25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பழமொழி.

Jun 17, 2026

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு---ஒற்றுமையே பலம்.  அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறிய---உத்தம நட்பு

Jun 10, 2026

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் .

 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - இளமையிற் செய் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - நம்பிக்கை காக்கும்.

Jun 03, 2026

உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் .

உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் - உலோபங் கூடாது. எடுக்கிறது பிச்சை ,ஏறுவது பல்லாக்கு - வீண் பெருமை

May 27, 2026

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை.

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை---திருப்திப்படாத மனம். இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை----தருமஞ் செய்.

May 20, 2026

ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்

ஆழம் அறியாமல் காலை விடாதே---ஆராய்ந்து செய். ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்---காலம் மாறி வரும் .

May 13, 2026

 அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.---விடா முயற்சி.  அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி –முன்மாதிரி .

May 06, 2026

முன்னோர்கள் சாப்பிடும் போது பேசுகின்ற பழமொழிகள் -2

சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும். அகப்பை அறுசுவை அறியுமா. அண்டை வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே. அசைந்து திங்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

Apr 29, 2026

முன்னோர்கள் சாப்பிடும் போது பேசுகின்ற பழமொழிகள்.

பிச்சை எடுத்துதாம் பெருமாளு அத்த புடுங்கிச்சாம் அனுமாரு. குடலு கூழுக்கு அழுததாம், கொண்டை, பூவுக்கு அழுததாம்.. குடிப்பது கூழாம், கொப்பளிப்பது பன்னீராம்.. ஊசி போல தொண்டையாம், பானை போல வயிறாம்.

Apr 22, 2026

வயசு வைக்கோலா போகுதாம், கிழவி கிண்ணரம் வாசிக்குதாம்.

கிண்ணரம் என்பது ஒரு இசைக்கருவி. இசைக்கருவி வாசிக்கும் அளவுக்கு உடல் வலிமை உள்ள கிழவி,பற்றிய பழமொழி இது. அதாவது சில வயதானவர்கள், அறுத்து அடித்து வைத்த நெற்கதிர்கள் வைக்கோலாக மாறுவதுபோல, எவ்வளவுதான் முதுமை அடைந்தாலும் வலிமை குறையாது, தாங்களே உழைத்து, ஓடி ஆடி வேலை செய்து சாப்பிடுவார்கள். அவர்களை இவ்வாறு கூறலாம்.

Apr 15, 2026

பறவைகள் பற்றிய பழமொழிகள் -2

. வௌவால் வீட்டிற்கு விருந்திற்கு போனால் தலைகீழாகத்தான் தொங்கணும். . ஒரு குருவி இரையெடுத்தால் ஒன்பது குருவி வாய் திறக்கும். . குருவி தலைமீது பறக்கிறது என்பதற்காக தலையில் கூடுகட்ட அனுமதிக்கலாமா.  கடல் வற்றும் கருவாடு தின்னலாம் என்று காத்திருந்து உடல் வற்றி செத்ததாம் கொக்கு.  கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் காலை தூக்கிகிட்டு ஆடிச்சாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News