25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


முதுமை

Dec 10, 2025

தனியே வசிக்கும் முதியோர்களின் கவனத்திற்கு...

கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வரும் இன்றைய காலத்தில் தனித்திரு நிலையில்தான் பல முதியோர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கல்விக்காகவோ, திருமணமாகியோ, வேலை விஷயமாகவோ குழந்தைகள் வெளியூர் சென்று விடுகிறார்கள். இதனால் முதியோர்கள் தனியாக வசிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் உருவாகி வருகிறது. இப்படித் தனியாக வசிப்பவர்கள் 'விழித்திரு' மனநிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சில தற்காப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான்தனிமையும் இனிமையாக மாறும்.தனியாக வசிக்கும் முதியோர்கள். அக்கம்பக்கத்தினரிடம் நல்ல உறவை வைத்துக்கொள்வது அவசியம்.அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதையோ, அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதையோ தவிர்க்க வேண்டும்.கதவுகளைக் கொஞ்சமாகத் திறக்கும்விதமாகக் கதவுக்கும் வாசலுக்கும் இடையே சங்கிலி பொருத்திக்கொள்ள வேண்டும்.வீட்டில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டும். அந்தக் காட்சிகளை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் குழந்தைகள், உறவினர்கள் பார்க்கும்விதமாக அமைத்துக் கொள்ளலாம். இந்தப் பாதுகாப்பு உணர்வே நிம்மதியை அளிக்கும்.வீட்டில் டார்ச்லைட் வைத்திருப்பது அவசியம். இன்வெர்ட்டர் இணைப்பு இருந்தால்,மின்சாரம் தடைப்பட்டாலும் கவலை இல்லாமல்இருக்கலாம்.அவசர உதவி தேவைப்படும்போது போன் அழைக்க, வீட்டுக்கு அருகே இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் தொலைபேசி செய்து எண்களை வைத்திருங்கள்.சற்று அதிக சத்தம் எழுப்பக்கூடிய அலாரமும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.தினமும் வெளியூரில் உள்ள உங்கள் குழந்தைகள், உறவினர்களுடன் பேசுங்கள். அது நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்யும்."சிறிது தூரமே வெளியே சென்றாலும், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய உங்களின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். சில சமயங்களில் இது உயிரைக்கூடக் காக்க உதவும்.வெளியில் செல்லும்போது தேவையில்லாமல் அதிக நகைகளை அணிய வேண்டாம். முதுமையில் நகை மற்றும் ஆடை ஆபரணங்களில் அதிக நாட்டம் வேண்டாம். இதன்மூலம் தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்கலாம்.விழாக்களுக்குச் செல்லும்போது முடிந்தவரை தனியாகச் செல்ல வேண்டாம். யாரையேனும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். பாதுகாவலர் மற்றும் வேலையாட்களை நியமிப்பதில் கவனம் தேவை. வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர் போன்றவர்கள் முன்னே பணத்தைப் பற்றியோ நகைகளைப் பற்றியோ பேச வேண்டாம்.நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்புக்காக வளர்க்கலாம். பாசமாக இருக்கும் அவை மனதுக்கும் ஆறுதல் தரும்.இரவில் சிறிய விளக்கு எரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிச்சம் இருக்கும் இடத்துக்குத் திருடர்கள் பெரும்பாலும் செல்ல மாட்டார்கள்.மேற்கண்ட வழிமுறைகளை முடிந்தளவுக்குக் கடைப்பிடியுங்கள். காலம் செல்லச் செல்ல நீங்கள் தனியாக இருப்பதை மறந்து பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர்வீர்கள் .

Dec 03, 2025

ஆஸ்துமா நோயாளிகள் அவசியம் செய்யக்கூடாதவை,செய்யக்கூடியவை

செய்யக்கூடாதவைசுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது..புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விடவும்.அலர்ஜி, ஆஸ்துமாவைத் தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்.மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), தூக்கமின்மை, காய்ச்சல் ஆகியவை வந்தால் தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுகவும்.வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணம்: பூனை, நாய், புறா, கிளி.தூசு, குப்பை,அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும்.படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமாவை உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால்  அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்படும் போது பயப்படக்கூடாது.வீட்டு உபயோக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கத் தயங்கக்கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தும் போது புகைப்பிடிக்ககூடாது, வெடித்துவிடும்.தனிமை தவிர்க்கப்பட வேண்டும்.மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும் பயிற்சியும் தேவை.மார்பு பிசியோதெரபி தேவைப்படும்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (உள்ளிருக்கும் சளியை வெளிக்கொணர)சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது.ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம் செய்யக்கூடியவை.முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம்.வாகனம் ஒட்டும் போதும், சமையல் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்வது அவசியம்.ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரிடம், தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காட்டுவது மிக முக்கியம்.யோகா பயிற்சி அவசியம்.சரியாக உட்காரும், உறங்கும் முறைகள் தெரிய வேண்டும்.தொப்பை, உடல் பருமனைக் குறைக்கவும்.மன தைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் வேண்டும்.ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே தொடங்க வேண்டும்.தேவைப்படும் போது நீராவி பிடித்தல்.சைனஸ், வயிறு எரிச்சல் போன்றவை தீர்க்கப்பட வேண்டும்.இன்ப்ளுயன்சா, நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.மருந்துப் பம்புகள் உபயோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்கத் தயங்கக்கூடாது.காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.வீட்டில் அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alarm) தேவை.

Nov 26, 2025

முதுமையில் மனச்சோர்வின் அறிகுறிகள் .

மற்ற நோய்களைப் போல அல்லாமல் இந்நோயின் அறிகுறிகள் பலதரப்பட்டவை.தொடர்ந்து சோகநிலை, குற்ற உணர்வு, தகுதியற்றஉணர்வு,உதவியற்றஉணர்வு, நம்பிக்கையின்மை, எல்லாம்கெட்டதுஎன்கிறமனப்பான்மை, பொழுதுபோக்கில்நாட்டம் இல்லாமை, தூக்கமின்மையால் அதிகாலையில் எழுந்துவிடுவது, அளவுக்கு அதிகமாகத் தூங்குவது, பசி குறைதல், எடை குறைதல் அல்லது அதிகமாக உண்டு உடல் பருமன் அடைவது, சக்தியின்மை, அதிக அளவு களைப்பு, தற்கொலை பற்றிய எண்ணம், தற்கொலைக்கு முயற்சிசெய்வது, மனப்பதற்றம். கவனமின்மை, மறதி, எதிலும் முடிவுஎடுக்க முடியாத நிலை மற்றும் சிகிச்சைக்குப் பயனளிக்காத உடல் உபாதைகள்... உதாரணம்:தலைவலி, வயிற்றுக்கோளாறு, உடல் வலி.நோய்களைத் தவிர மனச்சோர்வு வருவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. உதாரணம்: த தள்ளாமை, மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை, தொடர்ந்து படுக்கையில் இருக்கவேண்டிய நிலை, வறுமை,கடன் தொல்லை,உறவினரின் எதிர்பாராத இழப்பு, குடும்பத்திலோ, சமுதாயத்திலோ மதிக்காத நிலை. இவ்வாறு வயதான காலத்தில் மனச்சோர்வு வருவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு.மனச்சோர்வு மிகவும் முற்றிய நிலையில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பர்.முதுமையில் இம் மனநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவ்வளவு சுலபமல்லவலிமை அடையச் செய்ய மருந்தை விட, முதியோர்களுடன் கலந்துபேசி முதலில் அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதே முக்கியமானதாகும். அவர்களின் மனச்சோர்வுக்கு உடல் நோயைத் : தவிரமற்ற காரணங்கள் இருப்பின் அதற்குத் தக்க வழிமுறைகளைச் செய்துகொடுக்க வேண்டும். இந்த மனநலச் சிகிச்சையை அடிக்கடி தொடர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும். உதாரணம்: வீட்டில் உள்ளவர்களிடம் பேசி முதியோர்களுக்குத் தக்க மரியாதை அளிக்கச் செய்தல், தனிமையைத் தவிர்க்க நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தல், வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல். ஆன்மிகத்தில் ஈடுபடச் செய்தல், தியானம் செய்யப் பழக்கப்படுத்துவது, முடிந்த அளவுக்கு நிதி வசதி பெற ஆலோசனைகூறுதல்... இப்படி

Nov 19, 2025

நிமோனியா.

முதியோர்களுக்கு வரும் இருமல்  சளித் தொல்லைகளில் நிமோனியா  முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோய் இந்நோய் உள்ளவர்கள் இருமும்போது காற்றின் மூலம் மற்றவர்களுக்குப் பரவும். இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி, இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சுத் திணறுதல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும் பொழுது சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (சைனஸ்) மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கேகூட ஆபத்தை விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையைக்கூடஏற்படுத்தும்.நிமோனியா வர வாய்ப்புள்ளவர்கள்மிகவும் வயதானவர்கள்.நீரிழிவு நோய்.இதய நோய்.சிறுநீரக நோய்.தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள்.அதிகமாக மது அருந்துபவர்கள்.ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள்.சமீபத்தில் ப்ளூ ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.ஆஸ்துமா, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.தூசி நிறைந்த இருப்பிடம். புற்றுநோய்மாற்று உறுப்பு பெற்றிருப்பவர்கள்எய்ட்ஸ் நோய்முதுமையில் நோயின் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்நோய் மரணத்தைக்கூட விளைவிக்கும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதே நல்லது. இதற்கும் தடுப்பூசி உண்டு. சுமார் 50 வயதைக் கடந்தவர்கள் ஆயுளுக்கு ஒரே ஒருமுறை இந்த ஊசியை எடுத்துக்கொண்டால் போதும், ஒருசிலருக்கு, முக்கியமாக இணை நோய் உள்ளவர்கள் மட்டும் ஓராண்டு கழித்து இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம்.இந்த தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் எதுமில்லை, தேவைப்படுவோர் இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்.

Nov 12, 2025

டிமென்சியா நோயாளிகளை கவனித்துக்கொள்ள..,

டிமென்சியா நோயாளிகள் அன்றாட தேவைகளைச் சரிவரச் செய்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.முடிந்த அளவுக்கு நோயாளிகள் தனித்தே செயல்பட ஊக்குவிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.நோயாளியை எதிர்த்துப் பேசவோ, அவருடைய செய்கை சரியில்லை என்றோ வாதாடக் கூடாது.அவரிடம் உள்ள திறமைகளைப் பாராட்டி, அதைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.நோயாளிகளிடம் பேசும்போது தெளிவாகவும், நிதானமாகவும், நேருக்கு நேர் அவர் புரிந்துகொள்ளுமாறு பேச வேண்டும்.ஆறுதலாகத் தொடுதல், கையைப் பிடித்துக்கொள்ளுதல், தடவிக் கொடுப்பதன் மூலம் நம்முடைய அன்பைத் தெரிவிக்க வேண்டும்.எந்தச் சூழ்நிலையிலும் அவரைத் தனிமைப்படுத்த வேண்டாம்.முடிந்தவரை உணவு உண்ணும்போதும், தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் அவரும் உங்களோடு சேர்ந்தே இருக்கட்டும்.அவருக்கே தெரியாமல், இருந்த  இடத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டால், அதைப்பெரிதுபடுத்த வேண்டாம். நோயின்காரணமாக இதைப் போன்றே அவர் செய்யும் சிலவேலைகள் அவரை அறியாமலேயே நடக்கின்றன.சத்தான உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உணவை அவரே எடுத்து உண்ண முடியாத நிலை வரும்போது. நீங்கள் ஊட்டிவிட வேண்டிய நிலை ஏற்படும். அதை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாக எண்ணுங்கள்.மருந்தை அவரே எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் அவர் உட்கொள்ள மறந்துவிடுவார் அல்லது மருந்து சாப்பிட்டதை மறந்து, மறுமுறை அந்த மருந்தையே சாப்பிட்டுவிடுவார். ஆகவே, உறவினர்களே மருந்தைக் கொடுக்க வேண்டும்.சில நேரங்களில் கோபமாகவும் பதற்றமாகவும் முரட்டுத்தனமாகவும் நடக்கலாம். அப்போது அவரிடம் நீங்களும் உங்களின் முரட்டுத்தன்மையைக் காண்பிக்க வேண்டாம். சாந்தமாகப் பேசி, படுக்கையில் படுக்க வைத்து, தேவையான மாத்திரைகளைக் கொடுத்தால் அவர் சாந்தமடைவார்.முடிந்தவரை நடைப்பயிற்சி செய்யுமாறு ஊக்குவிக்கலாம்.புலன் உறுப்புகளைத் தூண்டும் பயிற்சிகள்: தொட்டு அறியும் உணர்வுகளைத் தூண்டக்கூடிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்உதாரணம்: கண்களை மூடிக்கொண்டுபொருட்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. உள்ளிருப்பதைக் காணமுடியாதபடி வெவ்வெறு பொருட்களை ஒரு பையில் போடவும். அவர் கையை உள்ளே விட்டு அந்தப் பொருட்களை என்னவென்று யூகிக்கச் செய்ய வேண்டும்டிமென்சியாவினால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள், பழக்கத்துக்கு ஒரு குழந்தையைப் போல! அவர்களுக்கு குழந்தைக்குரிய அன்பையும், பெரியவருக்குரிய மரியாதையையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். மறதி உள்ளவர்கள் தானே, அவர்களுக்கு என்ன தெரியும் என்று எதிலும் குறைகள் வைக்க வேண்டாம். இது தெய்வத்தையே ஏமாற்றுவது போல ஆகும் !

Nov 05, 2025

நியூரோவைப்ரோமெட்டோசில். (Neurofibrometosis)

சருமத்தில் ஏற்படும் பல பரம்பரை நோய்களில் இதுவும் ஒன்று. இக்கட்டிகள் அனைத்தும் நரம்புகளில் தோன்றி, உடலில் கை, கால், முகம், முன்பக்கம், பின்பக்கம் மற்றும் தண்டுவடத்தில் தோன்றும். வலி ஏதுமிருக்காது. இது புற்றுநோய் இல்லாத கட்டி. காப்பி நிறத்தில் மூன்றுக்கு மேற்பட்ட மச்சங்கள் இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புண்டு. பெரிய கட்டிகள் இருப்பின் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். இதற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது.

Oct 29, 2025

முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கவனம் தேவை.

முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கீழ்க்காணும் தொல்லைகள் ஏதேனும் ஏற்பட்டால், நீங்கள் அளவுக்கு அதிகமாகச் செய்துள்ளதாக அர்த்தம். நாடித்துடிப்பு 120க்கு மேல் சென்றால்,இதயத்தில் படபடப்பு ஏற்பட்டால்,மார்பில் வலி ஏற்பட்டால்,மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்,அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டினால்,வழக்கத்துக்கு மாறான பலவீனம் இருந்தால்,மூட்டுகளில் வலி ஏற்பட்டால், உடனேஉடற்பயிற்சியை நிறுத்தி விட்டு டாக்டரின் ஆலோசனையைப் பெறவும்.

Oct 22, 2025

உணவை மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்களுக்கான சில யோசனைகள். 

பல் இல்லாத முதியோர்கள் உணவை மென்று சாப்பிட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பெரும்பாலும் திரவ உணவையோ அல்லது திரவம் அதிகமாகக் கலந்துள்ள உணவையோதான் எடுத்துக்கொள்வார்கள். இதனால் உணவின் அளவு மட்டுமல்ல... அதன் ஊட்டச்சத்து நிலையும் குறைந்துவிடும்.மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்கள் ,. இவற்றைப் பின்பற்றினால்அவர்களின்ஊட்டச்சத்துநிலைமேம்பட்டு,ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பால் அருந்தவும்.பனீர், சீஸ் சாப்பிடவும்.மெல்வதற்குக் கடினமான பொருள்களை நன்றாக அரைத்து, மசித்துச் சாப்பிடவும்.காய்கறிகளை வேகவைத்து மசித்துச் சாப்பிடவும்.மிருதுவான பழங்களான வாழை, பப்பாளி, மாம்பழம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிடவும் அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ்கள் குடிக்கவும்.குழைய வேகவைத்த சாதம், சேமியா, பொங்கல் மற்றும் உப்புமா சாப்பிடலாம்.வேகவைத்த முட்டை.மிருதுவான இறைச்சி.வேகவைத்த மிருதுவான மீன். தக்காளி போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட வேண்டியிருந்தால் பொடியாக நறுக்கியோ, தோலுரித்தோ சாப்பிடலாம்.சூப் வகைகள்.ரொட்டித் துண்டுகளைப் பாலோடு சேர்த்துச் சாப்பிடலாம்.ஜஸ்க்ரீம், ஜெல்லி, புட்டிங்ஸ், பாயசம், பாஸந்தி, ஜாமூன் மற்றும் ஜாங்கிரி போன்ற மிருதுவான உணவுகளைச் சாப்பிடலாம்

Oct 15, 2025

குளிரைச் சமாளிக்க….

தமிழ்நாட்டில் குளிர்தாலம் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும். மழை சற்றுக் குறைவாகவும் குளிர் அதிகமாகவும் உள்ள பருவம் இது. இருப்பினும் அனைவரும் விரும்பும் பருவம் இக்காலம் தான். சுட்டு எரிக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து இளைப்பார, இது ஒரு பொன்னான பருவம். இம்மாதங்களில் சிறுசிறு தொல்லைகளும் நோய்களும் வர வாய்ப்புண்டு.முடிந்தளவிற்கு வீட்டிலேயே உணவை உண்ண வேண்டும்.கொதிக்கவைத்து, ஆறவைத்த தண்ணீரையே வீட்டிலேயும், வெளியிலேயும் குடிக்க வேண்டும்.இருமல்,சளி வர வாய்ப்பு அதிகமுள்ளதால், அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.அவசியம் ஃபுளூ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.ஆஸ்துமா நோயுள்ளவர்கள் தேவைப்பட்டால் காலம் தாழ்த்தாமல், இன்ஹேலரை உபயோகப்படுத்த வேண்டும்.குளிரைக்குறைக்கும் கம்பளி ஆடைகளையே முடிந்தளவிற்கு உபயோகிக்க வேண்டும்.தவறாமல் செய்யும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம்.பக்கவாதம், உதறுவாதம் போன்ற நோய் உள்ளவர்களுக்கு, இயன்முறைச் சிகிச்சை அவசியம்.யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.மலச்சிக்கல் வர  வாய்ப்பு அதிகம். ஆகையால் அதற்கு நிவாரணம் பெற நிறைய பழங்கள். காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வெங்காயம், பீட்ரூட் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.தாகம் அதிகம் இருக்காது. ஆகையால் சுமார் 2 - 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.முடிந்தளவிற்கு காபி, டீயைக் குறைத்துக்கொண்டு சூடான சூப்பை அருந்தலாம்.வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் தோலுக்கு நல்லது. தோல் வறட்சியை நீக்கும்.கொய்யா, மாதுளம் பழம் குளிர்காலத்திற்கு ஏற்ற பழம்.பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகளைச் சற்று அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.குளிர்காலத்தில் பசி சற்று அதிகம் இருக்கும். அதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு, உணவில் கவனம் தேவை.மேற்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்தால், குளிரை எளிதாகச் சமாளித்துவிடலாம்.

Oct 08, 2025

தைராக்ஸின் அதிகம் சுரத்தல்

இந்நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் என்று பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாகச் சுரக்கிறது என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்குதைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். சிகிச்சைக்கு முன்பு இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக்கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியதுபோல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு வீங்கி இருக்கும்.கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடலில் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது. உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.முதியோர்களுக்கு நாடித்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்றதொல்லைகள் இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாகச் சுரக்கும் நோயிருப்பதாகக் கருதி, அதை உறுதிசெய்யப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதல் கண்டறிய முடியும்.

1 2 3 4 5

AD's



More News