சென்னை ஓபன்: காலிறுதியில் மாயா ரேவதி.
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை மாயா ரேவதி முன்னேறினார்.
சென்னையில் பெண்களுக்கான டபிள்யூ.டி.ஏ. 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி, போலந்தின் வெரோனிகா பால்கோவ்ஸ்காவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய மாயா, 2வது செட்டையும் 6-3 என வென்றார்.
ஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற மாயா, சென்னை ஓபன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், சீன தைபேயின் ஜோன்னா கார்லாண்டை எதிர்கொண்டார். இதில் டிஜென் 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply