர Motion Capture (மோஷன் கேப்சர்) தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்ததற்காக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.சென்சார்கள் மற்றும் கேமராக்கள் உதவியுடன் நடிகர்களின் உடல் அசைவுகள் மற்றும் முகபாவனைகளைத் துல்லியமாக டிஜிட்டல் கதாபாத்திரங்களாக மாற்றும் நவீன தொழில்நுட்பமே இதுவாகும். இந்தச் சாதனைக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் சான்றிதழை அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி பெற்றுள்ளனர். பான்-இந்தியா அளவில் மட்டுமல்லாமல், ஆங்கிலம், கொரிய மற்றும் சீன மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 செப்டம்பர் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 170 தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதத் தொடக்கத்தைக் கொண்டாடப் பல படங்களும் களமிறங்குகின்றன:விஜய் சேதுபதியின் 'பத்தா'.நிவின் பாலி, சூரியின் 'ஏழு கடல் ஏழு மலை'.அசோக் செல்வனின் 'அன்பில் அவன்'.விஜய் மகன் ஜேசன் இயக்கியுள்ள 'சிக்மா'.அசோக்கின் 'கிட்டி'.
சென்னை வடபழனியில் உள்ள சினிமா இசையமைப்பாளர்கள் சங்கத்தின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. ரூ.30 கோடி செலவில் 10 மாடிகளுடன் பிரம்மாண்டமாக உருவாகும் இக்கட்டடத்திற்கான நிதி திரட்ட சென்னை, ஹைதராபாத், சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் இசைக்கச்சேரிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இக்கச்சேரிகளில் பங்கேற்கச் சம்மதித்துள்ளனர்.
'எம்3எம் ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2026' வெளியிட்டுள்ள இந்தியாவின் பணக்கார நடிகர்களின் பட்டியலில், சொத்து மதிப்பு, தொழில் முதலீடுகள் மற்றும் இதர வருவாயின் அடிப்படையில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் ரூ.10,000 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். நாகார்ஜுனா (ரூ.5,000 கோடி) மற்றும் அமிதாப் பச்சன் (ரூ.4,000 கோடி) முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். குறிப்பிடத்தக்க விஷயமாக, தமிழ் நடிகர்கள் யாரும் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெறவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் மூத்த நடிகை லதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சங்கத் தலைவர் நாசர், நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை டிசம்பர் முதல் வாரத்திற்குள் தமிழக முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என்று அறிவித்தார். மேலும், நம்மில் ஒருவராக இருந்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கயாடு லோஹர், மோகன் பாபு நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான படம் 'தி பாரடைஸ்'. படத்திற்குச் சில நெகட்டிவான விமர்சனங்கள் வந்தபோதிலும், வசூலில் எந்தத் தளர்வும் இன்றி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி, வெளியான 3 நாட்களில் இப்படம் ரூ.136 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
மறைந்த இயக்குநர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த கடைசிப் படம் ‘புலவர்’. முருகையா இயக்கியுள்ள இப்படத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக பாரதிராஜா நடித்துள்ளார்.தன்னுடன் பணியாற்றிய முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொலை வழக்கை கண்டுபிடிக்க பாரதிராஜா உதவுவது போன்ற கதைக்களம் இதில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கதையை நகைச்சுவை கலந்து உருவாக்கியுள்ளனர். இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என டீசரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பல்வேறு பட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ என பெயரிட்டுள்ளனர். மணிசேயோன் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்திற்கு ‘கிங் அண்ட் குயின்ஸ்’ என பெயரிட்டு, படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளனர்.அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என பெயரிட்டுள்ளனர். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தில் நடிக்கும் மம்முட்டியின் முதல் பார்வை வீடியோவும் வெளியாகியுள்ளது.மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் பணிகளை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. அவரது கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார்.எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளான இன்று, இப்படத்தின் பணிகளை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.ராப் மற்றும் வெஸ்டர்ன் இசையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ள அனிருத், கர்நாடக இசையை எந்த அளவுக்கு வழங்கப் போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.