14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற,அமெரிக்காவின் ஜான் சீனா டபிள்யு.டபிள்யு.இ., மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அமெரிக்காவை சேர்ந்த டபிள்யு. டபிள்யு.இ., மல்யுத்த வீரர் ஜான் சீனா 48. நடிகரான இவர், 1998ல் கலிபோர்னியாவில் மல்யுத்த பயிற்சி மேற்கொண்டார். பின், 1999ல் தொழில்முறையிலான மல்யுத்த போட்டியில் அறிமுகமானார். கடந்த 2002ல் முதன்முறையாக டபிள்யு.டபிள்யு.இ., போட்டியில் களமிறங்கிய ஜான் சீனா, 14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். டபிள்யு. டபிள்யு.இ., ஜாம்பவான்களான அண்டர்டேக்கர், ராக், டிரிபிள் எச் உள்ளிட்டோருடன் மோதி யுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த தனது கடைசி போட்டியில் பங்கேற்ற ஜான் சீனா, ஆஸ்திரியாவின் குந்தரை சந்தித்தார். 'டேப் அவுட்' முறையில் தோல்வியை தழுவினார்.இதனையடுத்து தனது 25 ஆண்டுகளுக்கு மேலான மல்யுத்த பயணத்தை தோல்வியுடன் நிறைவு செய்தார். போட்டி முடிந்த பின், தனக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கும், சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
0
Leave a Reply