அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022 'பிபா' உலக கோப்பை வென்றது. 'கோட் இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின்படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
முதல் நாளில், கோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத்நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டாம் நாளான நேற்று, ஐதராபாத்தில்மும்பை வந்தார் மெஸ்ஸி.
விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாஜ் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பிரபோர்ன் மைதானத்தில், மாலை 4:00 மணியளவில் கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா (சி. சி.ஐ.,) 'கோட் கப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது..மாலை 5:00 மணிக்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் , இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
0
Leave a Reply