மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வால்நட்ஸ்
நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். வால்நட்ஸில் உள்ளMUFA மற்றும் ஒமேகா3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும்.
ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில்4 கிராம் புரதம்,2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா-3ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது.
0
Leave a Reply