ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்.தன்னிடம் உள்ள தவற்றை ஒத்துக்கொள்ளாமல் சூழ்நிலைகள் மீதோ அல்லது அடுத்தவர்கள் மீதோ பழி போடுபவர்களை இப்படி கூறலாம்.
“சிரைத் தேடின் ஏரைத் தேடு”“களை பிடுங்காத பயிர் கால் பயிர்”“அடர விதைத்துச் சிதறப் பிடுங்கு”“உழுகிற நாளில் ஊருக்குப் போனால்அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை”ஆகிய பழமொழிகள் வேளாண்மைத் தொழில் நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றன.கிராமப்புற மனிதனின் எல்லாச் செயல்களிலும் அவன் பெறும் அனுபவங்களே அவனுடைய வாழ்க்கையைச் சிராக்க வழிவகை செய்கிறது. மனித வாழ்வோடு பிரிக்கவொண்ணா நிலையைப் பழமொழிகள் பெற்றுள்ளன.கொங்கு நாட்டு வேளாண்மை தொடர்பான பழமொழிகளையும், அப்பழமொழிகள் கிராமப்புற விவசாயிகள் வாழ்வில் பெற்றுள்ள சிறப்பிடத்தையும் ஆராய்ந்ததன் மூலம் கொங்குநாட்டு மக்களின் வாழ்க்கை முறையினைச் சிறப்பாக அறிய முடிந்தது உண்மை.
ஊருக்குன்னா இரும்ப கூட இடிப்பேன், ஊட்டுக்குன்னா தவுடு கூட இடிக்கமாட்டேன்.ஒரு சிலர் இருக்கிறார்கள். மற்றவர்களுடைய நன் மதிப்பைப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஊருக்காக ஓடி ஓடி உழைப்பார்கள். ஆனால், வீட்டில் உள்ளவர்களின் தேவைகளைக் கடைக்கண்ணால் கூடப் பார்க்க விரும்பவும் மாட்டார்கள். இவர்கள் மனக்குரல்தான் இந்தப் பழமொழி.
கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சி.ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத புத்தி கோணிய ஒருவன்(கோணையன்) கிழித்த ஒரு துணி கோமணமாகப் பயன்படுத்த உதவியது.அப்படியென்றால் 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பது போல ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைக்கப் படுபவர்களால் கூட நன்மை இருக்கும்.
“சிறு பிள்ளை இட்ட வெள்ளாமைவீடு வந்து சேராது”,“இஞ்சி இலாபம் மஞ்சளிலே”“உழுதவன் கணக்குப் பார்த்தால்உழக்கால் தடியுங்கூட மிஞ்சாது”
நொல்லயன் கொல்லில அள்ளாதவன் பாக்கி.நொல்லயன் என்றால் கண் தெரியாதவன் என்பது நமக்குத் தெரியும். அவன் கொல்லியில் (அதாவது கொல்லை என்பதை கொல்லி என்கிறார்கள். வயக்காடு என்றும் கூறுவார்கள்.) பயிரிட்டால் அவைகளை மற்றவர்கள் கண்டிப்பாக அபகரிக்கத்தான் பார்ப்பார்கள். ஏனென்றால் அவனுக்குத்தான் கண் தெரியாதே! ஒருவரும் பாக்கி இல்லாமல் அவனை ஏமாற்ற நினைப்பார்கள். நாமும் கண் தெரியாதவர்களைப் போன்று வெகுளியாக இருந்தால் அனைவரும் நம்மை ஏமாற்றதான் முயல்வார்கள்
“காட்டு வேளாண்மையையும்வயிற்றுப் பிள்ளையையும்எப்படி மறைக்கிறது?”என்ற பழமொழி மூலம் சமுதாய மக்களிடம் சாதாரணமாக இவ்வொப்பீடு நடைமுறையில் வழங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது.சிறிய வயதில் அனுபவமற்ற முறையில் பிள்ளைகள் செய்யும் காரியம் முழுப்பயனைத் தருவதில்லை
செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம்.ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது.
“இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?”என்று கேட்டுச் சமாதனம் அடைகின்ற நிலையை இப்பழமொழி மூலம் அறியலாம்.இடுகின்ற விதைகளெல்லாம் நல்ல பயிராக வளர்ந்து பயன்தருவதில்லை. அதுபோல் தான் பெற்ற பிள்ளைகளெல்லாம் பெற்றோர் கடமையைச் செய்வார்களென்ற நிலையைக் காண்பது அரிது என்பதே இதன் பொருளாகும்.
‘வெக்கம் வேணாங்குது, விருப்பம் கொண்டாங்குது ’ .ஒரு வீட்டிற்கு செல்கிறோம். அவர்கள் நமக்குச் சாப்பிட ஒரு பலகாரம் கொடுக்கிறார்கள். ஆனால், நாம் அதனை வாங்கி சாப்பிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று வாங்க மறுத்துவிடுகிறோம். ஆனால், நமது மனதிற்குள் அதைச் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு விருப்பம் இருக்கும். அதுதான் 'வெக்கம் வேண்டாம் என்கிறது, விருப்பம் கொண்டுவா என்கிறது' என்பதின் அர்த்தம்.