25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


சமையல்

Dec 06, 2025

தூதுவளை கஷாயம்

தேவையான பொருட்கள்:10தூதுவளை இலை1டேபிள்ஸ்பூன் தனியா1டீஸ்பூன் மிளகு 2 ஏலக்காய்1 துண்டு சித்தரத்தை 1 சிறிய துண்டு அதிமதுரம்1டேபிள்ஸ்பூன் தேன்செய்முறை:தேவையான பொருட்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்குறிப்பு சித்திரத்தையும் அதிமதுரத்தை தட்டிப்போட்டு அரைக்கவும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்ததை போடவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகவற்றும் வரை காத்திருக்கவும் அதன்பின் அடுப்பை அனைத்து விட்டு ஒரு வடிகட்டியால் வடிகட்டி தேன் கலந்து இளம் சூட்டில் பருகவும் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தூதுவளை கசாயம் தயார்.தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது.

Dec 06, 2025

சுக்கு - துளசி காபி!

தேவையானவை:தனியா- ஒரு கப்,சுக்குத்துாள்- அரை கப்,மிளகு-கால் கப்,ஏலக்காய் - 10,துளசி இலைகள் - ½  கப்.செய்முறை:வெறும் வாணலியில் தனியா, மிளகு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இதுவே, சுக்கு காபி துாள்ஒரு கப் தண்ணீருடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர் மற்றும் துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அருந்தலாம்.

Dec 06, 2025

ஹெர்பல் கஷாயம்.

தேவையானவை:வெற்றிலை - ஐந்து.ஓமவல்லி இலைகள்- இரண்டு,துளசி இலைகள் ஐந்துதண்ணீர் ஒரு கப்தேன்-தேவையான அளவு.செய்முறை:வெற்றிலையின் காம்பு நுனி நீக்கி, பொடிய நறுக்கவும். தண்ணீரில் வெற்றிலை, ஓமவல்லி இலைகள், துளசி இலைகளை சேர்த்து அடுப்பில்  ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி அருந்தலாம்.செரிமானக் கோளாறு மற்றும் இருமலை சரியாக்கும்.

Dec 06, 2025

மிளகு ரசம்

தேவையான பொருட்கள்:1டீஸ்பூன் மிளகு 1டீஸ்பூன் சீரகம்1டீஸ்பூன் துவரம் பருப்பு2தக்காளிஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி1/4 கப் சாம்பார் வெங்காயம் 5 பல் பூண்டு2 மிளகாய் வற்றல் ஒரு சிறிய துண்டு வெல்லம்.உப்பு பெருங்காயத்தூள் தாளிக்க :1டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்1/4 டீஸ்பூன் கடுகு 2/4டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை,மல்லி இலைசெய்முறை மிளகு ரசம் வைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்..தாளிக்க வெங்காயம் பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், தக்காளி, சாம்பார் வெங்காயம், பூண்டு,வற்றல், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.பின்னர் ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வற்றல், தட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த மிளகு மசாலா விழுதை சேர்த்து கலந்து விடவும்.பின்னர் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து, வெல்லம், பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.நன்கு கொதி வந்து பச்சை வாசம் போனதும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் ரசம் தயார்.தயாரான ரசத்தை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான மிளகு ரசம் சுவைக்கத் தயார்.இந்த மிளகு ரசம் சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.சூப் போல் பருக மிக மிக சுவையாக இருக்கும்.மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Dec 06, 2025

முடக்கத்தான் கீரை சூப்.

தேவையான பொருட்கள்: முடகத்தான் கீரை - 100 கிராம்சீரகம் - 1 தேக்கரண்டிமிளகு - 1 தேக்கரண்டிதக்காளி - 1பூண்டு - 5 பற்கள்சாம்பார் வெங்காயம் - 5கறிவேப்பிலை - சிறிதளவுகொத்தமல்லி - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை: முடகத்தான் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி கொள்ளவும். நறுக்கிய முடகத்தான் கீரையை  தண்ணீர் ஊற்றி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு ,உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.  நன்கு கொதித்த பின்பு அதனை இறக்கி வடிகட்டி எடுத்து அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டு பரிமாறவும்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

Dec 06, 2025

வெஜிடபிள் சூப்.

தேவையான பொருட்கள்: 1கப் துருவிய கேரட்,1 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ், 1 கப்முட்டைக்கோஸ், 1 கப்வெங்காயம், 1ஸ்பூன் வெண்ணை,2ஸ்பூன்கான்பிளவர் மாவு, 2ஸ்பூன் மிளகு சீரகம், 5 பல் பூண்டு,தேவைக்கு உப்பு,தேவைக்கு தண்ணீர்.செய்முறை:முதலில் காய்கறிகளை தோல் சீவி நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பின்பு மிளகுத்தூள் உப்பு பூண்டு கான் மாவுஎடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.முதலில் நான் ஸ்டிக் பேன் சூடானவுடன் வெண்ணை சேர்க்கவும் பின்பு பூண்டு சேர்த்து வதக்கவும் அதன் பின் வெங்காயத்தை வதக்கவும்.பின்பு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.பின்பு சிறிது நீர் சேர்க்கவும்.கான்பிளவர் மாவு கலக்கிஎடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு கார்ன் மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கி இரண்டு நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.பின்பு மிளகுத் தூளும் உப்பும் சேர்த்து இறக்கி வைத்து பரிமாறவும். இதமான மழைக்கு சுவையான வெஜிடேபிள் சூப் ரெடி

Nov 29, 2025

பாசிப்பருப்பு, கேப்பை தோசை.

தேவையான பொருட்கள் :-பாசிப்பருப்பு -1 கப், கேப்பை மாவு - 1கப், தேவையான அளவு உப்பு.செய்முறை:-பாசிப்பருப்பை1 மணிநேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொண்டு, கேப்பை மாவைக் கலந்து உப்பு சேர்த்து, 4 மணி நேரம் புளிக்க வைத்து ,தோசை சுடலாம்.உடனே சுட வேண்டும் என்றால் அரை டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்து சுடலாம்.  காரச் சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும். 

Nov 29, 2025

கொள்ளு தோசை.

தேவையான பொருட்கள் :-கொள்ளு - 250 கிராம், உளுந்து - 125 கிராம், இட்லி அரிசி-250 கிராம், வர மிளகாய் - 6, பெருங்காயத்தூள்- சிறிதளவு, உப்பு -தேவையான அளவு.செய்முறை- கொள்ளு, உளுந்து, இட்லி அரிசி, வர மிளகாய்,இவை அனைத்தையும், உப்பு சேர்க்காமல்5 மணிநேரம் ஊறவைத்து, பின் மிக்ஸியில் நைசாக அரைத்து, உப்பு.பெருங்காயத்தூள் சேர்த்து, 2மணிநேரம் புளிக்கவைத்து தோசை சுடவும். 

Nov 29, 2025

கோதுமை ரவை, உளுந்து தோசை.

தேவையான பொருட்கள்:- கோதுமை ரவை -1 கப், உளுந்தம் பருப்பு - அரை கப், லேஸ் அவல் - அரை கப்,  உப்பு - தேவையான அளவு. இவை மூன்றையும், தனித்தனியாக மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும். செய்முறை- உளுந்தை நைஸாக அரைத்துப் பின், கோதுமை ரவை, அவல் சேர்த்து நைசாக அரைக்கவும். பின் உப்பு சேர்த்து, கரைத்து வைத்து 6 மணி நேரம் புளிக்க வைத்து ,பின் தோசை ஊற்றவும். சுவையான தோசை ரெடி.

Nov 29, 2025

சம்பா ரவை, தக்காளி தோசை.

தேவையான பொருட்கள்:-  சம்பா கோதுமை ரவை-1கப்,  தக்காளி -1 (பெரியது), காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிதளவு, அரிசி மாவு - அரை டேபிள்ஸ்பூன்,கொத்தமல்லி இலை, கருவேப்பிலை இலை -(பொடியாக நறுக்கியது) சிறிதளவு, உப்பு தேவையான அளவு,செய்முறை: சம்பா கோதுமை ரவை, இஞ்சி அனைத்தையும் கால் மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். பின் அரிசி மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து,தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின் தோசை சுடலாம். இதற்கு தேங்காய் சட்னி, பொடி சுவையாக இருக்கும். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 49 50

AD's



More News