பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நேற்று காலை பழைய பாளையம், சக்கராஜா கோட்டை, சிங்கராஜா கோட்டை, திருவனந்தபு ரம் ஆகிய நான்கு கோட்டை சாவடிகளில் இருந்து சாமை கதிர் கட்டுகளை ஊர்வலமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். வீட்டில் பூஜை செய்து உற வினர்கள் வீடுகளுக்கு சென்று ஒருவருக்கொருவர் சாமை கதிர்களை வழங்கி மகிழ்ந்தனர்
ராஜபாளையத்தில் ராஜூக்கள் சமூகம் சார்பில் விவசாயம் செழிக்கவும், உறவுகளுக்குள் எழுந் துள்ள பூசல்களை சரி செய்யவும், சொந்த பந்தங்களை நேரில் கண்டு மகிழ்ச்சியை பரிமாறவும் ''கொத்தலு' என்ற புதியல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் ஊர் நிர்வாகம் சார்பில் சாமை கதிர்கள் அறுவடை செய்து பொது இடத்தில் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.கதிர்களை வீட்டில் வைத்து பூஜித்த பின் மாவிளக்கு, கொழுக்கட்டை, பானகரம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு வழங்குவர். அதேபோல் ஒவ்வொருவரும் பூஜித்த கதிர்களை எடுத்துக் கொண்டு உற வினர் வீடுகளுக்கு சென்று வழங்கி உறவுகளை புதுப்பிப்பர்.
0
Leave a Reply