சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு. பட்டா மாற்ற அதிகாரம் தாசில்தாருக்கே! RDO என்பது மேல்முறையீட்டு அதிகாரி மட்டுமே! மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரம் இல்லை! அதிகார வரம்பை மீறி பிறப்பித்த உத்தரவு செல்லாது! சிவில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்!சட்டம் எந்த அதிகாரிக்கு அதிகாரம் வழங்கியுள்ளதோ, அந்த அதிகாரியால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
மூதாதையர் சொத்து தொடர்பான பாகப்பிரிவினையில், சகோதரியின் உரிமை குறித்து பல்வேறு சட்ட விதிகள் உள்ளன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சொத்து தொடர்பான தனது உரிமையை உரிய காலத்திற்குள் கோராமல் இருப்பது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.உதாரணமாக, தந்தை இறந்த பிறகு சகோதரர்கள் சொத்தைப் பிரித்துக் கொள்ளும்போது, அந்தப் பாகப்பிரிவினையை அறிந்த நிலையில் சகோதரி சாட்சியாக கையொப்பமிட்டு பதிவு செய்திருந்தால், பின்னர் நீண்ட காலம் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பாக நீதிமன்றம் பரிசீலிக்கலாம்.மேலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முன்பாகவே சட்டப்படி சொத்து உரிமை மாற்றம் அல்லது பாகப்பிரிவினை நிறைவேற்றப்பட்டிருந்தால், அதன் தன்மையைப் பொறுத்து பின்னர் உரிமை கோருவதில் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.இத்தகைய சொத்து விவகாரங்களில் ஆவணங்கள், பாகப்பிரிவினை நடந்த தேதி மற்றும் சம்பந்தப்பட்ட சட்ட விதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்யப்படும். எனவே, குறிப்பிட்ட வழக்கில் சட்ட நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 85-ன் கீழ், மனைவிக்கு உடல் அல்லது மனரீதியான கொடுமை செய்தால் அது குற்றமாகக் கருதப்படுகிறது.இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
நீதிமன்ற அறிவிப்பை குடும்ப உறுப்பினர்கள் வாங்க மறுப்பதுஎன்பது அந்த அறிவிப்பு செல்லத்தக்க முறையில் சார்வு செய்ததற்கு ஒப்பாகுமா?ஒரிசா உயர் நீதிமன்றம் விடையளிக்கிறது!நீதிமன்ற அறிவிப்பை குடும்ப உறுப்பினர்கள் வாங்க மறுத்தால் மட்டும், அது செல்லத்தக்க முறையில் சார்வு செய்யப்பட்டதாக கருத முடியாது.சார்வு விதிமுறைகள் சட்டப்படி பின்பற்றப்பட வேண்டும்.சட்டப்படி உரிய முறையில் அறிவிப்பு வழங்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பது அவசியம்.
மூதாதையார் சொத்தை அதாவது பரம்பரை சொத்தை தந்தை தன் விருப்பம் போல் யாருக்கும் உயில் எழுத முடியாது ஏனென்றால் பரம்பரை சொத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமை உண்டு என்று கூறி ஒரு தந்தை தன் மகளுக்கும் மகனுக்கும் எழுதிய உயிலை செல்லாது என்று அறிவித்து. அந்த சொத்தை அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்க உத்தரவிட்டது.2026 (2) MWN Civil 327. Madaras high court
உங்கள் சொத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கைப் பெற முடியவில்லையா?பாகப்பிரிவினை வழக்கு - முக்கிய அம்சங்கள்1. சொத்தில் அனைவருக்கும் சம உரிமை மகன் , மகள், தந்தை, தாய், மனைவி அனைவருக்கும் உரிமை உண்டு.2. வாய் மொழி உடன்பாடு செல்லாது .வாய்மொழியாக "எனக்கு தேவையில்லை" என்றால், பங்கு உரிமை இழக்காது.3. கோர்ட் வழியாக உரிமை பெறலாம் .பங்காளிகள்ஒத்துழைக்காவிட்டால், சிவில் கோர்ட் வழியாக பங்கப்ரிவினை வழக்கு தொடரலாம்.4. சொத்து வகையைப் பொருட்படுத்தாது .வீடு, நிலம், கடை, விவசாய நிலம், வங்கி இருப்பு , தங்கம் - அனைத்தும் பகிர்வுக்கு உட்படும்.5.காலவரையறு இல்லை பங்கப்பிரிவினை வழக்கில் உரிமை கோர காலவரையறு இல்லை.6. சமரசம் எப்போதும் சிறந்த தீர்வு குடும்ப ஒற்றுமைக்காக சமரசம் மூலம் தீர்த்துக் கொள்வதே சிறந்தது.நீங்கள் என்ன செய்யலாம்?உங்கள் சொத்து ஆவணங்களை சரிபார்க்கவும்.உங்கள் சட்ட உரிமையை அறிந்திருக்கவும்.தேவையானால், உடனே சட்ட ஆலோசனை பெறவும்."' உங்கள் உரிமையை நீங்கள் கேட்காவிட்டால், உங்கள் பங்கை நீங்கள் இழக்க நேரிடும்'!
பதில்: முடியாது... சட்டம் பெண்ணை பாதுகாக்கிறது.திருமணமான பெண் வாழ்ந்த குடும்ப வீட்டிலிருந்து கணவர் அல்லது குடும்பத்தினர் வெளியேறசொல்லினாலும்...பெண்னுக்கு சட்டப்படி பாதுகாப்பு உள்ளது.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம். 2005 படி.Shared householdல் வாழும் உரிமை உள்ளது.வீட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்ற முடியாது.நீதிமன்றத்தில் Residence Order கேட்கலாம்.Protection Order கோரலாம்.தேவையானால் Maintenance-வும் கேட்கலாம்.வீடு உங்கள் பெயரில் இல்லையென்றாலும்... அங்கு கணவருடன் வாழ்ந்திருந்தால் சட்டப்படிஉங்கள் உரிமை இருக்கலாம்.இந்த வீடு உன்னுடையது இல்லை.. வெளியே போ என்று சொன்னால் அதை அமைதியாக ஏற்க வேண்டியதில்லை.உங்கள் பாதுகாப்பும்.. உங்கள் வாழும் உரியையும்.. சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.சட்டம் தெரிந்தால்.. தைரியமாக பேச முடியும்.உங்கள் உரிமைகள். உங்கள் குரல்.
மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை ஏற்படுத்தும் மாமியாருக்கு,3 வருடம் சிறை தண்டனை!1PC பிரிவு 498A படி, கணவன் அல்லது அவரது உறவினர்களால் செய்யப்படும் கொடுமைக்கு 3 வருடம் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கலாம்.தொடர்ச்சியாக சண்டை ஏற்படுத்துதல், பழிச்சொல் பரப்புதல், மிரட்டல், மன உளைச்சலை உண்டாக்குதல் இவை அனைத்தும் 'மன ரீதியான கொடுமை என்பதில் அடங்கும்.ஆனால் நினைவில் கொள்ளுங்கள்:நீதிமன்றம் கூறுவது ஒன்றை ஆதாரம் முக்கியம்!வெறும் வாய்வழி குற்றச்சாட்டு போதாது,சட்டத்தில் திருப்பம்!டெல்லி உயர்நீதிமன்றம் (செப் 2025) விளக்கியது:குற்றவியல் சட்டத்தைத் தாண்டி, துணைவியின் "அன்பை விலக்க மூன்றாவது நபரால் வேண்டுமென்றே தலையிட்டு, திருமண உறவை சேதப்படுத்தினால் அவருக்கு எதிராக சிவில் வழக்கு தொடுத்து நஷ்ட ஈடு கோரலாம்.
18 வயதிற்குட்பட்ட சிறார்கள் வாகனங்கள் இயக்குவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் சிறார்கள் வண்டி ஓட்டி விபத்து நேர்ந்தால், பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை & ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் மற்றும் சிறாருக்கு 25 வயது வரை லைசென்ஸ் தரப்படாது என மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 199A-ஐ சுட்டிக்காட்டி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமணமான மகள்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை உண்டு. அரசுப் பணியில்இருந்த பெற்றோர்மரணமடைந்தால், கருணை அடிப்படையிலான வாரிசு வேலை பெற திருமணமானமகள்களுக்கும் முழு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மகனுக்குத் திருமணமாகி இருந்தாலும் அவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால்மகளுக்குத் திருமணமானால் வேறுகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வேலை மறுப்பதுபாலின பாகுபாடு என்றும், கருணை வேலை வழங்குவதில் திருமண நிலை அல்ல, தகுதிமற்றும் நிதி தேவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.