வெற்றிலை கொடிகளை நடுவதற்கு ...
கொடியில் இலைகளும், கணுப்பகுதியும் இருக்க வேண்டும். பூஞ்சைகள் இருக்கக் கூடாது. சிலர் வேர்ப்பகுதியை நட்டு வைப்பார்கள். அது சில நாட்களில் வாடி விடும். செடியின் நுனி அல்லது நடுப்பகுதியை நட்டு வைக்க வேண்டும் முதலில் கணுப்பகுதி முழுகுகிற அளவுக்கு நல்ல தண்ணீரை ஊற்றி நாலைந்து நாட்களுக்கு தண்ணீரை மாற்ற வேண்டும். வெள்ளை புள்ளி போல வேர் தோன்ற ஆரம்பிக்கும். தண்ணீரில் வைத்த 25 ஆவது நாளில் வேர்கள் ஊடுருவி வந்த பிறகு, மண்ணில் நட்டு வையுங்கள். மேற்பகுதியில் இலைகள் இருந்தால் நீக்கி விடவும் அப்போதுதான் பூஞ்சை பிடிக்காமல் செழித்து வளரும்.
0
Leave a Reply