மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 770 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.84.51 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 770 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.84.51 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்புகளை (04.11.2026) வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்தினையே முக்கியக் குறிக்கோளாக கொண்டு பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடவும், சுய சார்புடன் வருவாய் ஈட்டும் திறன் பெற்றவர்களாக உருவாக்கிடவும், தொழில் முனைவோர்களாக உயர்ந்து தங்களது பொருளாதார நிலையினையும், தங்களை சுற்றியுள்ள நபர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காகவும், வாழ்வாதார மேம்பாட்டிற்கு பொருளாதார நிதி தேவை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வங்கிக் கடன் இணைப்புகள் மூலம் குழு உறுப்பினர்களுக்கு முதலீட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் கடன் வழங்குவதுடன் அவர்களுக்கு சுய தொழில் புரிவதற்கான பயிற்சியும், தொழில் நெறி வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக ஒரே மாதிரியான பொருட்களை உற்பத்தி செய்யும் குழுக்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும், சந்தைப்படுத்துவதற்கான முறைகளையும் உருவாக்கி தரப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 10,593 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புர பகுதிகளில் 3,950 மகளிர் சுய உதவிக்குழுக்கள் என மொத்தம் 14,543 மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.11.2026 அன்று பெருந்துறையில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,310 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் பணியினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்ட ஊரகப்பகுதிகளான அருப்புக்கோட்டையில் 37 குழுவினர்களுக்கு ரூ.3.42 இலட்சமும், காரியாபட்டியில் 39 குழுவினர்களுக்கு ரூ.4.22 இலட்சமும், நரிக்குடியில் 63 குழுவினர்களுக்கு ரூ.6.42 இலட்சமும், இராஜபாளையத்தில் 52 குழுவினர்களுக்கு ரூ.6.42 இலட்சமும், சாத்தூரில் 55 குழுவினர்களுக்கு ரூ.5.83 இலட்சமும், சிவகாசியில் 53 குழுவினர்களுக்கு ரூ.5.80 இலட்சமும், திருவில்லிபுத்தூரில் 52 குழுவினர்களுக்கு ரூ.5.54 இலட்சமும், திருச்சுழியில் 39 குழுவினர்களுக்கு ரூ.3.70 இலட்சமும், வெம்பக்கோட்டையில் 57 குழுவினர்களுக்கு ரூ.6.88 இலட்சமும், விருதுநகரில் 56 குழுவினர்களுக்கு ரூ.6.59 இலட்சமும், வத்திராயிருப்பில் 45 குழுவினர்களுக்கு ரூ.4.61 இலட்சம் என மொத்தம் 548 குழுக்களுக்கு ரூ.59.43 கோடியும்,
நகர்ப்புரப்பகுதிகளான அருப்புக்கோட்டையில் 15 குழுவினர்களுக்கு ரூ.2.50 இலட்சமும், செட்டியார்பட்டியில் 8 குழுவினர்களுக்கு ரூ.0.75 இலட்சமும், காரியாபட்டியில் 4 குழுவினர்களுக்கு ரூ.0.79 இலட்சமும், மல்லாங்கிணரில் 4 குழுவினர்களுக்கு ரூ.0.48 இலட்சமும், மம்சாபுரத்தில் 2 குழுவினர்களுக்கு ரூ.0.14 இலட்சமும், இராஜபாளையத்தில் 51 குழுவினர்களுக்கு ரூ.4.75 இலட்சமும், எஸ்.கொடிக்குளத்தில் 20 குழுவினர்களுக்கு ரூ.1.74 இலட்சமும், சாத்தூரில் 2 குழுவினர்களுக்கு ரூ.0.15 இலட்சமும், சேத்தூரில் 17 குழுவினர்களுக்கு ரூ.1.54 இலட்சமும், சிவகாசியில் 7 குழுவினர்களுக்கு ரூ.0.48 இலட்சமும், திருவில்லிபுத்தூரில் 44 குழுவினர்களுக்கு ரூ.7.50 இலட்சமும், திருத்தங்கலில் 38 குழுவினர்களுக்கு ரூ.3.42 இலட்சமும், விருதுநகரில் 4 குழுவினர்களுக்கு ரூ.0.38 இலட்சமும், வத்திராயிருப்பில் 6 குழுவினர்களுக்கு ரூ.0.46 இலட்சம் என மொத்தம் 222 குழுக்களுக்கு ரூ.25.08 கோடி என ஆக மொத்தம் 770 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.84.51 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் வழங்கப்படும் Icons of India என்ற விருதை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சசிகலா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.இலக்குவன், உதவி திட்ட அலுவலர்கள் திரு.குபேந்திரன், திருமதி அன்னச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply