25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல் குறிப்பு

Aug 06, 2024

நான்கு, ஐந்து பேரிச்சம் பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி, நெய்யில் வதக்கி பாயாசத்தில் சேர்த்தால், பாயாசத்தின் சுவை அமிர்தம் போல இருக்கும்.

நான்கு, ஐந்து பேரிச்சம் பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி, நெய்யில் வதக்கி பாயாசத்தில் சேர்த்தால், பாயாசத்தின் சுவை அமிர்தம் போல இருக்கும்.ரவையை நெய்விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரை பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும் , ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய் யலாம்.ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருக்கும் காம்பு கிள்ளிய பச்சை மிளகாயில் கொஞ்சம் மஞ்சள் தூளை தூவி வைத்தால், நீண்ட நாட்களுக்கு பழுத்துபோகாமல் இருக்கும்.வத்தல் குழம்பு செய்யும் போது அவரை, கத்தரிக்காய், கொத்தவரங்காய் வத்தல் ஆகியவற்றை 15 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும் மற்றும் சுவையும் அதிகரிக்கும்.

Aug 04, 2024

வேர்க்கடலை சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது  பொட்டுக்கடலையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தக்காளிசாதம்செய்யும்போதுசிறிதுபச்சைமிளகாய், தக்காளி, இஞ்சிஅரைத்துஊற்றினால்தக்காளிசாதமவாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.சாம்பாருக்கு துவரம் பருப்பை வேக வைக்கையில் சிறிதளவு வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும் வேர்க்கடலை சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது  பொட்டுக்கடலையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.எலுமிச்சம் பழத்தை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்னர் எடுத்து பிழிந்தால் எலுமிச்சை சாறு  கொஞ்சம் அதிகமாக கிடைக்கும்.வெண்டைக்காயை துணியால் சுற்றி அதனை பாலிதீன் கவரில் வைத்து குளிர்பதனப் பெட்டியில்வைத்தால்  நீண்ட நாட்களுக்குக் கெடாது.

May 28, 2024

 பன்னீர் பட்டர் மசாலா போட்டுகிரேவியில் உப்பு அதிகமானால்

 பன்னீர் பட்டர் மசாலா போட்டுகிரேவியில் உப்பு அதிகமானால் வேகவைத்தஉருளைக்கிழங்குடன் சிறிதளவு பிரெஷ் கிரீமை சேர்க்க, சுவை கூடும். உப்புத் தன்மையும் குறைந்துவிடும்.கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவி அல்லது குழம்பில் தண்ணீர் சேர்க்க வேண்டி இருந்தால் சூடான நீரை சேர்க்கவும். சுவை மாறாமல் இருக்கும். சைடு டிஷ்க்கு வெள்ளை நிற கிரேவி தயாரிக்க முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றை மசாலாவுடன் சேர்த்து அரைத்து கிரேவி செய்யலாம். நெய் சேர்த்து கிரேவிசெய்வதற்கு பதிலாக வெண்ணை சேர்த்து செய்தால் மணமும் சுவையும் வேறலெவல்.நார்த் இந்தியன் கிரேவி செய்யும்போது. புட் கலர் சேர்க்காமல் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி செய்தால், கிரேவி சிவப்பு நிறமாக வரும். இறக்கி விடும் முன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் சுவை ஜோராக இருக்கும்.

May 27, 2024

பழுத்த தக்காளியை வெட்டும் போது.....

கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமெனில் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும்.பழுத்த தக்காளியை ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு வெட்டுங்கள். பழம் பிய்ந்து போகாது.காய்கறி மீது எலுமிச்சை பழச்சாறு கலந்த நீரை தெளித்தால் காய்கறி பச்சையாக இருக்கும்.இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.தக்காளி, எலுமிச்சம்பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

May 23, 2024

கறிவேப்பிலை காயாமல் இருக்க...

கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும்.வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில்போட்டுவைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேகவைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும்.வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.பூண்டை அவ்வப்போது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து விடும்.பலகாரம் செய்த பிறகு மீதமாகும்  எண்ணெய்யில் வாழைக்காய், கருணைக்கிழங்கு வறுவல்  செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

May 21, 2024

சர்க்கரைப் பொங்கல் சுவையாகஇருக்க...

சப்பாத்தி செய்து எண்ணெய்வடிகட்டியில் போட்டு மூடிவைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாகஇருக்கும்.தேங்காய்த் துருவல்மீதியானால் அதை லேசாக வதக்கி, சிறிது உப்பு சேர்த்து வைத்தால், மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். கேசரி, பால்கோவா, தேங்காய்பர்பி ,போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

May 20, 2024

காய்கறிகள் எளிதில் வேக....

தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்.மீதமான தேங்காய் சட்னியைகெட்டியான புளிப்பு மோரிலசேர்ந்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர் குழம்பு தயார். கொள்ளு, காராமணி வேக வைத்த நீரை கீழே கொட்டாமல் சூப் செய்ய பயன்படுத்தலாம்.சத்தாக இருக்கும்.தோசைக் கல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறு மொறுப்பாக வரும்.வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.

May 19, 2024

இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவையாக இருக்க..

இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை குப்புற இருப்பது போல போடவும். இரண்டுநாட்கள் கெடாமலும், காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் புளிக்காமலும் இருக்கும்இட்லி தோசை மாவு அரைத்தால் இனி அதில் இதை சேர்க்க மறக்காதீர்கள். மாவு அரைக்கும் போது அதில் வெண்டைக்காய் சேர்த்து அரைக்கலாம். அப்படி அரைக்கும் போது மாவு பஞ்சு போன்று மிருதுவான பதத்தில் இருக்சப்பாத்தி மாவு பிசைந்து அதனை1/2 மணி நேரத்திற்கு மேல் ஊறவிடவும். அதன் பின் சப்பாத்தி சுட்டு பாருங்கள் சப்பாத்தி நன்றாக இருக்கும் ,அதேபோல் மாவு பிசையும் போது அதில் வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து பாரத்தால் மிருதுவாகஇருக்கும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.

May 01, 2024

எலுமிச்சை ,தேங்காய் ,புளி ,தக்காளி சாத வகைகள் செய்யும் முன் .....

பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது பச்சையாக உணவில் சேரத்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட்  நீண்ட நாட்கள்  கெடாமல் இருக்கும். வாழைக்காய் மற்றும்வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென பால் ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொறு மொறுவென இருக்கும்.எலுமிச்சை,தேங்காய்,புளி,தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

Apr 29, 2024

முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க....

உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

1 2 ... 5 6 7 8 9 10 11 12 13 14

AD's



More News