25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல் குறிப்பு

Dec 19, 2024

சமையலில் செய்யக்கூடாதவை.

 ரசம் அதிகமாக கொதிக்ககூடாது காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாதுதக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.பிரிட்ஜில் வாழைப்பழமும்,உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய் எண்ணெயோ நன்றாக காயக்கூடாது குழம்போ பொரியலோ  அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

Dec 18, 2024

பூரி மிருதுவாக இருக்க....

பூரி மாவு பிசையும் முன் கோதுமை மாவையும், ரவையும் சேரத்து மிதமான தீயில் வறுத்து கொள்ளுங்கள்.மாவில் அரிசி தண்ணீர் சேர்த்து பிசைந்தால் பூரி வெகுநேரம் மிருதுவாக இருக்கும்.பூரி மாவை பிசைந்த பின், அதில் ஒரு விரலை வைத்து அழுத்தி பார்த்தால் விரல் தடம் தெரிய வேண்டும்.விரல் மாவுக்குளே போய்விடக்கூடாது. விரலை வைத்து அழுத்தும் போது கடினமாக இருக்க கூடாது.

Dec 16, 2024

வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும் .

வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும். கண்ணு கரிக்காது. வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.கூட்டு, பொரியல், வறுவல் போன்றவற்றில் உப்பு அல்லது காரம் அதிகமாக சேர்த்து விட்டால் சிறிதளவு ரஸ்க் தூளை பொடித்து சேர்த்து பாருங்கள் உப்பு, காரத்தை அது ஈர்த்துக் கொண்டு விடும்.கத்திரிக்காய் எண்ணெய் கறி சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை  கலந்தால், பொரித்த பூரி அதிக நேரம் நமத்து போகாமல்  இருக்கும்.

Dec 02, 2024

உளுந்து வடை சுவையாகவும் மொறு மொறுப்பாகவும்  இருக்க….

உளுந்து வடை செய்யும் போது உளுத்தம் மாவு தளர்ந்து இருந்தால் சிறிதளவு பச்சரிசி மாவை அதில் தூவினால் உளுத்தமாவில் தேவைக்கு அதிகமாக உள்ள தண்ணீரை உறிஞ்சிவிடும். அல்லதுசோள மாவு (corn flour) சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும்.வடை செய்வதற்கு வெள்ளை உளுந்தை போடாமல் கருப்பு உளுந்து உடைச்ச உளுந்து போட்டால் அதோட சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்உடைத்த கருப்பு உளுந்தை ஊறவைத்து அதன் தோலை கழுவி எடுக்காமல் அப்படியே அரைத்து பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு கருவேப்பிலை சேர்த்து வடை செய்தால் வடை சுவையாகவும் மணமாகவும் கருப்பு உளுந்தின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.உளுந்து வடைக்கு அரைத்த மாவுடன் ஊறவைத்த பயத்தம் (பாசிப்) பருப்பைக் கலந்து வடை செய்தால் சுவையாகவும் மொறு மொறுப்பாகவும்  இருக்கும்.உளுந்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுவென்று இருக்கும். அதே போல் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால்  சிறிது அரிசிமாவினை   சேர்த்தால் கெட்டியாகிவிடும்.

Nov 26, 2024

ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்க.....

பால் லேசாகத்திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல்சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றவும். கெட்டித்தயிராகி விடும்.குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறை ஊற்றி மூடி வைத்து விட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்து விடும்.பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவைக்காமல், நன்கு ஆறிய சர்க்கரைப்பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.தேன்குழல், சீடை ஆகியவற்றைச்செய்யும் போது மாவை வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.

Nov 21, 2024

டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.ஒரு கப் நல்லெண்ணெய்யை சூடாக்கி, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து,மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது, புத்துணர்வும் கிடைக்கும். வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டுவைத்தால், வெண்ணெய் கையிலோ, பேப்பரிலோ ஒட்டாமல் வரும். மேலும் வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் ,அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால், நெய் வாசனையாக இருக்கும்.இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அரிசி யோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊற வைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.காய்கறி, பருப்பு, ரசம் இவற்றிற்கு அளவாக நீரைச்சேர்த்து கொதிக்கவிடவும். வெந்த பிறகு நீரை வடித்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும். அப்படி நீரை  வடித்தால் அந்த வடிநீரை குழம்பு, கூட்டு இவற்றில் சேர்த்து விடவும்.

Nov 11, 2024

. வெண்பொங்கல் காரமாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும்.

கூட்டு, குருமா, கிரேவி வகைகளில் தண்ணீர் அதிகமானால் பாலில் சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும். . வெண்பொங்கல் காரமாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும். சூப் செய்தாலும் சிறிதளவு பொட்டுக்கடலை மாவை தண்ணீரில் கரைத்து சூப்புடன் சேர்த்து செய்து பாருங்கள், சூப் கெட்டியாக, டேஸ்ட்டியாக இருக்கும். சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித் தால் மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும். அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியு டன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.

Nov 05, 2024

சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.கூட்டு, பொரியலுக்கு தேங்காய்ப்பூ இல்லையா! புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால், தேங்காய் சேர்ந்த சுவை கிடைக்கும்.தோசை மாவில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும். பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கிவிடும் அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது குழம்பும் ருசியாக இருக்கும்.சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

Nov 03, 2024

ஜாங்கிரி செய்யும்போது,....

ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறு மொறு வென்றிருக்கும். ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு ஊறவைத் துச் சாப்பிட்டுப் பாருங்களேன். சூப்பர் ருசி!தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.மாதுளம்பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட் களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.பருப்பு ரசம் நுரையுடன் பொங்கிவரும் போது கொத்தமல்லித்தழையை உடனே போடாமல் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, ஐந்து நிமிடம் தாமதித்து ரசத்தில் கிள்ளிப்போட்டால் மல்லி அதன் பசுமை மாறாமல் ரசம் கமகமவென்று வாசனையுடன் இருக்கும்.

Oct 31, 2024

பாயாசம் செய்யும் போது ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க ....

எந்த கிழங்கை வேக வைத்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்து, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும். சுண்டல் செய்யும் போது சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றை வறுத்து பின் பெருங்காயம், சுக்கு சேர்த்து பொடி செய்யவும். எந்த சுண்டல் செய்தாலும் இறக்குவதற்கு முன் இந்த பொடியை தூவிக் கிளறினால், வாயுக்கோளாறு, வயிறு உப்புசம்: ஏற்படாமல் நீங்கும். பருப்பு பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் சிறிது கொள்ளுப் பயரையும் சேர்த்து கொண்டால் பொடி மிகவும் சுவையாக இருக்கும் இது வாயுப் பிரச்சனையை தீர்ப்பதோடு கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. பாயாசம் செய்யும் போது ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க  வெறும் வாணலியில் நெய் சேர்த்து வறுத்தால் ஐவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். குருமா, தேங்காய்ச் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும் குருமாவில் தேங்காயின் அளவை குறைத்து, பாதாம் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும்.குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 13 14

AD's



More News