கோழி முட்டையில் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது.
மருத்துவ அறிவியல்கோழி முட்டையில் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது என்று கூறுகிறது. 100 கிராம் முட்டையில் கால்சியம் 56 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் என்பது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. தசை ஒத்துழைப்பு மற்றும் நரம்பு செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. முட்டையில் இரும்புச்சத்து 1.75 மி.கி உள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் தட்டுக்களை உருவாக்கி ஆக் சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. உடல் சோர்வு மற்றும் நரம்பு பலவீனத்தை தடுக்கிறது. பாஸ்பரஸ் சத்தும் மிகுதியாக உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களை உருவாக்கும் பொருளாகும். முட்டையில் பொட்டாசியம் சத்தும் இருப்பதால், இதய துடிப்பை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. முட்டையில் உள்ளசோடியமானது, திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதுதவிர செலினியம், துத்தநாகம், மக்னீ சியம், மாங்கனீசு சத்துக்களும் அடங்கி உள்ளன. மேலும் முட்டையில் காணப்படும் வைட்டமின்கள், கொழுப்பு சத்துக்கள் மனித உடலை பல நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக உள்ளன.
0
Leave a Reply