தேவையான பொருட்கள்:1 கப் தினை அரிசி,1/2 கப் பச்சரிசி,3 டேபிள்ஸ்பூன் உளுந்து,1 வாழைப்பழம்,1கப் வெல்லம்,10 ஏலக்காய் ,1 பெரிய மூடி தேங்காய் துருவல்.செய்முறை: தினை அரிசியை அளந்து சுத்தம் செய்து அதனுடன் பச்சரிசி உளுந்து சேர்த்து மூன்று மணிநேரம் வரை ஊறவிடவும்.தினையை சுத்தம் செய்து புடைத்து பின் ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸிஅல்லது கிரைண்டரில் போட்டு அரைக்கவும் முக்கால்வாசி அரைப்பட்டதும் தேங்காய்துருவல் சேர்க்கவும்.பின் ஏலக்காய் வாழைப்பழம் சேர்த்து அரைத்து எடுக்கவும் .வெல்லத்துடன் சிறிது தண்ணீர்சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் ,இறக்கி வடிகட்டி பின் இதனுடன் சேர்த்துகலந்து கொள்ளவும்.பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை சின்ன கரண்டியால் எடுத்து ஊற்றவும் .இரண்டு புறமும் நன்றாக வேகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான ஆரோக்கியமான தினை அப்பம் ரெடி.
தேவையான பொருட்கள் -100கிராம் தினை மாவு,50கிராம் கடலை மாவு, 25கிராம் அரிசி மாவு,4பெரிய வெங்காயம்,2பச்சை மிளகாய்,1துண்டு இஞ்சி, கருவேப்பில்லை, ஆயில்.செய்முறை –தினையை மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.ஒரு பவுலில் 3கொத்து கருவேப்பிலை, நீள்வாக்கில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கையால்உதிர்த்து விடவும். அடுத்து நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும். அதில் தினை மாவு, கடலை மாவு , அரிசி மாவு, உப்பு சேர்க்கவும்.பிறகு நன்குமிக்ஸ் பண்ணவும்.அதில் 3ஸ்பூன் நன்கு காய்ச்சிய ஆயில் சேர்த்து, ஸ்பூனால் மிக்ஸ் பண்ணவும். அதில்சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி சூடானதும், பக்கோடா போல் கையால் உதிர்த்து விடவும்.ஹை பிளேமில் வைத்தே பொரிக்கவும்.நன்கு கிருஸ்பியாக வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சூப்பாரான ஸ்வீட் ஸ்டால்பக்கோடா ரெடி.
தேவையான பொருட்கள் -தினை - 1கப், நாட்டு சர்க்கரை- 5 ஸ்பூன்,தேங்காய்துருவல் -2ஸ்பூன்,பால் - 1 கப்,நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்,தண்ணீர்- 4 கப்.செய்முறை -முதலில்தினையை சுத்தம் செய்து 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பானையில் 4-பங்கு தண்ணீர் விட்டு வேக விடுங்கள். பாலை காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்.பின் வேறுபாத்திரத்தில் வேகவைத்த தினை,நாட்டுச்சர்க்கரை, சேர்த்து நன்குகலந்துவிட்டு,தேங்காய் துருவல் சேர்க்கவும்.பின்பால்சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.ஒன்று போல் சேர்ந்து வந்ததும் கீழே இறக்கிவிடுங்கள். உடனே சாப்பிடலாம்.சத்தானது.நல்லெண்ணெய் பிடித்தவர்கள் ,தினை கஞ்சி மேல் ஊற்றி சாப்பிடலாம்.சுவையான தினை இனிப்பு கஞ்சி ரெடி.
தேவையான பொருட்கள்-சத்துமாவு - மூன்று ஸ்பூன், பால் - 100 ml,நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.செய்முறை - பாலை நன்றாக காய்ச்சவும் பின் சத்து மாவில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கவும்.பால் நன்றாக காய்ந்ததும் ,கரைத்து வைத்துள்ள சத்து மாவு கரைசலை, அதில் ஊற்றி நன்றாக கொதி வரும் வரை வைத்து நாட்டு சக்கரை போட்டு இறக்கவும் .சுவையான ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி ரெடி.
தேவையான பொருட்கள்-வரகு அரிசி- 50 கிராம்,எண்ணெய் - 1 தேக்கரண்டி,சீரகம் -1/4 தேக்கரண்டி,சிட்டிகை மஞ்சள் தூள் -2 சிட்டிகை,சின்னவெங்காயம் - 10,பூண்டு- 5 பல்,தக்காளி – 1/2,கொத்தமல்லி இலை- சிறிதளவு, தண்ணீர், உப்பு - தேவையானஅளவு. செய்முறை -ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து , ஒன்றும் பாதியுமாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின் 10 நிமிடம் ஊற வைத்த வரகு அரிசியை தண்ணீர் வடித்து, சேர்த்து வதக்கவும்.விருப்பப்பட்டால் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்துக் கொள்ளலாம்.இதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ,உப்பு சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி அரை மணி நேரம் சிறு தீயில் வேக விடவும். ஆரோக்கியமான வரகு அரிசி கஞ்சி தயார். இதனை தினமும் காலை 11 மணி அளவில் தொடர்ந்து குடித்துவந்தால்சீக்கிரமாக உடல் எடையை குறைக்கும்.நார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு.
தேவையான பொருட்கள் -குதிரைவாலி அரிசி -50 கிராம்,பாசிப்பருப்பு- 25 கிராம்,எண்ணெய்- 1 மேஜை கரண்டி,பெரிய வெங்காயம்-1/2,பூண்டு- 4 பல்,தக்காளி - 1/2,மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி,தண்ணீர், உப்பு- தேவையானஅளவு,கொத்தமல்லி இலை - சிறிதளவு.செய்முறை -அரிசி மற்றும் பருப்பை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்துஎண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .இதில் பூண்டை தட்டி சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கவும்.இதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து ,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில்ஊற வைத்துள்ள அரிசி ,பருப்பை ,தண்ணீர் வடித்து சேர்த்து வதக்கி, கஞ்சிக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து ,குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் 15 நிமிடம் சிறு தீயில் வேக வைத்து எடுக்கவும். குதிரைவாலி அரிசி கஞ்சி ரெடி.
தேவையான பொருட்கள் -கருப்பு கவுனி அரிசி – 100 கிராம்,தண்ணீர் - 6 கப், உப்பு- தேவையானஅளவு.செய்முறை -அரிசியை மிக்சியில் ரவா போல் பொடி பண்ணவும். ஒரு குக்கரில் பொடித்த அரிசியை போட்டு, 6 கப் தண்ணீர் ஊற்றவும்.அதில் உப்பு சேர்த்து 3விசில் விடவும். இப்போது சத்தான கருப்பு கவுனி கஞ்சி ரெடி, இந்த கஞ்சியில் தயிர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.இந்த அரிசியை ஊறவைத்து செய்தால் ரொம்ப ஹாடா இருக்கும். நேரடியாக செய்தால் சாஃப்ட்டாக, சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்- அரிசி – 100 கிராம்,வெந்தயம்- 4 ஸ்பூன்,தேங்காய் - அரைமூடிநாட்டு சர்க்கரை- 4 ஸ்பூன்,உப்பு, பூண்டு- சிறிதளவு.செய்முறை:அரிசி மற்றும் வெந்தயத்தை கழுவி, குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைக்கவும். இது கசப்புத் தன்மையைக் குறைக்கும்.குக்கரில் ஊறவைத்த அரிசி, வெந்தயம், பூண்டு பற்கள், தேவையான அளவு உப்பு மற்றும் 4- 5 கப் தண்ணீர் சேர்த்து, 3 முதல் 4 விசில் வரை நன்கு குழைய வேகவைக்கவும்.தேங்காயை அரைத்து, பால் எடுத்துக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை நன்கு மசித்து, தேங்காய்ப்பால் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான வெந்தயக்கஞ்சி தயார்.
தேவையான பொருட்கள். நுங்கு -5 , ஸ்வீட்டான இளநீர் - 1/2 டம்ளர், சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் (கோபுரமாக),பொடியாக நறுக்கிய நுங்கு - 2 டேபிள் ஸ்பூன்.செய்முறைநுங்கை சுத்தம் செய்து, தோலை உரித்துக் கொள்ளவும்.பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரைசேர்த்துக் கொள்ளவும்.பிறகு நன்கு அரைக்கவும்.அடுத்து இளநீரை சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்ததை பாத்திரத்தில் மாற்றவும்.பிறகு டம்ளர்களில் ஊற்றி, மேலே நுங்கு துண்டுகளைபோடவும். இப்போது, சத்தான, சுவையான, நுங்கு, இளநீர், ஜூஸ் தயார். .
தேவையான பொருட்கள்:நன்கு பழுத்த கொய்யாப்பழம் - 3 (நறுக்கியது),சர்க்கரை அல்லது தேன் - 50 கிராம் (தேவைக்கேற்ப),தண்ணீர் - தேவையான அளவு,ஐஸ் கட்டிகள் – 10,எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்),புதினா இலைகள் - சிறிதளவு (விருப்பப்பட்டால்),செய்முறை -கொய்யாப்பழங்களைச் சுத்தமாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.மிக்ஸி ஜாரில் நறுக்கிய கொய்யாப்பழம், சர்க்கரை/தேன் மற்றும் தேவையான அளவு தண்ணீர்சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்த விழுதை ஒரு வடிகட்டி (Strainer) மூலம் வடிகட்டி, விதைகளை நீக்கவும்.தேவைப்பட்டால் கூடுதல் தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு மாற்றவும்.கிளாஸில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, ஜூஸை ஊற்றி பரிமாறவும். சர்க்கரைக்கு பதிலாக தேன்அல்லது நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம்.கொய்யாப்பழ ஜூஸ் செரிமானத்தை மேம்படுத்துகிறது.