ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மழை காரணமாக ஆட்டம் இரண்டு முறை பாதிக்கப்பட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணிக்கான வெற்றி இலக்கு 32 ஓவர்களில் 143 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது.
இலக்கைத் துரத்திய இந்திய அணி, 22.4 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியது.
0
Leave a Reply