தேவையானவை:மிளகு - 4 தேக்கரண்டி,சீரகம் - ஒரு தேக்கரண்டி,பூண்டு - 10 பல்,தோலுரித்தசின்ன வெங்காயம் - 10,கறிவேப்பிலை சிறிதளவு,புளி எலுமிச்சை அளவு,கடுகு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி,உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு,செய்முறை: புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மிளகு , பூண்டு குழம்பு ரெடி.
தேவையானவை:சுக்கு - சிறிய துண்டு.மிளகு - ஒரு தேக்கரண்டி.திப்பிலி - நான்கு.புளி - நெல்லிக்காய் அளவு,சின்ன வெங்காயம் - 10 பல் மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி.கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி.மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை நல்லெண்ணெய்,உப்பு - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து ஆறியதும் அதனுடன், ஐந்து சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும். எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து, மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் துாள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும். இத்துடன், அரைத்த விழுதையும்,மிளகாய் துாளையும் சேர்த்து, கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.
தேவையானவை:பூண்டு பற்கள்- ஒரு கப் சின்ன வெங்காயம்- கால் கப் காய்ந்த மிளகாய் - எட்டு.கடுகு - கால் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு- ஒருதேக்கரண்டி கறிவேப்பிலை, புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை:பூண்டுடன், வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, நல்லெண்ணெய்,உப்பு சேர்த்து, சுருள கிளறி இறக்கவும். சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.
தேவையானவை:பச்சரிசி- ஒரு கப்,சுக்குத்தூள்- ஒரு தேக்கரண்டி,மிளகுத்துாள், சீரகம் - தலா 2 தேக்கரண்டி,முந்திரி - 10,இஞ்சித்துருவல்,கறிவேப்பிலை - சிறிதளவு,உப்பு,நெய் - தேவையான அளவுசெய்முறை:பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் போட்டு, அதனுடன், சீரகம், இஞ்சி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்த சாதத்துடன் சேர்க்கவும். மிளகுத்துாள், சுக்குத்துாள் தூவி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:வேகவைத்த முட்டை - 4பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது,)இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,மிளகு - அரை டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப),மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு,செய்முறை:வேகவைத்த முட்டைகளை உரித்து, அவற்றின் மேல் லேசாக கீறிக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி குழைந்து வரும் வரை வதக்கவும்.மஞ்சள் தூள், சீரகத் தூள், மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.கடைசியாக முட்டைகளைச் சேர்த்து, மசாலாவுடன் நன்றாகக் கலந்து, மசாலா முட்டையின் மேல் ஒட்டிக்கொள்ளும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி, சூடாக ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:வேர்க்கடலை -1/2 கப் ,வற்றல் மிளகாய் - 4,கறிவேப்பிலை- 1டீஸ்பூன்,பூண்டு - 4 பல்,சீரகம் -1டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை :தேவையான பொருட்கள் எல்லாம் தயாராக எடுத்து வைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும்.பின்னர் வற்றல்,சீரகம்,பூண்டு, கல் உப்பு சேர்த்து வறுக்கவும்.சூடுஆறியவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான வேர்க்கடலை பூண்டுப்பொடி தயார்.இந்த சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பூண்டுப்பொடி சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:10தூதுவளை இலை1டேபிள்ஸ்பூன் தனியா1டீஸ்பூன் மிளகு 2 ஏலக்காய்1 துண்டு சித்தரத்தை 1 சிறிய துண்டு அதிமதுரம்1டேபிள்ஸ்பூன் தேன்செய்முறை:தேவையான பொருட்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்குறிப்பு சித்திரத்தையும் அதிமதுரத்தை தட்டிப்போட்டு அரைக்கவும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்ததை போடவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகவற்றும் வரை காத்திருக்கவும் அதன்பின் அடுப்பை அனைத்து விட்டு ஒரு வடிகட்டியால் வடிகட்டி தேன் கலந்து இளம் சூட்டில் பருகவும் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தூதுவளை கசாயம் தயார்.தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது.
தேவையானவை:தனியா- ஒரு கப்,சுக்குத்துாள்- அரை கப்,மிளகு-கால் கப்,ஏலக்காய் - 10,துளசி இலைகள் - ½ கப்.செய்முறை:வெறும் வாணலியில் தனியா, மிளகு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இதுவே, சுக்கு காபி துாள்ஒரு கப் தண்ணீருடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர் மற்றும் துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அருந்தலாம்.
தேவையானவை:வெற்றிலை - ஐந்து.ஓமவல்லி இலைகள்- இரண்டு,துளசி இலைகள் ஐந்துதண்ணீர் ஒரு கப்தேன்-தேவையான அளவு.செய்முறை:வெற்றிலையின் காம்பு நுனி நீக்கி, பொடிய நறுக்கவும். தண்ணீரில் வெற்றிலை, ஓமவல்லி இலைகள், துளசி இலைகளை சேர்த்து அடுப்பில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி அருந்தலாம்.செரிமானக் கோளாறு மற்றும் இருமலை சரியாக்கும்.
தேவையான பொருட்கள்:1டீஸ்பூன் மிளகு 1டீஸ்பூன் சீரகம்1டீஸ்பூன் துவரம் பருப்பு2தக்காளிஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி1/4 கப் சாம்பார் வெங்காயம் 5 பல் பூண்டு2 மிளகாய் வற்றல் ஒரு சிறிய துண்டு வெல்லம்.உப்பு பெருங்காயத்தூள் தாளிக்க :1டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்1/4 டீஸ்பூன் கடுகு 2/4டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை,மல்லி இலைசெய்முறை மிளகு ரசம் வைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்..தாளிக்க வெங்காயம் பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், தக்காளி, சாம்பார் வெங்காயம், பூண்டு,வற்றல், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.பின்னர் ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வற்றல், தட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த மிளகு மசாலா விழுதை சேர்த்து கலந்து விடவும்.பின்னர் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து, வெல்லம், பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.நன்கு கொதி வந்து பச்சை வாசம் போனதும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் ரசம் தயார்.தயாரான ரசத்தை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான மிளகு ரசம் சுவைக்கத் தயார்.இந்த மிளகு ரசம் சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.சூப் போல் பருக மிக மிக சுவையாக இருக்கும்.மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.