இட்லி உப்புமாவை தாளிக்கும்போது, இட்லிகளை, அரை மணி நேரம் முன்பே பிரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்து உப்புமா செய்தால் உதிரி உதிரியாக வரும்.பாகற்காயுடன் உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்து சமைத்தால் பாகற்காயில் கசப்பு தெரியாது.கத்திரிக்காய் கூட்டோ அல்லது பொரியலோ செய்யும்போது சிறிதளவு கடலை மாவைத்தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையும் மணமும் கூடும்.பருப்பு வடை செய்யும் போது சிறிதளவு இஞ்சித் துருவலை சேர்த் தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணிக்கும்.வெண்டைக்காய் முற்றி விடாமல் இருக்க காயின் மேல்பகுதி, அடிப்பகு தியை சிறிதளவு நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.
கேரட் சாதம் சுவையுடன் சத்து நிறைந்துள்ளதாகும். இதை நெய்யோடு சேர்த்து செய்வதால் சுவையும் ,சத்தும் கூடுதலாக கிடைக்கும். அரிசியை குக்கரில் வேகவைத்து ஆறவைத்து, கேரட்டை தோல் சீவி வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு ,உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து, துருவிய கேரட்டையும், உப்பு சேர்த்து அது மென்மையாக ஆகும் வரை மூடி வேகவைத்து, பிறகு ஆறிய சாதத்தை கேரட் கலவையுடன் சேர்த்து, மெதுவாக கிளறவும். உப்பு சரி" பார்க்கவும், சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து,கொத்தமல்லி இலையை தூவி கிளறினால் சுவையான, அருமையான கேரட் சாதம் சாப்பிட நன்றாக இருக்கும்.
பருப்பு குழம்பு இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.வெண்பொங்கலுக்கு நாலு பங்கு பச்சரிசிக்கு, ஒரு பங்கு பாசி பருப்பு என்ற அளவில் தண்ணீர் பங்கும் எடுத்துக் கொண்டால் பொங்கல் பதமாக இருக்கும். வெண்பொங்கலில் மிளகை ஒன்று இரண்டாக உடைத்துப் போட்டால் பொங்கலுடன் இணைந்து தனியாக எடுத்து வைக்க வேண்டி இருக்காது.சுவை அபாரமாக இருக்கும்.ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை எண்ணெயில் வறுத்து ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தேங்காய் சட்னியில் சேர்க்க சுவையும் மணமும் கூடும்..வத்தக் குழம்பு வைக்கும்போது இறுதியில் சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்...வத்தக் குழம்புசுவையாக இருக்கும்.
.மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான மோர் குழம்பு தயார். குழந்தைகளும் விரும்பி உண்ணும்.உணவுக்கு ஒரு நிறைவான சுவையையும், மென்மையான தன்மையையும் சேர்க்கும். சமையலின் முடிவில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.சோம்பு, புதினா, சின்ன வெங்காயம்,லவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து, வெஜிடபிள் பிரியாணிக்கு பட்டை, இலவங்கம் ஏலக்காய்,கல்பாசி தாளித்து அதனுடன் அரைத்த இந்த கலவையை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து செய்யும் போது வாசனை கூடுதலாக கிடைக்கும்.பழைய ஹாட் பாக்ஸ்... பழைய ஹாட் பாக்ஸை தூர எரியாமல் சப்பாத்தி மாவு பிசையவும், காய்கறிகளை கழுவி எடுத்து வைக்கவும் பயன்படுத்தலாம். அதனுடன் சிறிது கோக்கோ பிட் மற்றும் மண் கலந்து புதினா மற்றும் கொத்தமல்லி செடிகளை வளர்க்க பயன்படுத்தலாம். சாத்துக்குடி ஆரஞ்சு பழங்களை தோலுரித்து அதன் சுளைகளை கொட்டை நீக்கி, மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் போட்டு ஜூஸ் தயாரித்தால் கைகளால் பிழிவதை விட அதிக அளவில் ஜூஸ் கிடைக்கும்.
காலையில் வைத்த சாம்பார் மீதம் ஆகிவிட்டால்,மீண்டும் மாலையில் பயன்படுத்தும் போது சிறிது வெந்தயம் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி விதை இரண்டையும் வறுத்து பொடி செய்து குழம்பில் சேர்த்து கலந்தால் ஹோட்டல் சாம்பார் போல நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும். கொஞ்சம் மல்லித்தழை போட்டு இறக்கவும்..கடலை பருப்பை வேக வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த பருப்பில் நன்கு கலந்து, பின்னர் தாளித்து சாப்பிட்டால், மிகவும் நன்றாக இருக்கும்புளித்த தயிரை வீணாக்காமல், ஒரு டம்ளர் தயிருக்கு, ஒரு டம்ளர் ரவை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்துமல்லி இவற்றை சேர்த்து. ஐந்து நிமிடம் ஊற வைத்து, வடை போல் தட்டி எண்ணெயில் சுட்டு, சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்கேழ்வரகு மாவுடன், எள்ளும், சிறிது வெல்லமும் சேர்த்து, அடை செய்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு, இது நல்ல பலனை தரும்.இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது பொட்டுக்கடலை தேங்காய் சிறிது வறுத்த வேர்க்கடலை இரண்டு பல் பூண்டு உப்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
பருப்பு குழம்புக்கு சிறிது சுக்கு பொடி சேர்த்தால் வாசனை மிகுந்திருக்கும். ரவா உப்புமாவிற்கு சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் மென்மையாக வரும். பருப்பு வகைகளை நன்கு ஊறவைத்தால் மட்டுமே செரி மானம் சுலபமாகும். புளியை நீரில் ஊறவைக்கும் போது உப்பு போடாதீர்கள். அது கசப்பை அதிகமாக்கும். உளுத்தம் பருப்பை ஊறப் போட்டு அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து வைத்து மறுநாள் காலை தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.
* கேரட் அல்வா செய்யும்போது நெய் குறைந்தால், போதுமான அளவில் பால் சேர்க்கவும். மென்மையாக வரும்.imagesrot *வெஜ் புலவு செய்யும்போது சிறிதளவு புதினா இலை சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும். *வெண்டைக்காய் குழம்பு செய்யும் போது, வெண்டைக்காயை சிறிது உப்புடன் வதக்கி சேர்த்தால் ஒட்டாது. * பன்னீர் புரூஜி செய்யும் போது, இறுதியில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் பஞ்சுப் போல் மென்மையாக வரும். நெய் சாதம் சுவையாக இருக்க சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து தூவவும்.
ஆப்பம் மாவில் சிறிது வெல்லம் அரைத்து கலக்கினால் மென்மையாகவும், இனிப்பு சுவையாக வும் இருக்கும். இறால் குழம்பு ருசிக்க, இறாலை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து பிறகு குழம்பில் போடுங்கள். சூடான சூப் செய்யும் போது கொஞ்சம் வெண்ணெய் விட்டு பரிமாறினால் வாசனை கூடி வரும். பழங்கள் அடங்கிய பாயசத்தில் எப்போதும் பழங்களை இறுதியில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் கரைந்து விடும். இடியாப்பம் செய்யும் போது, பச்சரிசி மாவை மட்டும் அல்ல சிறிது புழுங்கல் அரிசி மாவும் கலக்கவும்.
பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல்செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல்" சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.பஜ்ஜி உப்பி வர சமையல் சோடா சேர்க்காமல் கொஞ்சம் இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் உப்பி வரும்.ஆப்பம் ஸ்பாஞ்ச் போல் வருவதற்கு ஒரு ஸ்பூன் மைதா மாவு ,அரை கப் பால் சேர்த்து கலந்து ஆப்பம் செய்ய ருசியும் கூடும் மெத்தென்றும் இருக்கும்.தேங்காய் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி,பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் கடலை மாவையும் சேர்த்து பிசைந்து சுட்டால் ருசியாக இருக்கும்.
உருளைக்கிழங்கை மணலில் வைத்தால் சீக்கிரமாக கெட்டுப்போகாது. கடலை மாவு, அரிசி மாவு இல்லாவிட்டால் கோதுமை மாவிலும் சுவையான பஜ்ஜி செய்யலாம்.பருப்புப்பொடி தயாரிக்கும் போது இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் ,மணமாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.குருமாசெய்யும்போதுவெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு,கசகசாபெருஞ்சீரகம், முந்திரியுடன், கல்பாசி, ஏலக்காய், சிறிதளவு தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் சேர்த்து வதக்கி மிக்ஸியில் அரைத்து செய்யும் குருமா தனி ருசியுடன் மணமாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.மசால் வடை செய்யும்போது மாவில் அரைமணி நேரம் ஊறிய ஜவ்வரிசி 4 ஸ்பூன், பாசிப்பருப்பு 3 ஸ்பூன் கலந்து வடை செய்தால், மொறுவலாகவும், சுவையாகவும் இருக்கும்.ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால், ரசத்தின் சுவை கூடும்.