ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் பழங்குடியினர் பற்றிய இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரியில் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. புது தில்லி இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் நிதிநல்கையுடன் ஆங்கிலத்துறையும் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியது. "தென்னிந்தியப் பழங்குடியின வழிபாட்டு விழாக்கள், சடங்குகள் மற்றும் வாய்மொழிப் பாரம்பரிய நோக்கில் தமிழ்நாடு". என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் சி.பி.ஸ்வாதி முத்து வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சி.ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக புது டெல்லி ஐ.சி.எச்.ஆர். ஆய்வின் துணை இயக்குனர் முனைவர் நிதின்குமார் கலந்து கொண்டு கருத்தரங்க தொடக்க உரையாற்றினார். புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று ஆய்வு மைய இணைப்பேராசிரியை முனைவர் கௌரி தேய் சிறப்புரையாற்றினார். கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் பி.ஜெயப்பிரியா கருத்தரங்க கட்டுரைத் தொகுப்பு முதல் நூலை பெற்றுக்கொண்டு உரையாற்றினார். விருதுநகர் ஸ்ரீ வித்யா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் எஸ். ராஜாராம் வாழ்த்துரை வழங்கினார். இரண்டு நாட்களில் ஐந்து கருத்தரங்க அமர்வுகளில் கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை சென்னை, மதுரை, திருநெல்வேலி, போன்ற இடங்களில் இருந்து மூத்த ஆய்வாளர்கள் ஆய்வு மாணவர்கள் பேராசிரியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது கட்டுரைகளை வாசித்தனர். கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியைகள் முனைவர் எஸ்.கவிதா, முனைவர் எஸ்.மீனா பிரியதர்ஷினி, சிவகாசி எஸ்.எஃப்.ஆர் மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியைகள் முனைவர் மேகலா, முனைவர் வெண்ணிலா, ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறைத்தலைவர் ஆர்.ஜெகன்நாத் ஆகியோர் அமர்வுத் தலைவர்களாக செயல்பட்டனர். நிறைவு விழாவில் திருநெல்வேலி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ஏ.நவீனா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.ராமராஜ் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக ஆங்கிலத்துறைப் பேராசிரியை பி.ஆர்.சுகன்யா நன்றி கூறினார்.கருத்தரங்கில் சிவகாசி ராஜராஜன் தலைமையில் பழம் பொருட்கள் கண்காட்சியும் நடைபெற்றது.நிறைவாக ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் பி.ஆர்.சுகன்யா நன்றியுரை ஆற்றினார். ஆங்கிலத்துறை மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 52 வது விளையாட்டு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் சி.ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சமூகத்தில் மாணவர்கள் சிறப்பான ஒரு இடத்தை பெற வேண்டும் என்றால் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே சமுதாயத்தில் சாதித்து காட்ட முடியும். திறமையை வளர்த்துவதற்கு வெளிப்படையாக விளையாட்டுத் திறமையை முன்னிறுத்தி தனது உடல் நலத்தையும் எதிர்கால வாழ்க்கையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் எதிர்கால வாழ்க்கை குறித்தும் ,உடல் நலம் பேணுதலின் அவசியம் குறித்தும், தன்னம்பிக்கை குறித்தும், வாழ்வியலுக்குத் தேவையான நெறிகாட்டுதல்கள் குறித்தும் பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறி சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.கல்லூரிச் செயலர் திரு.கே.ஜி.பிரகாஷ் அவர்கள் தலைமையுரையாற்றினார். தலைவர் திரு.கே.ஆர்.தர்மகிருஷ்ணராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் சி.ஆர்.ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். விளையாட்டு நிகழ்வு ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் முனைவர் எல். முத்துக்குமார் வாசித்தார். ஒட்டுமொத்த சேம்பியன் கோப்பையை மாணவர் பிரிவில்நேரு அணியும், மாணவியர் பிரிவில் காவேரி அணியும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடைபெற்றன. நிறைவாக உடற்கல்வி உதவி பேராசிரியை திருமதி அபிநயா நன்றியுரை கூறினார். கல்லூரி ஆட்சி என்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகிய கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஷ்ணு சங்கர் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி (பொறுப்பு) முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் அரிமா சங்கத் தலைவர் சூரியநாராயணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் இன்னுயிரைத் துறந்து உயிர் நீத்த விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்து குடியரசு நாளை போற்றுகின்றோம். மாணவர் சமுதாயம் மது, போதை ஆகியவற்றிற்கு அடிமையாகாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். தங்களது உடல் நலனை மனதில் கொண்டு சாலை போக்குவரத்து போன்ற முக்கிய இடங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு உடல் தகுதியை பேணிக் காக்க விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை மாணவர்கள் சுஜித் கண்ணன், நவீன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடத்தை மாணவிகள் பாப்பாத்தி, ராக்கம்மாள் மற்றும் மற்றும் சக்தி ஆகியோர் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுக்கோப்பையும், பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாராத்தான் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் மற்றும் அபிநயா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி சத்யா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் ராஜபாளையம் அரிமா சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா முன்னாள் மாணவர்கள் சங்க கலையரங்கில் வைத்து நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலர் சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார். தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். சங்கப் பொருளாளர் வெங்கடேஸ்வரன் மாணவர் சங்க குறிப்புரை வழங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் ராமகிருஷ்ணன் மதிப்புரை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். சங்கத்தின் திட்ட பணிகள் குறித்து துணைத் தலைவர் குமார் ராஜா விளக்கிப் பேசினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக சங்கம ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெகநாத் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 450 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வில் கடந்த கல்வியாண்டில் மூன்று பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்வில் தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி முதுகலை வரலாறு மாணவி இந்துஜா, முதுகலை வணிகவியல் மாணவி காயத்ரி மற்றும் இளங்கலைக் கணிதவியல் மாணவி பிரகதீஸ்வரி ஆகியோருக்கு பல்கலைக்கழகத் தேர்வில் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்ததற்காக மேதகு ஆளுநர் ஆர் என். ரவி அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இளங்கலைக் கணிதவியல் பாடப் பிரிவை சேர்ந்த பாண்டி பிரியா, மாலினி மற்றும் நித்திய தர்ஷினி, இளங்கலை வணிகவியல் பிரிவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, இளங்கலை இயற்பியல் பிரிவைச் சேர்ந்த ஜெபக்கனி, வணிக நிர்வாகவியல் பிரிவு சேர்ந்த சுபலட்சுமி, நீலவேணி ஆகியோரும் அடுத்த தர வரிசை பட்டியலில் இடம் பெற்று தமிழக ஆளுநர் அவர்களிடம் சான்றுகளை பெற்றுக் கொண்டனர். பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவிகளைக் கல்லூரி ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் திரு கே.ஜி. பிரகாஷ், கல்லூரி முதல்வர் முனைவர் சி. ராமகிருஷ்ணன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். ராமராஜ், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்கள்.விருதுபெற்ற மாணவிகளை இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் வாழ்த்துகிறோம்.
இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (அனுபவ பயிற்சி) வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் வேதியல் துறை தலைவர் திரு ரமேஷ் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் முனைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் செயலர் திரு சோமசுந்தரம் வரவேற்புரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். திரு குமாரசாமி ராஜா உரிமையாளர் பேஷன் வேர்ல்ட் ராஜபாளையம் தனது சிறப்புரையில் இன்டர்ன்ஷிப் என்றால் என்ன அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் பயிற்சிகள் நடைமுறை அனுபவத்தை வழங்குகின்றன, திறன்களை மேம்படுத்துகின்றன மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துகின்றன. அவை நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், தொழில் நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவு மற்றும் வகுப்பறை அறிவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஒரு தொழில்முறை விண்ணப்பத்தை உருவாக்கவும் இன்டர்ன்ஷிப் உதவுகிறது மற்றும் வேலை வாய்ப்புகள் அல்லது மதிப்புமிக்க குறிப்புகளுக்கு வழிவகுக்கும். ஒட்டுமொத்தமாக, அவை கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன என்று தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் திரு சுரேந்திரன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நுகர்வோர் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் எபி ஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவள்ளி கலந்து கொண்டு, சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் நாம் உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் குறித்தும், சாலை விபத்துக்கு மனித தவறுகள் தான் முக்கிய காரணம் எனவும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக வரலாற்றுத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி கார்த்திகா நன்றியுரை வழங்கினார். நிகழ்வினை மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி காவியா தொகுத்து வழங்கினார்.
பீஜிங்கில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ. சீன ஒபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் கோகோ காப், செக்குடியரசின் கரோலினா முசோவா மோதினர் .முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய கோகா காப், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார்.ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில், கோகோ காப் 6-1, 6-3, என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று ,இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார்.
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. Dr.D எபி ஜேம்ஸ் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் வரவேற்புரை வழங்கினார். மாணவர்களுக்கு உணவுப்பொருட்களின் கலப்படம் மற்றும் அவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விளக்கினார். Dr.S. ராமகிருஷ்ணன், முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையேச் சார்ந்ததாகும். ஆனால் இன்றைய நவீன காலத்தில் மக்கள் வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திரு.S. சுப்பிரமணியம், மாநில தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. உணவு மூலம் பரவும் நோய்கள் ஒரு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன.உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் காய்கறிகளை நாம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்று வலியுறுத்தினார்கள். சிறுதானிய உணவுகளையும் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை செல்லாதவனே உண்மையான செல்வந்தர்கள். இதற்கு காரணம் நம்முடைய பாரம்பரிய உணவு முறையே ஆகும். நம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களே நமக்கு அதிக ஆரோக்கிய தரும் உணவாகும். இந்நிகழ்ச்சியின் இறுதியாக எம். கார்த்திகா , மூன்றாம் ஆண்டு மாணவி நன்றியுரை வழங்கினார். இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் என்.காவியா, மூன்றாம் ஆண்டு மாணவி தொகுத்து வழங்கினார்.
.இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இராஜபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் திருமதி ஆனந்தி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின உரையாற்றினார். அவர் தனது உரையில், நாட்டுக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்தார். அதோடு இன்னும் வெளியில் தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் கண்டறிந்து அவர்களையும் போற்ற வேண்டும் என்றும், உலகையே அச்சுறுத்தி வரும் நெகிழி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் எடுத்து கூறினார். அதோடு நம் ஊரின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க முன் வரவேண்டும் என்றும், குறிப்பாக முடங்கியார் ரோட்டில் அமைந்துள்ள கல் மண்டபத்தை சுத்தம் செய்வதற்காக உங்களைப் போன்ற மாணவர்களோடு இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் பொறுப்பு திரு.ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திருமதி சத்யா வரவேற்புரையும், பிரசன்னா நன்றியுரையும் வழங்கினார்கள்.சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டி மாணவர்களுக்கு கல்லூரியில் இருந்து முடங்கியார் ஆற்றுப்பாலம் வரையிலும், மாணவிகளுக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் வைத்து நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் பிரிவில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் நவீன் முதல் இடத்தையும் மற்றும் பெண்கள் பிரிவில் மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவி அன்னபூரணி முதல் இடத்தையும் பெற்று, சிறப்பு விருந்தினரால் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் திரு.முத்துக்குமார் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் திரு. சக்திவேல் ஆகியோரும் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.