1. ரசம் கொதிக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி கூடும். 2. சாம்பாரில் பூண்டு சேர்த்தால் வாசனை அதிகரிக்கும். 3. தோசை மாவு புளிக்காமல் இருந்தால், சிறிது புளி கலந்த தயிர் சேருங்கள். 4. உப்புமாவில் சிறிது இஞ்சி துருவி சேர்த்தால் செரிமானத்திற்கு உதவும். 5. பன்னீர் மென்மையாக இருக்க, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வடாம் மாவுடன் ஒரு கைப்பிடி உளுந்தை சேர்த்து அரைத்தால், வடாம் அதிக மொறுமொறுப்பாக இருக்கும் * மிளகாய்க்கு பதில், மிளகைப் பொடித்து சேர்த்து வடாம் பிழிந்தால், மாறுதலான சுவையோடு வடாம் மணக்கும். * வடாம் மாவில் ஓமத்தை பொடி செய்து சேர்த்து, 'புட் கலர்' ஏதாவது சேர்த்து, ஓமப்பொடி அச்சில் பிழிய வேண்டும். இதை மாலை நேர ஸ்நாக்ஸாக பொரித்து சாப்பிடலாம். * வடாம் மாவை முதல் நாள் இரவே கிளறி வைத்துக் கொண்டால், காலையில் உப்பு, காரம் சேர்த்துக் கிளறி, வெயிலுக்கு முன் வடாம் போட்டு முடித்து விடலாம் *இளம் நாரத்தை இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி வடாம் மாவில் சேர்த்துப் பிழிந்தால் மணமும், சுவையும் கூடும்.
இட்லி மாவு 2-3 நாள் கழிச்சா புளிச்சு சுவை மாறிடும்.இந்த ரகசியம்பின்பற்றினா, ப்ரிட்ஜ்இல்லாமே 10 நாளும் புது மாதிரி இருக்கும். முதல்ல அரைச்ச மாவுல உப்பு போடாதீங்க. சுத்தமான ஸ்டீல் அல்லது மண் பாத்திரத்தில் வைங்க. மேல் பக்கத்துல ஒரு சின்ன கப் தண்ணி ஊற்றுங்க - இது மாவு உலராம, புளிக்காம காப்பாத்தும். தினமும் காலை அந்த மேல் தண்ணி எடுத்து போட்டுட்டு, புதுசா தண்ணி ஊற்றணும். மாவு எடுத்துக்கொள்ளும் ஸ்பூன் நனைந்திருக்க கூடாது. இந்த முறையில் சேமிச்சா, 10 நாளும் மாவு புது சுவையோடு இருக்கும்.வெற்றிலையை இட்லி மாவில் குப்புறப் போட்டு வைத்தால் மாவு,புளிக்கவோ ,பொங்கி வழியவோ செய்யாது.
குக்கரில் மிகவும் முக்கியமானது என்றால் அது கேஸ்கட் தான்.அதனால், குக்கரில் சமையல் செய்த பின், 15 நிமிடங்கள் கழித்து (அதாவது 1/4 மணி நேரம்) கேஸ் கட்டைத் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.பின், கேஸ் கட்டை நன்றாகச் சுத்தம் செய்து தனியாக வைக்க வேண்டும்.குக்கரில் உள்ள ரப்பர் வளையம் நீண்ட நாட்கள் உழைக்க என்ன செய்ய வேண்டும்?.குக்கரில் சமையல் செய்து முடித்தப் பின், அதன் மேல் மூடியை திறந்து வைக்க வேண்டும்.பின். அதன் மேல் மிகக் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.குளிர்ந்த நீரை ஊற்றுவதால் குக்கரில் உள்ள ரப்பர் வளயத்தை நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியும்.
ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்ய மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும். வெண்டைக்காயை கொண்டு சாம்பாரும் பொரியலும் செய்வதை விட பக்கோடா தயாரித்தால் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள். வெண்டைக்காய்களை மெல்லிய வட்டங்களாக நறுக்கி கடலை மாவு, உப்பு, காரத்தூள், கரம் மசாலா, சிறிது கருவேப்பிலை சேர்த்து 2 ஸ்பூன் தயிர் கலந்து எண்ணெய்யில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்க சுவையான பக்கோடா தயார். ஒரு ஸ்பூன் மைதா மாவும், அரை கப் பாலும் சேர்த்து கலந்து ஆப்பம் செய்ய ருசியும் கூடும். மென்மையாகவும் இருக்கும். முள்ளங்கியை துருவி எடுத்து, கோதுமை மாவோடு கலந்து தேவைக்கேற்ப மிளகாய், உப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால், சுவையாக இருக்கும். காலிபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சூடான நீரில் போட்டு ஊறவைத்து எடுத்து வடிகட்டி ஒரு துண்டில் பரப்பி நிழலில் உலர்த்தினால், புழுக்கள் இருக்காது.
பழங்கள் காய்கள் வாங்கும் போது நல்ல சிவப்பு நிறமுள்ள தாக பார்த்து வாங்க வேண்டும்.சிவப்புநிறத்தில் தான் இருப்பு சத்து அதிகம் உள்ளது.பச்சை காய்கறிகள் வாடாமல் இருக்க,காய்கறிகளை ஒரு கூடையில் போட்டு ஈரத் துணியினால் மூடி வைக்க வேண்டும்.இதனால், 3 அல்லது 4 நாட்களுக்கு காய்கறிகள் வாடாமல் இருக்கும்.மழைக்காலங்களில் அரிசி பருப்பு டப்பாக்களில் வண்டுகள் பிடிக்கும். வண்டு, பூச்சிகளுக்கு காரமான வாசனை ஆகாது, பருப்பு அரிசி டப்பாக்களில் வண்டு வைக்கும். டப்பாக்களில் காய்ந்த மிளகாய் காம்பு இல்லாமல் அப்படியே போட்டு வைத்தால் மிளகாய் காரத்துக்கு வண்டுகள் வராது. பிரியாணி இலையை கூட போட்டு வைக்கலாம். பூண்டு பற்களை தோல் உரிக்காமல் அரிசி அல்லது பருப்பு டப்பாக்களில் புதைத்து வைப்பது நல்லது. பூண்டின் காரமான மணம் பூச்சிகளை விரட்டும் ாஆனால் பூண்டு ஈத்தன்மை உடையது. அவ்வப்போது மாற்ற வேண்டும் தீப்பெட்டியை போட்டு வைக்கலாம். அதிலுள்ள கந்தகம் பூச்சியை வரவிடாது. இவ்வளவு செலவு செய்து வாங்கிய மளிகை பொருட்களை இப்படி செய்து பாதுகாக்கலாம்.
முன் காலத்தில் அம்மா சுடும் ஆப்பத்தின் நறுமணம் தெருவிற்கு வாசம் வரும் இன்று ஆப்பத்தின் நறுமணம் குழந்தைகள் அறியாத அளவிற்கு மாறிவிட்டது.. காரணம் அப்போது தென்னை மரம் அல்லது பனை மரத்தின் கள் சேர்த்து செய்வார்கள்.இப்போது கிடைப்பதில்லை. அரிசியும் ருசியுடன் இருக்கும். அதனால் அப்போது உள்ள ஆப்பத்தின் சுவை இப்போது இல்லை. அதற்கு பதிலாக இப்போது ஆப்பத்தின் சுவையை ரொட்டி, கேக் செய்ய பயன்படுத்தும் ஈஸ்ட் கொடுக்கிறது. பச்சரிசி, புழுங்கல் அரிசி, வடித்த சாதம், தேங்காய் துருவலை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து கலந்து, அதனுடன் அரை ஸ்பூன் ஈஸ்ட் தண்ணீரில் சேர்த்து கரைத்து உப்பு சேர்த்து ஆப்ப மாவை தயார் செய்து, மறுநாள் காலை புளித்த பின் மாவின் வாசனை பிரமாதமாக இருக்கும். தேங்காய் பால், சென்னா மசாலா செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பீட்ரூட்டை பாலில் வேக வைத்து விட்டு, பிறகு மசித்து செய்தால் பீட்ரூட் அல்வா சுவையாக இருக்கும்.எவ்வளவு விலை உயர்ந்த பருத்தி துணி என்றாலும், சிறிதளவு நீரில் நனைக்கும் போது சுருங்கவே செய்யும். எனவே, பருத்தி துணிகளை வாங்கியதும் அதை தைக்கும் முன் தண்ணீரில் நனைத்தெடுத்து காய வைத்து, அதன்பின் தைத்தால், கடைசி வரையில் துணிகள் தைத்த அளவுடன் இருக்கும்.குழந்தைகள் பிறந்தவுடன் வாங்கும் சிறிய மெத்தைகள், நாளடைவில் பயனில்லாமல் போய் விடும். அவற்றை அப்படியே மடித்து தைத்து, ஒரு கவரும் போட்டு விட்டால், ரயில் பிராயணத்தின் போது எடுத்துச் செல்ல இலகுவான தலையணை தயார்.பொதுவாக கடைகளில் வெண்ணெய் வாங்கி வந்து காய்ச்சும் போது, நல்ல தண்ணீரில் வெண்ணெயை அரை மணி நேரம் போட்டு வைத்து, பின் காய்ச்சினால் சுத்தமாக இருப்பதுடன், நெய் மணமாக இருக்கும்.புழுங்கல் அரிசியை வறுத்து பொடியாக்கி, கூட்டு, பொரியலில் துாவினால் சுவையாக இருக்கும்.
சமையலுக்கு பயன்படுத்தும் பருப்பு வகைகள் அனைத்தையும் சிறிது நேரம் நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால் விரைவில் வெந்துவிடும். ஊறுகாய் பாட்டில்களில் பிளாஸ்டிக் மற்றும் மர ஸ்பூன்களை போட்டு வைத்தால் ஊறுகாய் நீண்ட நாட்களில் கெடாமல் இருக்கும்.முட்டைக்கோசை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து தயிரில் போட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொட்டுங்கள் கோஸ் தயிர் பச்சடி சுவையுடன் நன்றாக இருக்கும்.தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம்| போன்ற கலந்த சாதங்கள் செய்யும் போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்து| போட்டு கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.தேங்காயை உடைப்பதற்கு முன் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு உடைத்தால் தேங்காய் சரிபாதியாக உடையும்.