.கார்த்திகை மாதம் தொடங்கியது முதல், ராஜபாளையம் பகுதிகளில் தொடர்ச்சியாக கன மழை பெய்ததால், உயரமாக உள்ள நிலத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தாழ்வாக இருந்த நிலத்தில் தேங்கி, பயிர்கள் 30 நாட்கள் வளர்ச்சி அடைந்தநிலையில் மழைநீரில் பருத்தி செடிகள் மூழ்கின.தண்ணீர் செல்லவழி இல்லாத காரணத்தால் 30 நாட்களுக்கு பிறகும் பருத்தி செடிகள் வளர்ச்சி முற்றிலுமாக அழுகும் அபாயநிலையில் உள்ளது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவழித்து மகசூல் பெற முடியாதநிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
விவசாய பயிர்களுக்கு நீர் ஆதாரமாக ராஜபாளையம் கண்மாய்கள், மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கும், கண்மாயிலிருந்து மழைநீர்வடிந்துசெல்லவடிகால், வரத்துகால்வாய்எனபல்வேறுஅமைப்புகள்செயல்படுத்தப்பட்டுவருகிறது.மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்த பகுதிகளுக்கும் வடி நீராகவும் சென்று வருவது அவசியம்.பாசன வாய்க்கால் ஆக்கிரமிக்கப்படுவதால் மழை நீர், கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி பாசன நீர் வெளியேற வழி இல்லாமல் வயல்களில் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள நீரில் பயிர்களின் வேர்கள் அழுகுவதுடன் வளர்ச்சி தடைப்பட்டு பயிர்கள் சேதம் அடைவதுடன் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.பாரம்பரியமான நீர்வரத்து வழித்தடங்கள், பாசன வாய்க்கால்கள் குறித்து வருவாய் துறையினரிடம் முறையான கணக்கீட்டை பராமரித்து ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு கண்காணித்து இவற்றை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
புது பஸ் ஸ்டாண்ட் சென்று வரும் பஸ்கள் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அடுத்த பஸ் ஸ்டாப் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு எடுத்து அப்பகுதி சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அனைத்துவாகனங்கள் இப் பகுதி வழியே செல்வதால், நெருக்கம் அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் குழாய் உடைப்பும் அதனால் ஏற்படும் ரோடு சேதம் நீண்ட நாட்களுக்குப் பின் சீரமைப்பு மீண்டும் குழாய் உடைப்பு என தொடர்கதையாக இருந்து வருகிறது .இந்நிலையில் அடிக்கடி சேதமாகும் - குழாய் அதனால் ஏற்படும் பள்ளம் தற்காலிக தீர்வாக வைத்து தடுப்புகளை தடை ஏற்படுவது இப்பகுதிக்கு சகஜம் ஆகிவிட்டது. நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை கோட்டத்தில் ரயில்களை 130 கி. மீ., வேகத்தில் இயக்குவதற்காக தண்டவாள சீர மைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கூடல் நகர், சமயநல்லுார், சோழவந்தான் பிரிவில் தினமும் நான்கு நேரம் பராமரிப்பு நடைபெறுகிறது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தினசரி ரயிலான செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. பல மாதங்களாக இது போன்ற அறிவிப்பினால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, பயணிகள் மதுரை செல்வதற்கு விருதுநகர் இறங்கிபஸ்களில் பயணிக்கின்றனர். இத்துடன் குருவாயூர் சென்னை ரயிலும் மாற்றுபாதையில் இயக்கப்படுகிறது. பணிகள் முடிவடையும் வரை ராஜபாளையம் வழியாக செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு கூடுதலாக புதிய ரயில் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்த நிலையில், கட்டடங்கள் பலமிழந்ததால்,ரூ.3கோடி 40லட்சம்செலவில்புதுப்பிக்கப்பட்டுகலைஞர்நகர்புறமேம்பாட்டுதிட்டத்தின்கீழ் ,மே 29 இல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.தினமும் 300க்கும் அதிகமான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் இதுவரை பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர், கழிப்பறைஉள்ளிட்ட அடிப்படை வசதிகள் ,கிராமங்களுக்கு செல்லும் நேர அட்டவணை வைக்காமல் , ஊர், பெயர் வழித்தடங்களும் எழுதப்படவில்லை . பணிக்கு செல்பவர்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் நுழைவுப் பகுதி ஓரங்களிலும் உள் பகுதியிலும் டூவீலர்பார்க்கிங்காக மாற்றி ஆக்கிரமித்துள்ளனர். இரவில் பயணிகள் இயற்கை உபாதைக்கு வழியில்லாத வகையில் 8:00 மணிக்கு மேல் கட்டண கழிப்பறைகள் பூட்டப்படுகிறது. வளாகத்தில்கடைகள் ஏலம் விடப்படாததால் புதிய கடைகள் திறக்காமலும் உணவகங்கள் செயல்படாமலும் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட்திறக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்தும், செயல்பாட்டிற்கு வந்தும் , பயணிகளுக்கு வசதிகள் இல்லை. இதை யார் சரிசெய்வார்கள் ? மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரயில்வேமேம்பாலம் ராஜபாளையம் பி.ஏ.சி. ஆர் ரோட்டில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் அகலமாகவும் வளைவுடன் காணப் படுவதால் வேகமாகசெல்லும் வாகனங்கள் ஏறி இறங்கும் போது கட்டுப்பாடின்றி மோதி விபத்துக்குஉள்ளாகின்றன. கடந்த இரண்டு மாதத்திற்குள் 15 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மேம்பாலத்தின் நடுவே சென்டர் மீடியன் அமைத்து இரவு நேர ரிப்ளக்டர்கள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை செயல் பாட்டிற்கு வந்த பின்பும் கால்வாய்களில் மழைக் காலங்களின் போது பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் சென்று பாதிப்பு ஏற்படுத்துகிறது. சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ்ஸ்டாண்ட் செல்லும் ஓடையில்மக்களால் துாக்கி வீசப்பட்ட குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக்பைகள், தெர்மாகோல் ஓடை பாலத்து தூண்களில் தடுக்கப்பட்டு மொத்தமாக தேங்கிநின்றன.இவற்றை அகற்ற துாய்மை பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.கடந்த முறை பெய்த கன மழையால் அகலமான கால்வாயையும் மீறி கழிவு நீர் ரோட்டில் ஓடியதுடன் அருகாமையில் இருந்த வாகன காப்பகம் உள்ளிட்டவைகளுக்குள் புகுந்து பலத்த சேதம் ஏற்படுத்தின.ஒருமுறை உபயோகித்து வீசி எரியும் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில்நகராட்சி பகுதிகளில் ,கண்காணிப்பை அதிகரிப்பதுடன் கழிவுகளைமுறையாகதூய்மைபணியாளர்களிடம்ஒப்படைக்கவேண்டும்.இதுகுறித்துதொடர்விழிப்புணர்வுநடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் எதிர் பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடியில் - ஈடுபட்டு வரும் விவசாயிகள், போதிய மழை இல்லாததாலும், கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் விவசாய பணிகளில் தொய்வு ஏற்பட்டது.கடந்த மாதம் பெய்த தொடர்மழையின் காரணமாக ஊருணி, கண்மாய் உள்படநீர்நிலைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.ராஜபாளையம் நகர்மற்றும்அதன்சுற்றுவட்டார கிராமங்களில்தற்போதுவிவசாயபணிகள் நடைபெற்றுவருகின்றன.கருங்குளம், கடம்பன்குளம், கொண்டனேரி, தெற்கு வெங்காநல்லூர், கொல்லம்கொண்டான், நக்கனேரி, சேத்தூர், முகவூர், சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம், புத்தூர், நல்ல மங்கலம், மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண் டான், முதுகுடி ஆகிய ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் வயல்களைசீரமைக்கும் பணி, உழவு பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நாற்று நடவு பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பறவைகள் வயல்களில் மேயும்போது அதன் எச்சத்தை வயலில் இடுவதால் உரமாக பயன்படுகிறது. விவசாயிகளுக்குதேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்டநிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் அப்டேட் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் இதற்கான கெடு என தகவல் வந்ததில் தினமும் ராஜபாளையத்தில் செயல்படும் ஏழு முகாம்களுக்கு மாணவர்களின்பெற்றோர் படை எடுத்தனர்.மொத்தம் உள்ள ஆதார் சேவை மையங்களில் ஸ்டேட் பேங்க், நகராட்சி அலுவலகம் இரண்டும் பழுது காரணமாக செயல்படாத நிலையில் தனியார் வங்கி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட மற்ற இடங்களில் பள்ளி மாணவர்களு டன் பெற்றோர் கூடினர்.பி.எஸ்.கே பார்க் அருகே நேற்று தனியார் வங்கியில் நுாற்றுக்கும் அதிகமான பெற்றோர்ஒன்று கூடியதால் சிக்கல் ஏற்பட்டது. தினமும் வந்து பதிவு செய்ய முடியாமல்திரும்பி செல்வதாக கூறி வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் மாணவர்களின் பெற்றோரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுகலைந்து போக செய்தனர்.நாள் ஒன்றுக்கு 30 டோக்கன் மட்டும் வழங்குகின்றனர். அப்டேட்டிற்கான கால அவகாசம் இல்லாததால் தொலைதூரத்தில் இருந்து வந்துஏமாற்றத்துடன் திரும்புகிறோம். பள்ளி சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடுசெய்து மாற்று வழி காண வேண்டும், என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதி பாதசாரிகளின் பாது காப்பிற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் சென் றுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை,முடங்கி யார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட நகரைசுற்றிலும் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் பலஆண்டுகளாக முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன.சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காகநெடுஞ்சாலைக்கு இடங்கள் அளவீடு செய்யப்பட்டு குறியீடு வரையப்பட்டு,ஆக்கிரமிப்பு சொந்தமான அகற்றும் பணிகள் நடக்காததால் மேலும் புதிதாகமுளைத்துள்ளன. சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும் ,வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், அமைக்கப்பட்ட இவற்றை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் ,ரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ,அதிகரித்து வருவதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. நகர் பகுதிபோக்குவரத்து நெரிசலை சீராக்க நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, வருவாய்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறனர்.