இட்லி உப்புமா உதிரி உதிரியாக வர....
இட்லி உப்புமாவை தாளிக்கும்போது, இட்லிகளை, அரை மணி நேரம் முன்பே பிரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்து உப்புமா செய்தால் உதிரி உதிரியாக வரும்.
பாகற்காயுடன் உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்து சமைத்தால் பாகற்காயில் கசப்பு தெரியாது.
கத்திரிக்காய் கூட்டோ அல்லது பொரியலோ செய்யும்போது சிறிதளவு கடலை மாவைத்தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையும் மணமும் கூடும்.
பருப்பு வடை செய்யும் போது சிறிதளவு இஞ்சித் துருவலை சேர்த் தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணிக்கும்.
வெண்டைக்காய் முற்றி விடாமல் இருக்க காயின் மேல்பகுதி, அடிப்பகு தியை சிறிதளவு நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.
0
Leave a Reply