மூட்டுத் தேய்மானத்தால் முழங்கால், இடுப்பு முதுகுத் - தண்டு மற்றும் கழுத்துகளின் மூட்டுகள் மிகுதியாகப் பாதிப்புக்கு உள்ளாகும். முதலில் மூட்டு வலி விட்டுவிட்டுத் தோன்றும். படிக்கட்டு ஏறும்போதும் தொடர்ந்து தரையில் அமர்ந்திருந்து எழும்போதும் முழங்கால் வலிமிகுதியாய் ஏற்படும். காலையில் படுக்கையிலிருந்து எழும்போது மூட்டுகள் சற்று இறுக்கமாக இருக்கும். முழுங்காலை மடக்கி நீட்டும்போது ஒருவித சத்தமும் உண்டாகும். இடுப்பு, முழங்கால்களில் வலி மிகுதியாய் இருந்தால் நடை குறையும். தள்ளாடிக் கீழே விழவும் நேரிடலாம். நாள்பட்ட வலியினால் மனம் சோர்வு அடையும். இரவில் தூக்கம் பாதிக்கும்.இந்நோய் கழுத்திலுள்ள மூட்டுகளைத் தாக்கும் பொழுது (cervical spondylosis) கழுத்தின் அசைவு குறைந்து, பின்புறம் வலி தோன்றும்.இவ்வலி கழுத்தை அசைக்கும் போது தோள்பட்டைக்கும், கைகளுக்கும் பரவிச் செல்லும். மேலும் கழுத்தினைப் பக்கவாட்டிலும் மேலும் கீழும் திருப்பும் பொழுதும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் மயக்கம் ஏற்படும்.இந்த நோய் தண்டுவடத்தைத் தாக்கும்போது கை கால்களில் மரத்த உணர்ச்சி ஏற்பட்டு, அவை வலிமை இழக்கும். நடை தள்ளாடும். இந்நோய் கீழ் முதுகிலுள்ள எலும்புகளைப் பாதிக்கும்போது (lumbar spondylosis) குனிந்து நிமிரும்போது முதுகுவலி அதிகமாகும். சில நேரங்களில் முதுகிலிருந்து இரண்டு கால்களுக்கும் வலி பரவிச் செல்லும்.தேய்மானத்தினால் மூட்டு வலி ஏற்படுவதால் மருந்துகள் மற்றும் மாற்றுச் சிகிச்சைகள் வலியைக் குறைக்க முடியுமே தவிர பூரணமாகக் குணப்படுத்த முடியாது. தேய்மானம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
விக்கல் என்பது ஒருவருடைய உதர விதானம் அவரை அறியாமலேயே துடிப்பதால் ஏற்படும் ஒரு சத்தமே ஆகும்.வயதான காலத்தில் விக்கல் ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தான அறிகுறி என்கிறார்கள். விக்கல் ஏற்பட்டவர் களிடம் தீடீரென்று மிக்க அதிர்ச்சியைக் கொடுக்கும் செய்தியை சொன்னால் விக்கல் நின்றுவிடும் என்று சொல்கிறார்கள். இவையெல்லாமஎந்த அளவிற்கு உண்மை.உதரவிதானம் என்பது வயிற்றுக்கும் நெஞ்சுப்பகுதிக்கும் இடையிலே இருக்கும் ஒரு மெல்லிய சதையாகும். இதை நம்விருப்பம் போல் இயக்க முடியாது.விக்கலுக்கு பல காரணங்கள் உண்டு .குளிர்பானங்கள் அருந்துவது,அதிவிரைவாக உண்ணுவது,மன உளச்சல்,வயிற்றுப் புண்,நீரிழிவு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல்,தூக்க மாத்திரை, ஸ்டீராய்டு மாத்திரைப் பயன்பாடு,நரம்பு சார்ந்த தொல்லைகள்: உதாரணம் - பக்கவாதம், மூளையில் ஏற்படும் கட்டி உதரவிதானத்துக்குக் கீழே சீழ்க் கட்டி சோடியம், பொட்டாசியம் குறைந்தாலோ, அதிகரித்தாலோ விக்கல் வரலாம்சில மணித்துளிகள் மட்டுமே விக்கல் வந்து போவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, விக்கல் தொடர்ந்து இருப்பின் உடனே மருத்துவரை நாட வேண்டும். முதலில் விக்கலுக்கான காரணத்தைக் கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். விக்கல் என்றாலே உயிருக்கு ஆபத்து என்று எண்ண வேண்டாம்.விக்கல் தொடர்ந்து 24 - 48 நேரத்துக்கு மேல் இருந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். சாதாரணமாக வரும் விக்கலுக்கு Baclofen மற்றும் Chlorpromazine மாத்திரையை மருத்துவர் பரிந்துரைப்பார். மருத்துவரின் ஆலேசானையின்றி ஒருவர் மேற்கண்ட மருந்துகளை உண்ண வேண்டாம்.ஒரு சில மணித்துளிகள் ஏற்பட்டால் அது தானாகவே சிகிச்சையின்றிச் சரியாகி விடும். ஆனால், விக்கல் தொடர்ந்து இருப்பின் அது நல்லதல்ல, கெட்டதுதான்.
இந்த நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் "என்று பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாகச் சுரக்கிறது என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்குதைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம்.இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக்கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியதுபோல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு மட்டும் தைராய்டு சுரப்பி வீங்கி இருக்கும்.கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடலில் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது.உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.முதியோர்களுக்கு நாடித்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்ற தொல்லைகள் இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாகச் சுரக்கும் நோயிருப்பதாகக் கருதி, அதை உறுதிசெய்யப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதில் கண்டறிய முடியும்
முதியோர்கள் அடிக்கடி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கும் இறப்பதற்கும் தொற்று நோய்களேகாரணமாகும். இதைத் தடுப்பதற்குத் தடுப்பூசிஒன்றினால் மட்டுமே முடியும்.தொற்று நோய்கள் வரக் காரணங்கள் நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சத்துணவுக் குறைவினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம்.உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் தொற்று நோய்கள் வர வாய்ப்பு அதிகமுண்டு.தோல் மிகவும் மிருதுபடுவதால் சுலபமாகத் தோல் சிராய்ப்பு அல்லது புண்கள் ஏற்படலாம்.ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் சிறுநீர்ப்பையில் நீர் தேங்கிப்பூச்சித்தொல்லைகளுக்கு வழிவகுக்கலாம்.பெண்களுக்கு ஹார்மோன் குறைவினால் பிறப்புறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு பூச்சித் தொல்லைகள் வர வாய்ப்பு உண்டாகலாம்.உடலில் இருக்கும் பல நோய்களினாலும் எதிர்ப்பு சக்தி குறையலாம். உதாரணம்: நீரிழிவு நோய், தைராய்டு தொல்லை, சீறுநீரகச் செயலிழப்பு. முதுமையில் காணும் தொற்றுநோய்கள்நெஞ்சக நோய்கள்: ப்ளூ, நிமோனியா, காசநோய் சிறுநீர் தாரை நோய்கள்: ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினாலும், பெண்களுக்கு இறுதி மாதவிடாய் சமயத்தில் பிறப்புறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களினாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சிறுநீர்ப்பை சரிவரச் சுருங்கி விரிவடையாத காரணத்தினால்வயிறு: குடல் சார்ந்த பூச்சித் தொல்லைகள். உதாரணம்: டைபாய்டு, சீதபேதி, பித்தப்பையில் பூச்சித்தொல்லை மற்றும் கெட்டுப்போன உணவு உண்பதால்தோல் சார்ந்த தொற்று நோய்கள்: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குப் படை மற்றும் சிறுசிறு கொப்புளங்கள். அக்கி சார்ந்த அம்மை நோய்களும் வரலாம். மூளை, எலும்பு மற்றும் இதய வால்வுகளிலும் தொற்று நோய்கள் வரலாம்.நோய் தடுப்பு என்றால் குழந்தைகளுக்கு மட்டும்தான் என்ற காலம் போய், முதியோர்களுக்கும் உண்டு என்ற வந்துள்ளது.சில தொற்றுநோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் அந்நோய்கள் வராமலே தடுத்து நலமாக வாழமுடியும். முதுமைக் காலத்தில் நலமாய் வாழச் சீரான உணவு முறையும், உடற்பயிற்சியும் எப்படி அவசியமோ அதுபோலத் தடுப்பூசியும் அவசியம்.
வலது கையில் உள்ள மோதிர விரல் அடிக்கடி மடங்கிப் போய்விடுகிறது. அதை இடது கையை வைத்து நிமிர்த்தினால் பழைய நிலைக்கே வந்துவிடுகிறது. விரல் மடங்கும்பொழுது சற்று வலிக்கிறது. மற்றபடி செய்யும் வேலைகளில் எந்தத் தொந்தரவும் இல்லை. இது எதனால் வருகிறது. இதற்கு சிகிச்சை முறை.உங்களுக்கு ஏற்படும் தொல்லை 'வளைவு விரல் தொல்லை என்று சொல்லப்படும். இது எதனால் வருகிறது என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை. நீரிழிவு மற்றும் முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இந்தத் தொல்லை வர வாய்ப்பு அதிகம், விரல்களை அதிகமாக மற்றும் அழுத்தமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு இத்தொல்லை வரலாம். முதுமையில் இத்தொல்லை வர வாய்ப்பு அதிகம்.அறிகுறிகள்விரல்கள் சாதாரண நிலையில் இருக்கும் போது வலி ஏதுமிருக்காது. விரல்களை மடக்கி, நீட்டும் போது ஒருசில சத்தத்துடன் வலி ஏற்படும். தொடர் ஓய்வுக்குப் பிறகு விரலை நீட்டிமடக்கும்போது வலி ஏற்படலாம். உதாரணம்: இரவுக்குப் பின் காலையில் இந்த வலி வரலாம். இந்தத் தொல்லை வலது கைவிரல்களில் வந்தால், உணவு உண்ணச் சிரமமாக இருக்கும். முடிந்தால் ஸ்பூன் அல்லது இடது கையில் சாப்பிடலாம்.சிகிச்சை முறைவலி அதிகமாக இருப்பின் விரலுக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம்.இயன்முறைச் சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்கும்.தேவைப்படும்போது வலி நிவாரணியை எடுத்துக்கொள்ளலாம்.மேற்கண்ட வழிமுறைகளில் பலன் கிடைக்காவிட்டால், விரலின் அடிப்பாகத்தில் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். இந்த ஊசியைத் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் போட்டுக்கொள்ளக் கூடாது.ஊசி போட்டும் வலி குறையவில்லை என்றால் அறுவைசிகிச்சைமூலம்நல்லபலன் கிடைக்கும்.
ரத்தத்தில் உள்ள சுண்ணாம்புச் சத்து 8.8 mg/dl அளவுக்குக் குறைவாக இருந்தால், குறைவான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) என்று தெரிந்துகொள்ளலாம்.பயன்கள்இது பற்களையும் எலும்புகளையும் உறுதியாக வைக்க உதவுகிறது.. நரம்பு மற்றும் சதைகள் உறுதியாக இருக்க உதவுகிறது. இதயம் சரியாக இயங்க உதவுகிறது.ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை உறைய வைக்க உதவுகிறது.கால்சியம் குறைய என்ன காரணம்?பரம்பரையாக வரலாம்வைட்டமின் டி குறைபாடுதைராய்டு சுரப்பி அகற்றிய பின்னர்பாரா தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரத்தல் (Hypoparathyroidism)போதிய சூரிய ஒளி இல்லாமைசிறுநீரகச் செயலிழப்புமருந்துகள்: ஸ்டீராய்டு, குளோரோதின்அறிகுறிகள்வறட்சியான சருமம்கால்களிலும், முதுகிலும் சதைப் பிடித்தல்வறட்சியான நகங்கள்தலைமுடி கடினமாக இருத்தல்இதயம் செயலிழத்தல்மனக்குழப்பம்,மனச்சோர்வுவலிப்பு நோய்சிகிச்சைசுண்ணாம்புச் சத்து மாத்திரையை 1 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.வைட்டமின் டி குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.சூரிய ஒளியில் தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும் இருத்தல் அவசியம்.பால் அல்லது தயிரைத் தினமும் சற்று அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.பின்வரும் உணவு வகைகளை முடிந்தளவுக்கு உணவில் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சிறுதானியங்கள்கீரை வகைகள் (உதாரணம்: முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை)கறிவேப்பிலைகொட்டை வகைகள், உதாரணம்: பாதாம், முந்திரிமீன், நண்டு, இறால்
வயிறுஎன்பதுஇரைப்பை, சிறுகுடல், பெருங்குடல்,குடல்வால், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் சுரப்பி (ஆண்களுக்கு), கர்ப்பப்பை ஓவரிகள் (பெண்களுக்கு) ஆகிய பல உறுப்புகள் அடங்கிய ஒரு பகுதியாகும்.வயிற்று வலி வரக் காரணங்கள்.இரைப்யைப் புண், புற்றுநோய் கட்டி.சிறுகுடலில் ஏற்படும் புண், நோய்த்தொற்று.வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்.கல்லிரல் பாதிப்பு, உதாரணம்: காமாலை.பித்தப்பையில் கற்கள்.கணையத்தில் ஏற்படும் அழற்சி.சிறுநீரகத்தில்உள்ளகற்கள், கட்டி, நோய்த்தொற்று.சிறுநீர்ப்பையில் ஏற்படும் கட்டி, நோய்த்தொற்று.புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் நோய்த்தொற்று.கர்ப்பப்பையில் ஏற்படும் புண், கட்டி.மருந்துகளின் விளைவு / வலி நிவாரணி.உறுப்புகள் பாதிக்கப்பட்டதைப் பொறுத்து நோயின் தொல்லைகளும் மாறுபடும். உதாரணம்.இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு உணவு உண்டபின் வலி அதிகமாகும்.குடற்புண் உள்ளவர்களுக்குப் பசி எடுக்கும் போதெல்லாம் வயிற்றுவலி ஏற்படும்.சிறுகுடலில் நோய்த்தொற்று (உதாரணம்: காசநோய்) ஏற்பட்டால் பசி குறையும். எடையும் குறையும், லேசாக காய்ச்சல் இருக்கும், வயிறு சற்று வீங்கினாற்போல இருக்கும்.பித்தப்பையில் உள்ள கற்களின் விளைவாக வயிற்றின் வலது பக்கத்தில் (மேல் பகுதி) வலி இருக்கும். அது, வலது முதுகு வரையிலும் பரவலாம், வலி விட்டு விட்டும் வரலாம். சிறுநீரகத்தில் உள்ள கற்களினால் ஏற்படும் வலி. வலது அல்லது இடதுபுறம் வலி ஏற்படும், அது விட்டு விட்டும் வரும், வலி வயிற்றின் அடிப்பாகம் வரை இறங்கும்.வலி ஏற்பட்டால் சுயசிகிச்சை ஏதும் செய்யாமல், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை நாடி, தக்க சிகிச்சை பெற்று வயிற்று வலியின்றி நலமாக வாழ்வோம்.
கேட்டராக்ட் பிரச்னை உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனால் கேட்டராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாகக் கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை உணர்வது வழக்கம். எனவே பின்வருவனவற்றைக் கேட்டராக்டின் அறிகுறிகள் எனலாம்.பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.நிறங்களைப் பிரித்தறிவதில் சிரமம் இருப்பது மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவதுபொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவதுசில வெளிச்சங்கள் மிகக் குறைவாகவும். சில வெளிச்சங்கள் மிக அதிகமாகவும் தெரிவது.படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமம் ஏற்படுவது. குறிப்பாக இரவு நேரங்களில் படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அதிகமாகச் சிரமம் ஏற்படுவது.வெளிச்சத்தைச் சுற்றி வானவில் போலத் தெரிவது, குறிப்பாக வாகன வெளிச்சத்தை சுற்றி அவ்வாறு தெரியலாம்.நிறங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.
முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால் முதுமையில் பல நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாகின்றன.நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!ஆரம்பம் என்கிற ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு.முதுமை அடை வதற்கு என்ன காரணங்கள் என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னமும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடையப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். முன்னோர்கள் நீண்ட நாட்கள் வழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிர் அணுக்கள் குறைகின்றன.திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல். உயிரணுக்கள் பெருகி வரும் தன்மை.கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.ஃப்ரிரேடிகல்ஸ் என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல்.உடல்வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன் குறைதல். நமது மூளைப் பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லாச் சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்தத்திரவம் பெண் பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. இத்திரவம் உடலை அழித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அதனால், ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால், அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு,தலையிலுள்ள மூளைப் பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melotinin எனும் திரவத்தைச் சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால் முதுமை அப்போதே தொடங்க ஆரம்பித்து விடுகிறது.இவ்வுடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவதுஎன்றாலும்,முதுமைஅடைந்தவர்க்கெல்லாம் இம்மாற்றங்கள் ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும் .மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக அமைத்துக்கொண்டால் முதுமையிலும் இன்பம் காணலாம்.
உடற்பயிற்சி என்றால் கனமான பொருள்களை தூக்குவது, ஓடுவது, உட்கார்வது என்று நினைக்க வேண்டாம். வேகமான பயிற்சியும் அவசியமில்லை. நாற்காலியில் உட்கார்ந்தபடி கைகளை கால்களை அசைத்து இலேசான பயிற்சி செய்யலாம். நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.வாரத்துக்கு 150 நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும். வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் அருகில் இருக்கும் பூங்கா, கோவில் போன்ற இடங்களுக்கும் செல்லலாம். பயிற்சியின் போது அல்லது அவ்வபோது உடலில் சூரிய ஒளி பட வேண்டும். அப்பொதுதான் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் இருக்கும்.வயதான காலத்திலும் இனிப்புகளை அதிகம் விரும்புவது, கார சாரமான உணவை எடுத்துகொள்வது, துரித உணவுகளை விரும்பி உண்பது என எல்லாமே மோசமான பழக்கங்கள் தான். இனி நாக்குக்கு நீங்கள் அடிமை ஆக கூடாது.இந்தகாலத்தில்உங்களுக்குநோய்எதிர்ப்புசக்திகுறையக்கூடும்.அதைஈடுசெய்யும்வகையில்பழங்கள், காய்கறிகள், கீரைகள், கொட்டைகள் போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும். இது நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ் மற்றும்பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்கிறது. இது ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல மூலமாகும். இது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.ஆண்கள்புகைப்பழக்கம்மற்றும்மதுப்பழக்கத்தைகொண்டிருந்தால்கண்டிப்பாகதவிர்க்கவேண்டும்.பாக்கு, புகையிலை, வெற்றிலை என எல்லாமே வயதான காலத்தில் தவிர்க்க வேண்டியவையே.உடல் உறுப்புகள் வயதான காலத்தில் தங்களது பணியை மெதுவாக்கும். இந்த நேரத்தில் இதன் பாதிப்புகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். புகைப்பிடிப்பதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, பெருந்தமனி தடிப்பு, விறைப்புத்தன்மை தோல் நெகிழ்ச்சி உண்டாக்க கூடும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் இந்த பழக்கத்திலிருந்து வெளியேறியே தீர வேண்டும்.வருடம் ஒரு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். கண் மருத்துவரை சந்தித்து கண் கோளாறுகள் குறித்த பரிசோதனை செய்ய வேண்டும். காது கேட்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் காது மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். வயதான காலத்தில் தான் இந்த கோளாறுகள் அதிகரிக்க கூடும் என்பதால் இந்த பரிசோதனை அவசியம்.