கால்சியத்தின் பலன்
ரத்தத்தில் உள்ள சுண்ணாம்புச் சத்து 8.8 mg/dl அளவுக்குக் குறைவாக இருந்தால், குறைவான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) என்று தெரிந்துகொள்ளலாம்.
பயன்கள்
இது பற்களையும் எலும்புகளையும் உறுதியாக வைக்க உதவுகிறது.
. நரம்பு மற்றும் சதைகள் உறுதியாக இருக்க உதவுகிறது.
இதயம் சரியாக இயங்க உதவுகிறது.
ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை உறைய வைக்க உதவுகிறது.
கால்சியம் குறைய என்ன காரணம்?
பரம்பரையாக வரலாம்
வைட்டமின் டி குறைபாடு
தைராய்டு சுரப்பி அகற்றிய பின்னர்
பாரா தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரத்தல் (Hypoparathyroidism)
போதிய சூரிய ஒளி இல்லாமை
சிறுநீரகச் செயலிழப்பு
மருந்துகள்: ஸ்டீராய்டு, குளோரோதின்
அறிகுறிகள்
வறட்சியான சருமம்
கால்களிலும், முதுகிலும் சதைப் பிடித்தல்
வறட்சியான நகங்கள்
தலைமுடி கடினமாக இருத்தல்
இதயம் செயலிழத்தல்
மனக்குழப்பம்,மனச்சோர்வு
வலிப்பு நோய்
சிகிச்சை
சுண்ணாம்புச் சத்து மாத்திரையை 1 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூரிய ஒளியில் தினமும் காலையில் 30 நிமிடமும், மாலையில் 30 நிமிடமும் இருத்தல் அவசியம்.
பால் அல்லது தயிரைத் தினமும் சற்று அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்வரும் உணவு வகைகளை முடிந்தளவுக்கு உணவில் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுதானியங்கள்
கீரை வகைகள் (உதாரணம்: முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை)
கறிவேப்பிலை
கொட்டை வகைகள், உதாரணம்: பாதாம், முந்திரி
மீன், நண்டு, இறால்
0
Leave a Reply