குறைந்த செலவில் மருந்தே இல்லாமல்,சங்கு ஊதுதல் துாக்கமின்மைக்கு தீர்வு தரும் .
சங்கு ஊதுவது உடல் நலனுக்கு நல்லது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தியஆய்வுஒன்றுதுாக்கமின்மை பிரச்னையைச் சரிசெய்ய சங்கு ஊதுதல் உதவும் என்கிறது. நமது வழிபாட்டில் முக்கியமான இடம் உள்ளது.ஓ எஸ் ஏ (Sbstructive sleep apnea - OSA) என்பது துாங்கும்போது ஏற்படும் பிரச்னைஉறக்கத்தின் போது சிலருக்குத் தொண்டை தசைகள், நாக்கு ஆகியவை ஓய்வுபெற்று மூச்சுப் பாதையை அடைத்துவிடும். இதனால் சரியாக மூச்சு விட முடியாது.
இதன் காரணமாக உடலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற் பட்டுத் தூக்கம் கெடும். இரவு துாங்காததால் பகலில் சோர்வு ஏற்பட்டு அன்றாடவாழ்க்கை பாதிக்கப் படும். இதைச் சரி செய் வதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.சமீபத்தில்ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த எடெர்னல் மையம் மற்றும் ஆய்வுகூடம் இது தொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
இந்த மையத்தின் ஆய்வாளர்கள் ஓஎஸ்ஏ பிரச்னை கொண்ட19 - 65 வயதுடைய 30 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் ஒருபகுதியினரைமூச்சுப் பயிற்சி செய்யச் சொன் னார்கள். மற்றொரு பகுதியினருக்கு தினமும் 15 நிமிடம் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து 6 மாதங்கள் சங்கு ஊதும் பயிற்சி செய்யச் சொன்னார்கள்.
பயிற்சி தொடங்கிய சில தினங்களிலேயே அவர்களின் பிரச்னை குறையத் துவங்கியது. இறுதியில் பகல்நேரச் சோர்வு 34 சதவீதம் குறைந்தது. இரவு துாக்கத்தில் ஏற்படும் தொல்லையும் சரியாகிவிட்டதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
சங்கை ஊதும் போது அதிக முயற்சி செய்து ஊத வேண்டும். அப்போது மூச்சுக்குழாய், தொண்டை ஆகிய பகு திகள் வலிமை அடை கின்றன. இது ஓஎஸ்ஏ பிரச்னைக்குத் தீர்வாக அமைகிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து.
0
Leave a Reply