25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


வேளாண்மை

Dec 09, 2025

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை தடுக்கும் வழிகள் |

பல்வேறு பயிர்களில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. குறிப் பாக, மக்காச்சோளத் தில் படைப்புழு தாக்கு தல் என்பது பரவலாக காணப்படுகிறது. பெரிய அளவில் மக சூல் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.பொதுவாக மக்காச்சோள பயிரில் இலைகளுக்கு அடிப்பகுதியில் இந்த புழுவின் முட்டை குவியல்கள் காணப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதி யில் சுரண்டி பாதிப்பை உண்டாக்கும்.எனவே மக்காச்சோளம் சாகுபடிக்குமுன் கட்டா யம் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிக் கொண்டு வரப்பட்டுவெயில், பறவைகளால் அழிக் கப்படும். விதைப்பின்போது கடைசி உழவில்உரத்துடன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண் டும். பயிரின் ஆரம்பகால வளர்ச்சி பருவத்தில் ஏக்கருக்கு 10 பறவை தாங்கிகள் வைக்கலாம்.மேலும், 5 இனக்கவர்ச்சி பொறி கள் வைத்து ஆண் அந்துப் பூச்சி களை கவர்ந்து அழிப்பதன் மூலம் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த லாம். ஊடுபயிராக பயிறுவகை, சூரியகாந்தி பயிர்களை கட்டாயம் பயிரிட வேண்டும்.15 நாள் பயிராக இருக்கும்போது வேப்பங் கொட்டை சாறு அல்லது வேம்பு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 முறை வயலை பரிசோதிக்க வேண்டும். அறுவடைக்கு பிறகு பயிர் கழிவுகளை அகற்றி, புழுவின் முட்டைகள் இருந்தால் அழிப்பது முக்கியம் என வேளாண் துறையினர் கூறுகிறார் கள்.

Dec 02, 2025

இஞ்சி வளர்ப்பு.

வீட்டில் இஞ்சியை வளர்ப்பது எளிது. முதலில், ஒரு தொட்டியில் ஆற்று மணலை எடுத்து, ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், இஞ்சி விதையை அந்த மணலில் விதைத்து, நிழற்பாங்கான இடத்தில் வைக்கவும். இலைகள் மேலே வந்ததும், வேருடன் எடுத்து வேறு தொட்டிக்கு மாற்றவும். வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து, தண்ணீர் தெளித்து வந்தால், 8 மாதங்களில் அறுவடை செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த களிமண்ணில் இஞ்சி நன்றாக வளரும். தொட்டியில் இஞ்சி வளர்க்கும்போது, ஆற்று மணலைப் பயன்படுத்தலாம். விதையை விதைப்பதற்கு முன், மணலை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும்.நன்கு முதிர்ந்த, நோய் இல்லாத இஞ்சி கிழங்குகளை தேர்வு செய்யவும். கிழங்குகளை சிறு துண்டுகளாக வெட்டி, சில மணி நேரம் உலர விடவும்.தொட்டியில் தயார் செய்த மண்ணில், இஞ்சி கிழங்குகளை5-10 செ.மீ ஆழத்தில் நடவும். கிழங்குகளில் உள்ள முளைப்பு பகுதிகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவும்.தொட்டியை நிழலான இடத்தில் வைத்து, மண்ணை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும். இஞ்சி விதைகள் முளைத்து வந்த பிறகு, வெளிச்சம் உள்ள இடத்திற்கு மாற்றவும்.இஞ்சி செடிகளுக்கு தேவையான உரத்தை சரியான அளவில் இடவும்.இஞ்சி செடிகளில் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க, அவ்வப்போது கவனிக்கவும். தேவைப்பட்டால்,இயற்கை பூச்சிக்கொல்லிகளைபயன்படுத்தலாம்.8-10 மாதங்களில் இஞ்சி கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும். குறிப்பு:இஞ்சி வளர்ப்பதற்கு, நன்கு வடிகால் வசதியுள்ள, ஈரப்பதமான மண் தேவை.சரியான அளவு தண்ணீர் மற்றும் சூரிய ஒளி அவசியம்.இஞ்சி செடிகளுக்கு தேவையான உரத்தை சரியான அளவில் இடவும்.பூச்சிகள் மற்றும் நோய்களில் இருந்து செடிகளை பாதுகாக்க, அவ்வப்போது கவனிக்கவும். 

Nov 25, 2025

தழைத்து வளரும் கீரைகள் விவசாயம் .

ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை, 10 முதல் 20 செண்ட் பரப்பளவில் பத்து வகைகீரைகளை விதைத்து  பராமரித்தால் போதும். தினந்தோனும் கிள்ள கிள்ள (அறுவடை) கீரைகள் அள்ளித்தரும் என்கிறார் மதுரை அருகே கருமாத்தூரை  சேர்ந்த கீரை விவசாயி ஜெயச்சந்திரன்.விதையில் முளைக்கும் கீரைகளும் உண்டு. ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் 8முதல்9 முறை அறுவடை செய்யும் கீரை வகைகளும் உண்டு. சிவப்பு பொன்னாங்கன்னி கீரை ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து அறுவடை செய்யலாம்.30 சென்ட் பரப்பில் அரைக்கீரை, 20 சென்ட் அளவில் மணத்தக்காளி, 10 சென்ட் இடத்தில் பாலக்கீரை,5சென்ட் பரப்பில் பொன்னாங்கன்னி, 50 சென்ட் பரப்பில் முருங்கை கீரை நடவு செய்துள்ளேன். இடையே தண்டங்கீரை, சிறுகீரை, அகத்தி கீரை என 80 சென்ட் பரப்பளவில் 8வகை கீரைகளை வளர்க்கிறேன். இன்னும் 40 சென்ட் பரப்பில்' முருங்கை பயிரிடுவதற்கான விதை வாங்கி வைத்துள்ளேன்.நோய் பூச்சி தாக்குதல் இல்லாமல் பாதுகாத்தால் கீரையில் லாபம் இருக்கிறது. நெல்லுக்கு உரமிடு வதைப் போல கீரைகளையும் பராமரிக்க வேண்டும். வீட்டில் மாடுகள் வளர்க்கிறேன். அதனால் முழுவதும் இயற்கை முறையில் தான் கீரை சாகுபடி செய்கிறேன்.ஆட்டு எரு, மாட்டு சாணம் தான் கீரைகளுக்கு உரம். குறிப் பிட்ட இடைவெளியில் கீரை களுக்கு மாட்டு கோமியம் தெளிக்கிறேன். மாட்டு சாணத்தை கரைசலாக்கி கடலைமாவு, வெல்லம் கலந்து ஜீவாமிர்தம் கடை சலாக தருகிறேன். வெயில் நேரத்தில் பாலக்கீரை விதையை ஒருமுறை விதைத்தால் 20 முறை அறுவடை செய்யலாம். மழைக்காலத்தில் கூடுதலாக நான்கு முறை அறுவடை செய்ய லாம். பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை வகைகளை 12 நாட்க ளுக்கு ஒருமுறை அறுவடை செய் தால் அடுத்தடுத்து தழைத்து வளரும். முழு அறுவடை முடிந்த பின் அதே இடத்தில் அதே வகை கீரைகளை விதைக்காமல் இடம்மாற்றி விதைக்க வேண்டும் என்றார்.

Nov 18, 2025

மஞ்சள் வளர்ப்பு முறை.

மஞ்சள் வளர்ப்பு முறைக்கு, நிலத்தைத் தயார் செய்வது, விதை நேர்த்தி, நடவு செய்தல், நீர் நிர்வாகம், உரமிடுதல், களை மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, அறுவடை போன்ற பல்வேறு படிகள் உள்ளன. மஞ்சள் வளர்ப்பதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள நிலம் அவசியம்.மண் மாதிரி பரிசோதனை செய்து, நிலத்தின் தன்மைக்கு ஏற்ப உரங்களை இடவும்.நிலத்தை நன்கு உழுது, சிறு சிறு கட்டிகளாக இல்லாமல் சமப்படுத்தவும்.தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை இடவும். விதைகளை சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிர்களால் நேர்த்தி செய்யவும்.இவ்வாறு நேர்த்தி செய்வதன் மூலம், விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும், மேலும் நோய்கள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கும். மஞ்சள் வேர்த்தண்டுகளை நடவு செய்யவும்.வரிசைகளுக்கு இடையேயும், செடிகளுக்கு இடையேயும் போதுமான இடைவெளி விடவும்.பொதுவாக 30 x 20 செ.மீ அல்லது 45 x 25 செ.மீ இடைவெளி விடலாம்.மழைக்காலங்களில், வரப்புகளில் நடவு செய்வது நல்லது. மஞ்சளுக்கு போதுமான அளவு நீர் தேவை, ஆனால் அதிக நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவும், குறிப்பாக வறட்சி காலங்களில்.மஞ்சள் பயிர் 20-25 நாட்கள் வரை நீர்ப்பாசனம் தேவைப்படும், பின்னர் தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் செய்யலாம். தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை இடுவது பயிர் வளர்ச்சிக்கு உதவும்.நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.கடைசி உழவின் போது தொழு உரம் இடவும், நடவின் போது வேப்பம் புண்ணாக்கு இடவும். நிலத்தில் களைகளை அவ்வப்போது அகற்றி, பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்யவும். மஞ்சள் பயிரில் வேர்ப்புழு, இலைப்புள்ளி நோய் போன்ற பிரச்சனைகள் வரலாம்.இதற்கு வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தலாம், மேலும் சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா போன்ற நுண்ணுயிரிகளையும் பயன்படுத்தலாம்.நோய்த்தாக்குதல் அதிகமாக இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். மஞ்சள் பயிர் நடவு செய்த 7-9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது, வேர்த்தண்டுகளை வெட்டி எடுத்து காய வைக்கவும். 

Nov 11, 2025

பச்சை மிளகாய் வளர்ப்பு.

பச்சை மிளகாய் வளர்ப்பு முறையில், முதலில் தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து, தொட்டியில்1 அங்குல ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின், தினமும்5-6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும். தொடர்ந்து செடியைக் கவனித்து, தேவையான அளவு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். சரியான முறையில் பயிரிட்டால்90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். தரமான பச்சை மிளகாய் விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.தொட்டியில், இயற்கை உரங்களைச் சேர்த்து, மண்ணைத் தயார் செய்யவும்.விதைகளை 1 அங்குல ஆழத்தில் நடவும்.செடிக்கு தினமும்5-6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கச் செய்யவும்.போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கவும்.களைச்செடிகளை அவ்வப்போது நீக்கவும்.தேவைக்கேற்ப இயற்கை உரங்களை இடவும்.இலை சுருட்டல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த,புளித்த மோர் அல்லது இயற்கை பூச்சிக்கொல்லிகளைபயன்படுத்தவும்.50-60 நாட்களில், மிளகாய்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். 

Nov 04, 2025

வீட்டின் அறைகளில் காற்றை தூய்மையாக்கும் தாவரங்கள்.

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் 'இங்கிலீஷ் ஐவி’ வஎன்ற சிறிய வகை செடி, காற்றில் கலந்திருக்கும் மனித கண்களுக்கு புலப்படாத கிருமிகளை ஈர்த்து அழிக்கும் திறன் கொண்டதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த தாவரத் தின் அறிவியல் பெயர் ஹெடேரா ஹெலிக்ஸ் என்பதாகும்.இதனை அறையில் வளர்க்கும்போது, காற்றில் உள்ள பூச்சி மற்றும் சிறிய உயிரினங்களின் கழிவுகளை கிரகித்துக் கொள் கிறது. இந்த செடி சுமார் 12 மணி நேரத்தில், ஒரு அறையில் இருக்கும் பல்வேறு நச்சு கிருமிகளை 94 சதவீதம் வரை வெளி யேற்றி காற்றை சுத்தப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இது வீடுகளில் எஞ்சும் உணவுகளில் படரும் பாக்டீரியா போன்ற தொற்றுகளை கூட ஈர்த்து அறையின் காற்றை தூய் மையாக்குகிறதாம்..அதே வேளையில், இந்த செடி குழந்தைகள் மற்றும் சிறிய வீட்டு விலங்குகளுக்கு நச்சை ஏற்படுத்தும் என்பதால், இதனை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.இதே போல், வீட்டில் சுத்தமான காற்றை அளிக்கும் சிறந்த செடிகளாக அலோவெரா என்ற கற்றாழை, ஸ்நேக் பிளான்ட் என்ற பாம்பு செடி, சிலந்தி என்ற ஸ்பைடர் செடி, மணி பிளான்ட், பீஸ் லில்லி, ரப்பர் செடி, மூங்கில், கோல்டன் பொத்தோஸ், ஆகி யவையும் உள்ளன. இவை அறைகளில் உள்ள காற்று மாசுக்களை குறைத்து, உள்கட்டிடத்தை நல்ல முறையில் வைக்க உதவுகின்றன என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Oct 28, 2025

வெற்றிலை கொடிகளை நடுவதற்கு ...

கொடியில் இலைகளும், கணுப்பகுதியும் இருக்க வேண்டும். பூஞ்சைகள் இருக்கக் கூடாது. சிலர் வேர்ப்பகுதியை நட்டு வைப்பார்கள். அது சில நாட்களில் வாடி விடும். செடியின் நுனி அல்லது நடுப்பகுதியை நட்டு வைக்க வேண்டும் முதலில் கணுப்பகுதி முழுகுகிற அளவுக்கு நல்ல தண்ணீரை ஊற்றி நாலைந்து நாட்களுக்கு தண்ணீரை மாற்ற வேண்டும். வெள்ளை புள்ளி போல வேர் தோன்ற ஆரம்பிக்கும். தண்ணீரில் வைத்த 25 ஆவது நாளில் வேர்கள் ஊடுருவி வந்த பிறகு, மண்ணில் நட்டு வையுங்கள். மேற்பகுதியில் இலைகள் இருந்தால் நீக்கி விடவும் அப்போதுதான் பூஞ்சை பிடிக்காமல் செழித்து வளரும்.

Oct 21, 2025

எலுமிச்சை புல் சாகுபடி

எலுமிச்சை புல் மருத்துவ ரீதியாக பயன்படுவதால் நல்ல விலை கிடைக்கிறது. எனவே இதனை சாகுபடி செய்து லாபம் பெறலாம்.ஓ.டி.-19, ஓ.டி.-408,ஆர்.ஆர்.எல் -39, பிரகதி, பிரமன், சி.கே.பி. - 25, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆகியவை பிரபலமான ரகங்களாக பயிரிடப்படு கின்றன.மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 என்ற அளவில் இருப்பதுடன்.மணல் கலந்த களிமண் நிலம் நிலம் ஏற் றது. அதிக மழைப்பொழிவு, ஈரப்பதத் துடன் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல சூழ்நிலை களில் நன்றாக வளரும்.இதை சந்துகள் மூலம் பரப்பலாம். ஒரு இடத்தில் 60 x 30 செ.மீ இடை வெளியில் சுமார் 55,600 சந்துகளை நடலாம். மேலும், 60 X 45 செ.மீ இடைவெளியில் ஒரு எக்டேருக்கு 37,000 சந்துகளை நடலாம். எக்டே ருக்கு 4 கிலோ என்ற அளவில் விதைகள் மூலம் பரப்பலாம், அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நாற்றுகளை வளர்த்து நடவு செய்ய வேண்டும். 'எக்டேருக்கு தொழு உரம் 20 -25 டன் என்ற அளவுக்கு அடி உரமாக இடவும். எக்டேருக்கு 50 கிலோ தழைச்சத்து பாதி நட வின் போதும், நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு மீதியையும் இடவும். 7- 15 நாட்கள் இடைவெளியில் கூடுதல் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.பொதுவாக, பூச்சிகள் மற்றும் நோய்கள் தாவரத்தை பாதிக்காது. ஏதேனும் உறிஞ்சும் பூச்சி இருந்தால் மீத்தில் டெமட்டான் 25 இ.சி. அல்லது டைமெத்தோயேட் 30 இ.சி. தெளிக்கவும். கம்பளிப்பூச்சி தாக்கினால் போசலோன் 35 இ.சி. தெளிக்கவும்.நடவு செய்த 90 நாட்களில் இலைகளை முதலில் அறுவடை செய்யவும், பின்னர் 75 - 90 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யவும். தரை மட்டத்தில் இருந்து 10 -15 செ.மீ உயரம்விட்டு புதரை வெட்ட வேண் டும். எக்டேருக்கு 20 - 30 டன் கிடைக்கும். மருத்துவ பயன்பாட்டுக்காக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறார்கள். நல்ல வருவாய் கிடைக்கும்.

Oct 14, 2025

மிளகாயை தாக்கும் நோய்களும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்....

மிளகாயைதாக்கும்நோய்களில் முக்கியமானது 'கொல்லிட்டோட்ரைக்கம்காப்சிசை' பூசணங்களால்வரக்கூடிய 'ஆந்த்ராக்னோஸ்'. நுனிக்கருகல், பழ அழுகல், பூ உதிர்தல், இலைப்புள்ளி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.நுனிக்கருகல் அறிகுறி கிளைகள் நுனியிலிருந்து ஆரம்பித்து பின்னோக்கி கருக ஆரம்பிக்கும். நாளடைவில் ஒரு சில கிளைகள் அல்லது செடியின் மேற்பாகம் முழுவதும் கரிந்து காய்ந்து விடும். கிளைகள் ஈரக்கசிவுடன் பழுப்பு நிறத்தில் காணப்படும்.சில நாட்களில் இப்பகுதி சாம்பல் கலந்த வெண்மை அல்லது வைக் கோல் நிறத்தில் மாறும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது சில கிளைகள் அல்லது செடி முழுவதும் மடிந்து விடும். நோய் தாக்காத கிளைகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரம் குறைந்த காய்கள் தோன்றும்நோய் தாக்கிய இலைகளில் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் நீரில் நனைந்த புள்ளிகள் பெரிதாகி ஒன்றி ணைந்து இலைகளை உதிரச் செய்யும். நோயினால் பாதிக்கப்பட்ட பூக்கள்' காய்ந்து உதிர்ந்து விடும். பூக்காம்புகள் சுருங்கி பூங்கொத்து வாடி விடும்.பழங்களில் அழுகல் அறிகுறி தென்படும். ஒன்றிரண்டு சிறிய கரிய நிறப்புள்ளிகள் தோலின் மேல் தோன் றும். இவை விரிவடைந்து நீள்வட்ட வடிவ புள்ளிகளாக மாறும். புள்ளிகள் உட்குழிந்தும் கருமை கலந்த சாம்பல் அல்லது வைக்கோல் நிறமாகவும் புள் ளியைச் சுற்றி ஒரு மெல்லிய கருமை நிற வளையம் காணப்படும். பழங்களி னுள்ளும் விதைகளின் மேலும் பூசண வளர்ச்சி காணப்படும். நோய்த் தாக்கப்பட்ட பழங்கள் எளிதில் உதிர்ந்துவிடும்.நிலத்தில் கிடக்கும்  நோய் தாக்கிய இலைகள், பழங்கள், செடியின் பாகங்களில் இப் பூசண ம் நீண்ட காலம் உயிர்வாழும். தாக்கப்பட்ட பழங்களிலுள்ள விதைகள் மூலமாக வும் காற்று, மழைத்துளிகள் மூலம் நோய் வேகமாகப் பரவும். பல நாட்கள் அதிக பனி பெய்யும் போது நோயின் தீவிரம் அதிகமாகும். டிசம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நடவு செய்யும் பயிர்களை தாக்கி சேதப்படுத்துகிறது.நோய் தாக்காத தரமானப் பழங்களி லிருந்து விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயிர் சுழற்சி செய்வதன் மூலம் மண்ணில் நோய்க் கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். சரியான இடைவெளியில் நடவு செய் வதால் பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம், காற்றின் ஈரப்பதம் சரி யான அளவில் கிடைப்பதால் நோய்ப் பரவல் குறையும்.நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நோய் தாக்கிய பழங்கள், இலை, கிளைகளை அகற்றி எரிக்க வேண்டும். நோய் தாக் கிய பழங்களை தனியாக அறுவடை செய்து சேமித்து வைக்க வேண்டும்.விதைப்பதற்கு 24 மணி நேரம் முன் பாக ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது காப்டான் அல்லது 2 கிராம் செரசான் கலந்த பின் விதைக்க வேண்டும்.ஏக்கருக்கு 300 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சினப் அல்லது மான்கோ செப் அல்லது 750 கிராம் தாமிர ஆக்ஸி குளோரைட் கலந்து 15 நாட்கள் இடை வெளியில் 3 முதல் 4 முறை தெளிக்க வேண்டும்.

Oct 07, 2025

நெற்பயிரை தாக்கும் நெல் குலை  நோய்களை கட் டுப்படுத்த…..

நெல் குலை நோய் என்பது நெற்ப யிரை தாக்கும் ஒரு நோயாகும். நெற்ப யிரை பல்வேறு பூச்சி கள் தாக்குவதால் இந்த நோய் ஏற்படு கிறதுநெற்பயிரில் தண்டு,கணுப்பகுதி, கழுத்துப்பகுதி, கதிர் ஆகிய அனைத்திலும் பூசன தாக்குதல் காணப்படும். இலைகளின் மேல் பகுதி வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்கள் கொண்ட கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்கள் உருவாகும். தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் * எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்து விடும். இதையே 'குலை நோய்' என்கிறோம்.கழுத்து பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கி, கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இவை 'கழுத்து குலை நோய் ஆகும். கணுக்கள் கருப்புநிறமாக மாறி உடைந்துவிடும். இதை 'கணு குலை நோய் என்கின்றனர். பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணு தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும் கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப்பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளை களில் உள்ள புள்ளி கள் பழுப்பு நிறமாக அல்லது அடர் பழுப்பு நிறமாக இருக்கும். நெல் ரகங்களை பொருத்து, புள்ளிக ளின் அளவும், வடிவ மும் வேறுபடும்.இலை குலை நோய், கணுகுலை நோய், அதிர் குலை நோய்களை ஏற்படுத்தும் பூசண வித் துக்கள் ஆண்டு முழுவதும் காற்றில் இருக்கும். வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் போதும், காற்றின் ஈரப்பதம் 90 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் போதும், அதிக அளவில் அம்மோனியம் சல்பேட், யூரியா போன்ற தழைச்சத்து உரங்கள் பயன்படுத்தப்படும் போது குலை நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.நோயற்ற பயிரில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களை பயிர் செய்யலாம். பரிந்துரைப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய் தாக்குதல் காணப்  பட்டால்தழை ச்சத்து உரம் தாமதமாக இடலாம். சூடோமோனஸ் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளித்து குலை நோய் தாக்குதலை குறைக்கலாம். 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News