Etihad Rail பயணிகளுக்காக 'RailtoRoad' என்ற புதிய கார் வாடகை சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் ரயில் நிலையத்திலிருந்தே காரை வாடகைக்கு எடுத்து, பயணத்தின் இறுதி இலக்கை எளிதாக அடைய முடியும். இந்த சேவை, Thrifty Car Rental UAE மற்றும் EtihadRail இடையிலான5 ஆண்டு கூட்டாண்மையின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது.
தனது துணைவி ஷிவோன் ஜிலிஸ் பாதி இந்திய வம்சாவளி என்பதால், தங்களின் மகனுக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக “ஸ்ட்ரைடர் சேகர்” என எலான் மாஸ்க் பெயரிட்டுள்ளார்.
வணிக ரீதியில் மனித மூளையில் சிப் பொருத்திய உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற்றது சீனா.ஷாங்காயில் தண்டுவடக் காயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு நியோ சிப் பொருத்தப்பட்டது.இது, கை இயக்கத்தை மீட்டெடுக்க உதவும்.அமெரிக்காவில் எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனிதர்களிடம் வெற்றிகரமாகச் சோதித்திருந்தாலும், வணிக ரீதியில் பயன்படுத்த அனுமதி கிடைக்கவில்லை.
உயிரணுக்களைப் போல வடிவம் மாறும், பிரியும் மற்றும் மீண்டும் இணையும்LiquidMetal ரோபோவை உருவாக்கி தென் கொரிய விஞ்ஞானிகள் அசத்தல்.காந்தப்புலம் மற்றும்Ultrasound உதவியுடன் இந்த ரோபோ கட்டுப்படுத்தப்படுகிறது. மனித உடலுக்குள் துல்லியமாக மருந்து செலுத்துதல், நுண் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு எதிர்காலத்தில் இது பெரிதும் உதவும் எனத் தெரிவிப்பு.
1 இந்தியாவை விட கம்மி விலை!(இந்தியாவை விட வரி குறைவு என்பதால். 1 சவரனுக்கு ₹3,000 வரை நேரடியாக மிச்சமாகும்!) 2.ஏர்போர்ட்டில் 5% cash Return.(வாங்கும் போது செலுத்தும் 5% VAT வரியை ஊருக்குக் கிளம்பும்போது ஏர்போர்ட்டிலேயே திரும்ப வாங்கலாம்!) 3 100% 24K சொக்கத்தங்கம்!(துபாய் அரசே நேரடியாகத் தரத்தைக் கண்காணிப்பதால். 1% கூட கலப்படம் இருக்காது!)
2011இல் ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்குப் பிறகு, ஜப்பான்395 கி.மீ நீளம்12 அடி உயரமுள்ள கடல்சுவர் கட்டமைப்பை உருவாக்கியதுடன்,9 மில்லியன் மரங்களையும் நட்டது. இவ்விரு தடுப்புகளும் இணைந்து ஒரு"அடுக்குமுறைப் பாதுகாப்பு" அமைப்பாகச் செயல்படுகின்றன. இவை நீரின் வேகத்தை குறைக்கவும், அதன் ஆற்றலை உள்வாங்கி கொள்ளவும், அலை தாக்குவதற்கு முன்னதாகவே மக்கள் உயரமான இடங்களுக்கு செல்ல தேவையான முக்கிய நேரத்தை பெற்றுத்தரவும் ஒன்றிணைந்து உதவுகின்றன.
சிங்கப்பூரின் Gardens by the Bay-யில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்டு வந்த அரிய Costus fenestralis என்ற Spiral Ginger தாவரம், வரலாற்றில் முதல்முறையாக மலர்ந்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன் (Gabon)-ஐ தாயகமாகக் கொண்ட இந்தத் தாவரம், 2016-ஆம் ஆண்டில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பூவின் உண்மையான நிறமும் வடிவமும் இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாக இருந்தது, தற்போது மலர்ந்துள்ள பூவில் இளஞ்சிவப்பு நிற இதழ்களும், நடுவில் பிரகாசமான மஞ்சள் நிறப் பகுதியும் காணப்படுகின்றன.உலகிற்கு இந்தத் தாவரத்தின் முழுமையான தோற்றத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த நிகழ்வு, பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பொறுமையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளின் வெற்றியாக Gardens by the Bay நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது சிங்கப்பூரின் பசுமைப் பாரம்பரியத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
நேபாளம்: உலகிலேயே செவ்வக வடிவம் (Rectangle) இல்லாத ஒரே தேசியக் கொடியைக் கொண்ட நாடு.சவுதி அரேபியா: நாட்டில் நிரந்தரமாக ஓடும் இயற்கை நதிகள் எதுவுமே இல்லாத நாடு.ஐஸ்லாந்து: இயற்கையாகக் கொசுக்கள் மற்றும் கொக்குகள் இல்லாத நாடு.ரஷ்யா: நிலப்பரப்பில் புளூட்டோ (Pluto) கிரகத்தை விடப் பெரிய நாடு!ஆஸ்திரேலியா: நாட்டின் மனித மக்கள் தொகையை விட கங்காருகளின் எண்ணிக்கை அதிகம்.கனடா: உலகின் மற்ற அனைத்து நாடுகளிலும் உள்ள ஏரிகளை ஒன்று சேர்த்தாலும், அதைவிட அதிகமான ஏரிகள் கனடாவில் மட்டுமே உள்ளன.வாடிகன் நகரம்: உலகின் மிகச்சிறிய நாடு மற்றும் ஒரு நகரத்திற்குள் அமைந்த தனி நாடு.எகிப்து: நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 90% பேர் நைல் நதிக்கரையோரங்களிலேயே வாழ்கின்றனர்.பிரேசில்: உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானின் 60% பகுதி பிரேசிலில் தான் உள்ளது.நார்வே: "நள்ளிரவுச் சூரியனின் நாடு" — சில பகுதிகளில் கோடை காலத்தில் பல வாரங்கள் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை.
செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற சீனாவின் 'Long March 7A' ராக்கெட் ஏவப்பட்ட 85 வினாடிகளில் விண்ணில் வெடித்துச் சிதறியது. இது சீனாவின் விண்வெளி ஆய்வுக் கனவுகளுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.என்ன நடந்தது?ஏவப்பட்ட இடம்: சீனாவின் ஹெய்னான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.விபத்து: ராக்கெட் விண்ணில் பாய்ந்த 85 வினாடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து, செயற்கைக்கோளைச் சுற்றவட்டப் பாதையில் செலுத்த முடியாமல் வெடித்துச் சிதறியது.ஊடகங்கள் அமைதி: இச்சம்பவம் குறித்துச் சீன அரசு ஊடகங்கள் மிகக் குறைந்த அளவிலான செய்திகளையே வெளியிட்டுள்ளன.நிபுணர்கள் கருத்து: இந்தத் தோல்வி சீனாவின் அதிநவீன விண்வெளித் திட்டங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு என்று சர்வதேச விண்வெளி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துபாய்க்குச் செல்பவர்கள் இனி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை!சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, துபாயில் 'ரெய்னிங் ஸ்ட்ரீட்' (Raining Street) என்ற 24 மணி நேரமும் மழை பொழியும் பிரத்யேகத் தெரு உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை மழை தொழில்நுட்பம்: தெருவின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களின் கூரைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழாய்கள் மூலம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை செயற்கையாக மழை பொழிய வைக்கப்படுகிறது.குளு குளு சீதோஷ்ணம்: தெருவின் வெப்பநிலை எப்போதும் 27 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயராதவாறுகண்காணிக்கப்படுகிறது. இதனால் பாலைவன நாடான துபாயில், சுவிட்சர்லாந்தில் இருப்பது போன்ற குளிரான சூழல் நிலவுகிறது. குடைகள் இலவசம்: சுற்றுலாப் பயணிகள் மழையில் நனையாமல் ரசித்து நடப்பதற்காக இலவசக் குடைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இத்தெருவின் இருபுறமும் ஐரோப்பிய பாணியிலான ஆடம்பர உணவகங்களும், காஃபி கடைகளும் அமைந்துள்ளன.